வசீகர தோற்றத்திற்கு 3டி ஃபிரேம்கள்!! (மகளிர் பக்கம்)
கம்ப்யூட்டர், மொபைல் போன்… இது இல்லாமல் நம்மால் இருக்க முடியாத நிலையில் இருக்கிறோம். விளைவு எல்லோருக்கும் கண் பார்வையில் ஏதாவது ஒரு சிறு பிரச்னை ஏற்பட ஆரம்பித்துள்ளது. கூட்டத்தில், கண்ணாடி போட்டவர்கள் தனித்துத் தெரியும் காலங்களைக் கடந்து கண்ணாடி அணியாமல் இருப்பவர்கள்தான் இப்போது தனித்து தெரிகிறார்கள். அப்படி கண்ணாடி அணியாதவர்கள் கூட லென்ஸ் அணிந்து கொள்ளும் காலமிது. இப்படி எல்லாரும் கண்ணாடிக்கு அடிமையாகிவிட்டதால், அதில் பல டிசைன்கள் வந்துள்ளன. குறிப்பாக இளைய தலைமுறையினர் ஸ்டைலிஷாக அணியக்கூடிய ஃபிரேம்கள் தற்போது மார்க்கெட்டில் நிலவி வருகிறது.
இதன் லேட்டஸ்ட் டெக்னாலஜி நம்முடைய முகத்தின் அமைப்பிற்கு ஏற்ப கண்ணாடியினை பெர்ஃபெக்ட்டாக தேர்வு செய்து தருகின்றனர் ஆசிஃப், முகமது சகோதரர்கள். இவர்களின் இமேஜ் ஆப்டிகல் கோ விஷன் நிறுவனம், ZEISS VISUFIT 1000 டெக்னாலஜி 3டி முறையினை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் அவரவர் முகத்திற்கு ஏற்ற கண்ணாடியினை தேர்வு செய்யலாம். பார்வைத் தொடர்பான பிரச்சனைகள் பரவலாகிவிட்டது. அது இயல்பு என்ற நிலைக்கும் மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். பொதுவாக நாற்பது வயதினை கடந்தவர்கள் தான் கண்ணாடி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
ஆனால், தற்போது சிறுவர்கள் கூட கண்ணாடி அணியும் நிலை உருவாகியுள்ளது. ஒரு பக்கம் கண்களில் ஏற்படும் பிரச்னைக்காக கண்ணாடி அணிந்தாலும் அதையே ஸ்டைலிஷாக அணிய விரும்புகிறார்கள். அதற்கு நாம் அணியும் லென்ஸ் மற்றும் கண்ணாடி ஃபிரேம்கள் மிகவும் அவசியம். 1988ல் தொடங்கப்பட்ட, இமேஜ் ஆப்டிகல் கோ விஷன் தென்னிந்தியா முழுவதும் உள்ள பல மருத்துவமனைகள் மற்றும் ஆப்டிகல் மையங்களுக்கு கண்ணாடிகளை சப்ளை செய்து வருகிறது. வாடிக்கையாளரின் தேவையை அறிந்து அதற்கு ஏற்ற லென்ஸ் மற்றும் கண் ஃபிரேம்களை கடந்த 35 வருடமாக வழங்கி வருகிறது.
ஒரு நல்ல பார்வைக்கு சரியான லென்ஸ்கள் தேவை. லென்ஸ்கள் ஃபிரேமிலும், கண்கள் தொடர்பாகவும் சரியாக மையமாக இருப்பதும் முக்கியம். ஒருவரின் பார்வைத் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அவர்களின் முக அமைப்பிற்கு ஏற்ற கண்ணாடிகளை அணிவது அவசியம். அவ்வாறு அணியும் போது அவர்கள் அணியும் கண்ணாடியே ஒரு வித ஸ்டைல் லுக்கினை அளிக்கும்.அதன் அடிப்படையில் அமைக்கப்பட்டது தாஜ் 3டி விஷன் கொண்ட ZEISS VISUFIT 1000 என்னும் கருவி. ஒன்பது கேமராக்கள் மற்றும் 45 மில்லியன் புள்ளிகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் முக அமைப்பினை 180 டிகிரி அளவில் 3டி முறையில் காட்சிப்படுத்தும். அதன் பிறகு ஒருவரின் முக அமைப்பில் உள்ள கண், கண்மணி மற்றும் விழித்திரை அனைத்தையும் கணக்கிட்டு முகத்திற்கான ஃபிரேம்களை வடிவமைக்கும். அதை அவர்களுக்கு புகைப்படமாக எடுத்துக்காட்டும்.
ஒரு வேளை அந்த ஃபிரேம் அவர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேறு ஃபிரேம்களை தேர்வு செய்யலாம். பொதுவாக நாம் கண்ணாடி தேர்வு செய்யும் போது குறைந்தபட்சம் 20 ஃபிரேம்களை அணிந்து பார்த்து அதன் பிறகுதான் அதில் எது பெஸ்ட் என்று தேர்வு செய்வோம். ஆனால் விசுஃபிட் அந்த வேலையினை அதுவே செய்து நமக்கான கண்ணாடி ஃபிரேம்களை தேர்வு ெசய்கிறது. இதனால் நாம் அதிக நேரம் ஃபிரேம்களை தேர்வு செய்ய செலவழிக்க அவசியமில்லை. துல்லியமாக நம்முடைய முகத்தின் அமைப்பினை கணக்கிட்டு வடிவமைக்கப்படுவதால், நாம் கண்ணாடி அணிந்திருக்கிறோம் என்ற உணர்வே இருக்காது. எல்லாவற்றையும் விட நம்முடைய முகத்திற்கு ஒரு புதிய அவதாரத்தினை அமைத்து தருகிறது.