கணவனுடன் தாம்பத்தியத்தில் ஈடுபட பாடம் எடுத்த மாமனார், மாமியார் – உண்மை கதை..!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:10 Minute, 32 Second

டெல்லியை சேர்ந்த சாதாரண பெண். என் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறேன். வெறும் 15 மாத திருமண வாழ்க்கையிலேயே என் கணவர் என்னை விவாகரத்து செய்ய முடிவு செய்துவிட்டார்.

இதற்கு காரணம், எனக்கு பத்து வருடங்களுக்கு முன் (2007) டி.பி இருந்தது. அதை வெறும் ஆறே மாதத்தில் முற்றிலுமாக குணம் செய்துவிட்டோம் என்பதற்கான மருத்துவ சான்றும் என்னிடம் இருக்கிறது.

எனது மாமனார், மாமியார், என் பெற்றோரிடம் விவாகரத்து பெறவில்லை எனில், எனது டி.பி மெடிக்கல் ரிப்போர்ட்டை அனைத்து உறவினர்களுக்கும் நகல் எடுத்து அனுப்பிவிடுவோம் என எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.
இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவெனில், இது குறித்து எனது கணவர் எனக்கு ஆதரவாக ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நிச்சயித்த திருமணம்!
எனது கணவரின் செயலுக்காக நான் ஒருபோதும் வருந்த போவதில்லை. ஏனெனில், எங்களுடையது நிச்சயித்த திருமணம். மேலும், என் கணவரை பிரிய எனக்கான சொந்த காரணங்களும் இருக்கின்றன. இந்த 15 மாத திருமண வாழ்வில் நான் ஒருநாளும் சந்தோஷமாக இருந்ததில்லை. காதல் என்பது எனக்கு மிக முக்கியமாகப்பட்டது. அது ஒருவரை ஒருவர் மதிக்க உதவும் என நான் கருதினேன்.

முழுநிறைவு!
நாங்கள் இருவருமே இந்த திருமணத்தில் முழு நிறைவு பெறவில்லை. ஆரம்பத்தில், எங்களுக்கான தேவையை நானும் உணரவில்லை, அவரும் உணரும் படி எதுவும் செய்யவில்லை. ஆனால், சில நாட்கள் கழித்து, என் கணவர் அவரது மொத்த குடும்பத்தின் முன்னும் என்னை குற்றம்சாட்ட ஆரம்பித்தார்.
எங்களது தாம்பத்திய வாழ்க்கையை அவரது பெற்றோருடன் விவாதிக்க ஆரம்பித்தார். “அது ஏன் இவ்வளவு வலிக்கிறது…” என பெற்றோரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

எப்படி மதிப்பது…
கணவன் – மனைவிக்குள் நான்கு சுவர்களுக்குள் நடக்கும் அந்தரங்கத்தை வீட்டாருடன் விவாதம் செய்த நபரை அதற்கு பின் எப்படி மதிப்பது?. என்னிடம் மாமனார், எங்கள் உடலுறவு குறித்து கேள்வி எழுப்பினார். “எந்த நிலையில் உடலுறவு கொள்கிறீர்கள்” என.
மேலும், எந்த மாதிரி ஆயில் பயன்படுத்த வேண்டும், இந்த நிலையில் உடலுறவில் ஈடுபடுங்கள் என ஒரு நிலையை என் முன்னே காண்பித்தார். அன்றே நான் மிகுந்த வெறுப்படைந்தேன்.

தப்பித்துவிட வேண்டும்…
அந்த செயலுக்கு பிறகு, எப்போது இந்த உறவில் இருந்து தப்பிப்பேன் என காத்திருந்தேன். அதன் பிறகு யாருடனும் உறவில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வு எனக்கு ஏற்படவில்லை. அதன் பிறகு, எங்கள் வீட்டில் இது ஒரு விவாத பொருளாக மாறியது. அன்றாடம் இதுகுறித்து பேசிக் கொண்டே இருப்பார்கள். அதும் என்னிடம் நேரடியாக இப்போது எப்படி இருக்கிறது, ஏதேனும் முன்னேற்றம் இருக்கிறதா என…

அவமானம்!
எனது அந்தரங்க வாழ்க்கை குறித்து வேறு நபர்கள் விவாதம் நடத்துவது, விமர்சனம் செய்வது எனக்கு அவமானத்தை ஏற்படுத்தியது. ஆயினும், எனது திருமண வாழ்க்கையை நான் பாதுகாக்க வேண்டும். இதனால் எனது பெற்றோருக்கு வலியை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. இந்த ஒற்றை காரணத்திற்காக பல முறை அவர்கள் செய்யும் அவமானத்தை ஏற்றுக் கொண்டேன்.

மாத்திரைகள்…
மாமனார் நிறைய நிலைகள் கற்றுக் கொடுத்தார், என்னை சௌகரியமாக உணர செய்ய ஏதேதோ கூறினார். பிறகு கணவரின் வலிமையை அதிகரிக்க மாத்திரைகள் கொடுத்தார். இன்னும் என்னென்ன நடக்கும் என தெரியாமல் நான் விழிபிதுங்கி போனேன்.

ஒவ்வொரு காலையும் எனது மாமியார் என்னிடம் “எத்தனை முறை சென்றது” என கேட்பார். இன்னும் சில சமயம் எப்படியான நிலையில் உறவுக் கொண்டீர்கள் என்றும் கேட்பார்.

மருத்துவர்…
எனக்கு மன அழுத்தம் அதிகரிக்க துவங்கியது. ஒரு மனநல மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றேன். எனது கணவரையும் என்னுடன் அழைத்தேன். அவர் “உனக்கென்ன பைத்தியமா?” என கூறிவிட்டார். எனக்கு அந்த வீட்டின் சூழலே பிடிக்கவில்லை. அவர்கள் அதிகம் சண்டையிட்டுக் கொள்வார்கள்.

கணவருக்கு கோபம்…
இது குறித்து எனது கணவரிடம் விவாதித்தேன். அவர் என் மீது கோபித்துக் கொண்டு, அது உண்மை இல்லை என கூறி சென்றுவிட்டார். ஒரு முறை எனது மாமியார் அது குறித்து கூறும் போது ரெகார்ட் செய்து வைத்துக் கொண்டேன். ஆனால், இது பற்றி வீட்டில் விவாதம் நடத்த எனக்கு தைரியம் இல்லை.
இந்த வீட்டில் எல்லாம் அசாதாரணமாகவே நடந்தது. இந்த வீட்டுடன் அட்ஜஸ்ட் செய்து கொண்டு செல்வது என்பது முடியாத காரியம்.

வேலையில் கெட்டி…
இது எனது சொந்த வாழ்க்கை நான். ஆனால், எனது வேலை சார்ந்த வாழ்க்கையில் நான் பேரார்வம் கொண்ட பெண், எனக்கான நிறைய கனவுகள் இருக்கிறது. கல்லூரி காலங்களில் நான் தங்கப்பதக்கம் வாங்கியுள்ளேன். என் கனவுகளை அடைய வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
எனது கனவு பயணத்தை துவக்க எனக்கு பணமும் தேவையில்லை. ஆறு லட்சம் வரை என்னிடம் சேமிப்பு இருக்கிறது. இதையும் என கணவர் குடும்பத்தார் திருப்பி தருகிறேன் என வாங்கிக் கொண்டனர். இதுநாள் அவரை தரவில்லை.

என் கணவர் கம்பெனி…
என் கணவரின் கம்பெனிக்கு ஆர்டர்கள் பிடிக்க நான் செல்ல வேண்டும் என மாமனார், மாமியார் கூறனர்.எல்லா மீட்டிங்கிற்கும் நான் செல்ல வேண்டும், கணவரை விட, நான் ஆர்டர்களை பெறுவேன் என அவர்கள் கூறினார்கள்.
ஓர் முறை ஆர்டர் பிடிக்க சென்ற போது, வேறு கம்பெனியை சேர்ந்த ஆண், என்னிடம் சில்மிஷம் செய்ய முயற்சித்தான். நான் இது குறித்து எனது கணவரிடம் கூறினேன். அதற்கு அவர் கார்பரேட் என்றால் அப்படி தான் இருக்கும். நீ ஆர்டர் பிடிப்பதில் மட்டும் கவனம் செலுத்து என கூறினார்.

இது என்னை மிகுந்த மன வேதனைக்கு ஆளாக்கியது. அவர் எந்த ரியாக்ஷனும் தரவில்லை. அன்று தான் முடிவு செய்தேன்., இனிமேல் இவருடன் வாழ்ந்து பிரயோசனம் இல்லை. பிரிந்துவிடுவது தான் சரி என.

இரண்டாம் திருமணம்!
எனது கணவர் வீட்டாரிடம் தான் எனது மெடிக்கல் ரிப்போர்ட் இன்னும் இருக்கிறது. அவர்கள் ஏற்கனவே இரண்டாம் திருமணத்திற்கு பெண் பார்க்க துவங்கிவிட்டனர்.
எங்களுக்கு விவாகரத்து கிடைக்க இன்னும் ஆறு மாதம் இருக்கிறது. எனது மெடிக்கல் ரிப்போர்ட்டை அந்த பெண் வீட்டாரிடம் காண்பித்து தான், தங்கள் மகன் ஒன்றும் அறியாத குழந்தை என பாவனை காட்டி பெண் பார்த்து வருகிறார்கள்.

லக்கி!
எப்படியோ நான் எனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டேன். இப்போது இலகுவாக உணர்கிறேன். மிகவும் தைரியமாக இருக்கிறேன். எனக்கான சிறந்த வேலை இருக்கிறது. புது புது விஷயங்கள் கற்கிறேன். இது போக, ஞாயிறுகளில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கிறேன்.

எனக்கு இப்போது வயது 27. மீண்டும் திருமணம் செய்துக் கொள்ள எனக்கு எந்த ஐடியாவும் இல்லை. என்ன, இந்த சமூகம் அவ்வப்போது என்னை அசௌகரியமான சூழலுக்கு உட்படுத்தும். என் தாய் சில சமயம் அவர்கள் பெண் கேட்கிறார்கள், இவர்கள் ஓகேவா என கேட்பார். கொஞ்சம் மன அழுத்தம் இருந்தாலும். பரவாயில்லை. என்னால் என் வாழ்க்கையை சமாளித்துக் கொள்ள முடியும்.

இந்நாள் வரையும் என் எக்ஸ் கணவரை பற்றி ஒரு
வார்த்தை கூட தவறாக கூறியதில்லை. எங்கள் வீட்டில் என்னை அப்படி தான் வளர்த்தார்கள்.
முடியாத என்ற வாழ்க்கையை இறுக்கபிடித்து சாவதை காட்டிலும், விட்டுவிட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மங்குஸ்தான் பழத்தின் நன்மைகள்! (மருத்துவம்)
Next post ஆண்கள் இங்கெல்லாம் தொட்டா பெண்களுக்கு உணர்ச்சி அதிகமாகிடுமாம்..!! (அவ்வப்போது கிளாமர்)