‘மஞ்சள்’ மகிமை! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 32 Second

மஞ்சளின் மகிமையை நமது முன்னோர்கள் அறிந்து நமக்கு வழிகாட்டி உள்ளனர். உடலுக்கு மஞ்சள் தரும் பலன்கள் எத்தனை எத்தனை என்பதை அளவிட முடியாது. சமையலில் பருப்பு, காய்கறி வகைகளை வேகவைக்கும் போது மஞ்சள் தூள் சேர்ப்பதின் நோக்கமே வயிற்றில் புண் வராமல் காக்கவும், உடல் உறுப்புகளுக்கு எந்த வித தீமையும் வராமல் தடுக்கத்தான்.தை மாதத்தில் கிடைக்கும் மஞ்சள் கிழங்கை உரசி, பூசி குளிக்கும் போது அதன் மணமும், குணமும் சொல்லில் அடங்காது. எந்த ஒரு மங்கல நிகழ்ச்சிக்கும் முதலிடம் தரப்படுவது மஞ்சளுக்கே. மங்கல பூஜைகளில் முதலில் மஞ்சளை பிள்ளையாராக பிடித்து வைப்பார்கள். தொடர்ந்து அட்சதைப் பொருளிலும், ஆலம் கரைத்து சுற்றவும் மஞ்சள் சேர்க்கப்படுகிறது. அம்மன் வழிபாட்டிலும் முதலிடம் மஞ்சளுக்குத்தான்.மஞ்சளில் விரலி மஞ்சள், கறி மஞ்சள், குண்டு மஞ்சள், கஸ்தூரி மஞ்சள் என பலவகைகள் உள்ளன. அதைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பயன்கள் ஒன்றுதான்.கஸ்தூரி மஞ்சள், பாசிப்பயறு சேர்த்து அரைத்த மாவில் தயிர் அல்லது பால் விட்டுக் குழைத்து பூசி குளித்து வந்தால் சருமம் பளபளவென்று அழகு கூடும்.மஞ்சளை உடைத்துப் போட்டு, அதோடு தனியாவையும் சேர்த்து காய்ச்சிய தண்ணீரைக் குடிப்பதால் அஜீரணம், வயிற்றுப் போக்கு உடனே குணமாகும்.மஞ்சள் தூளோடு, அரிசி மாவையும் தண்ணீரில் கலந்து விளக்கெண்ணெய் சேர்த்து கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால் கட்டி உடைந்து குணமாகும்.சிறு மஞ்சள் துண்டு ஒன்றை வேப்ப எண்ணெயில் தோய்த்து, நெருப்பில் எரிய வைத்து புகையை முகர்ந்தால் தலைவலி நீங்கும்.*கொப்புளங்கள் மீது மஞ்சள் தூள், தேன் கலந்து தடவினால் கொப்புளம் வடிந்து, குணமாகி விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post விருப்பம் போல் முடியினை நீளமாக்கலாம்… அடர்த்தியாக்கலாம்! (மகளிர் பக்கம்)
Next post சுரைக்காய் கோஃப்தா!! (மருத்துவம்)