மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்.. மில்லியன் வியூவ்ஸ்.. லட்சங்களில் வருமானம்! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 1 Second

பெல் பட்டனை அமுக்குங்க.. லைக் பண்ணுங்க.. சப்ஸ்க்ரைப் பண்ணுங்க.. இது தெரியாதவுங்க சோஷியல் மீடியாக்களில் இருக்கவே முடியாது. ஒரு போன் இருந்தால் போதும். அட நீங்களும் ஒரு யு டியூப்பர்ஸ்தான். பலரும் இதில் 18 வயதிலே யு டியூப் சேனல் ஆரம்பிச்சு அசால்டா சம்பாதிக்க ஆரம்பிச்சுருக்காங்க. அதுவும் இன்றைய இளம் தலைமுறை எல்லாத்தையும் கன்டென்டாக்கி காசாக்க களமிறங்க ஆரம்பிச்சுட்டாங்க.

இதில் கபுள் விலாக்கர்ஸ்.. ஃ புட் விலாக்கர்ஸ்.. ட்ரோல் விலாக்கர்ஸ்.. கண்டதையெல்லாம் கன்டென்ட் ஆக்கும் விலாக்கர்ஸ்னு பலரும் யுடியூப் தளத்தை கலக்கிட்டு வர்றாங்க. காமெடியா நினைச்சு இவுங்களைப் பார்க்காதீங்க. ரிச்சஸ்ட் யு டியூப்பர்ஸ்களும் இதில் இருக்கிறார்கள். இவர்கள் நடத்தும் விலாக்கில் நுழைந்தால், மில்லியனைத் தாண்டிய வியூவ்ஸ்.. மில்லியனைத் தாண்டி சப்ஸ்க்ரைபர்ஸ்.. ஆயிரத்திற்கு மேற்பட்ட வீடியோக்கள் அப்லோடாகி இருக்கும்.

‘சோசியல் பிளேடு வெப்சைட்’ டிற்கள் நுழைந்து இவர்களைத் துலாவினால் இவர்களுக்கு வருமானம் டாலர்களில் இருக்கும். இவர்களின் டாலர்களைக் குறைத்துக் கணக்கிட்டாலே வருமானம் அரை லட்சங்களைத் தாண்டுகிறது. மில்லியன் சப்ஸ்க்ரைபர்களைத் தாண்டி முதல் ஐந்து இடங்களில் இருக்கின்ற பெண் யு டியூப் ஃபுட் விலாக்கர்ஸ் குறித்து பார்க்கலாம்.

5வது இடத்தில் ‘மை கன்ட்ரி ஃபுட்ஸ்’ (My country foods)

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பக்கத்தில் கெழுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி.  2017ல் தொடங்கி இன்றுவரை வெற்றிகரமாக இந்தச் சேனலை நடத்தி வருகிறார்.சிறுமியாக இருந்தபோது தனது அம்மா வயல் வேலைக்கு சென்று, வாங்கி வரும் கூலியில், மறு நாள் சமையலுக்குத் தேவையானதை வாங்கி அம்மா வீட்டுக்கு வருவதற்குள்ளேயே நான் சமைத்து முடித்துவிடுவேன் என தன்னைப் பற்றிக் குறிப்பிட்டு, எனக்கு தெரிந்த பாரம்பரிய உணவு முறைகள் மற்றும் கிராமத்து உணவுகளை கிராமிய மண் மனம் மாறாமல், இயற்கையோடு இணைந்து செய்து வெளியிட்டு வருகிறேன் என்கிறார் இவர்.

‘மை கன்ட்ரி ஃபுட்ஸ்’ யு டியூப் சேனலுக்கு கடந்த சில நாட்களாக 6 மில்லியனுக்கு அதிகமான வியூவ்ஸ் கிடைத்திருப்பதுடன்,  1.88  மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்களுடன், ஆனந்தி தனது ஊர் மக்களையும், உறவுகளையும் இணைத்துக் கொண்டு 1740க்கும் மேற்பட்ட வீடியோவை அப்லோட் செய்திருக்கிறார்.

4வது இடம் ஷெரின்ஸ் கிச்சன் (Sherin’s Kitchen)

கோயம்புத்தூரைச் சேர்ந்த ஷெரின் என்பவர் 2017ல் இருந்து இந்த சேனலை தொடங்கி நடத்தி வருகிறார். இதுவரை 1163 வீடியோக்களை அப்லோட் செய்துள்ளார். கடந்த மாதத்தில் இவரின் யுடியூப் தளத்திற்கு 6 மில்லியனுக்கு அதிகமான வியூவ்ஸ் கிடைத்திருப்பதுடன், 2.65 சப்ஸ்க்ரைபர்ஸ் இவருக்கு இருக்கின்றனர்.

3வது இடம் ‘கவிதா சமையலறை’ (Kavitha Samayalarai)

கவிதா சுவாமிநாதன் என்பவரின் யு டியூப் சேனல் இது. பார்வையாளர்கள் பயன் பெறும் வகையில், தனது கைபக்குவத்தில் தயாராகும் உணவுகளை, பாரம்பரிய முறையில், சைவ, அசைவ உணவுகளாக செய்து காட்டி வீடியோக்களாக பதிவேற்றுகிறார்.சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இந்திய சமையல் ரெசிபிக்களில் என் அனுபவம் மற்றும் யோசனைகளை எனது பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சியோடு பகிர்ந்து வருகிறேன் என்கிற கவிதா, 2017ல் இருந்து இந்த சேனலை தொடங்கி வெற்றிகரமாக நடத்துகிறார். இவரது சேனலுக்கு கடந்த மாதத்தில் 7 மில்லியனுக்கு அதிகமான வியூவர்ஸ் மற்றும் 1.69 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்கள் இருப்பதுடன், இதுவரை 661 வீடியோக்கள் வரை பதிவேற்றியுள்ளார்.

2வது இடத்தில் இந்தியன் ரெசிபிஸ் தமிழ் (Indian Recipes Tamil)

சமையலில் அதீத ஆர்வம் கொண்ட அபி 2017ல் தொடங்கி இந்த யு டியூப் சேனலை  நடத்தி வருகிறார். இவரது பக்கத்தில் 1462க்கும் மேற்பட்ட வீடியோக்கள்  பதிவேற்றப்பட்டுள்ளது. 19 மில்லியனுக்கு அதிகமான வியூஸ்களுடன், 3.71 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இவருக்கு இருக்கிறார்கள். முதலிடத்தில் இருக்கும் சேனலைவிட இவரின் சேனலுக்கு அதிகமான வியூவர்ஸ் இருக்கிறார்கள் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.

முதலிடம் மெட்ராஸ் சமையல் (Madras Samayal)

உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களின் ஃபேவரைட் ஃபுட் ரெஸிபி சேனல் இது. 2015ல் தொடங்கி இந்த சேனலை நடத்தி வருபவர் ஸ்டெஃபி. நாகர்கோவிலைப்  பிறப்பிடமாகக் கொண்ட ஸ்டெஃபி தற்போது வசிப்பது அமெரிக்காவில்.தமிழ் யு டியூப் ஃபுட் விலாக்கர்ஸ் சேனலில் முதலிடத்தில் இருக்கும் ஸ்டெஃபி 661க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளார். இந்த சேனலுக்கு 17 மில்லியனுக்கு அதிகமான வியூவ் கிடைப்பதுடன், இவருக்கு 5.59 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செக்ஸ் பிரச்சனைகளை பற்றி தம்பதிகள் மருத்துவர்களிடம் கூறுவது எப்படி?..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பெண் சாதனையாளர்களை உருவாக்குவேன்!! (மகளிர் பக்கம்)