40+ தம்பதிகளுக்கான 18+ டிப்ஸ்..!! (அவ்வப்போது கிளாமர்)
எந்த வயதில் ஈடுபட்டாலும் செக்ஸ், செக்ஸ் தான். இந்த வயதில் தான் ஈடுபட வேண்டும், இந்த வயதில் ஈடுபட கூடாது என்றில்லை. ஒவ்வொரு வயது நிலையிலும் செக்ஸ் ஒவ்வொரு வகையில் தேவைப்படும் கருவியாக இருக்கும்.
இருபதுகளில் ஈர்ப்பு, கவர்ச்சி என்ற முகம் கொண்டிருக்கும். நடுவயதில் உறவில் இணைப்பை, ஒரு இலகுவான நிலையை உண்டாக்கும் கருவியாக இருக்கும். முதுமையில் வெகு சிலருக்கு மட்டுமே தேவைப்படும் உத்வேகமாக கூட இருக்கலாம்.
ஆனால், எல்லா நிலையிலும் செக்ஸ்-ல் ஒரே மாதிரியான செயல்பாடோ, இன்பமோ கிடைக்குமா? என்றால் இல்லை என்பது தான் நிதர்சனம். ஒரு கட்டத்தில் இச்சை என்பதை தாண்டி செக்ஸ் ஒரு அன்பின் வெளிப்பாடாக மாறும்.
இது உடலளவில் தரும் மகிழ்ச்சியை காட்டிலும், மனதளவில் பெரும் மகிழ்ச்சியளிக்கும்.
கீகள் பயிற்சி (kegel Exercise)!
கீகள் பயிற்சி என்பது இடுப்பு பகுதியின் வலிமையை அதிகரிக்கும், இது உடலுறவு திறனை ஊக்குவிக்க உதவும். சமநிலை தரையில் படுத்துக் கொண்டு, சிறிதளவு கால்களை மடக்கி அகல விரித்து மலம் அல்லது வாயு வெளியேறும் போது அடக்குவது போல செய்ய வேண்டும்.
இதை பத்து நிமிடம் வரை செய்து வந்தால் இடுப்பு பகுதி வலிமை அடையும். இது ஆண், பெண் இருவரும் உடலுறவில் சிறந்து விளங்க உதவும் பயிற்சி ஆகும்.
பிக்னிக்!
பிக்னிக்!
குழந்தைகளை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு, நீங்கள் மட்டும் ஜோடியாக ஒரு சின்ன ட்ரிப் சென்று வாருங்கள். இது நினைவுகளை உருவாக்கவும், மன அழுத்தம் குறையவும் உதவும். மேலும், தம்பதிகள் இலகுவாக உணர, தாம்பத்தியத்தில் ஈடுபட நல்ல சூழலை உருவாக்கும்.
ஹார்மோன் பரிசோதனை!
மாதவிடாய் நிற்கும் காலம் வரும் முன்னர் Perimenopause எனும் நிலை வரும். இது பெண்களுக்கு 35 வயதுக்கு மேல் வரும். இந்த காலத்தில் ஹார்மோன் லெவல் சமநிலையில் தாக்கம் உண்டாகலாம், எனவே, இதுப்பற்றி கவனமாக இருக்க வேண்டும். மருத்துவரிடன் சென்று பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில், ஹார்மோன் சமநிலை தான் தாம்பத்திய உணர்சிகள் சரியாக இருக்க உதவும் கருவி.
உதவி கேட்க வேண்டும்!
நடுவயதில் நீங்கள் உங்களை பரமாரித்துக் கொள்வது மட்டுமின்றி, உங்கள் குழந்தைகள், உங்கள் பெற்றோரையும் பராமரிக்க வேண்டிய கடமைகள் இருக்கும். சில சமயங்களில் உங்களுக்கே ஓய்வு தேவைப்படும். ஆனால், அதை யாரிடமும் கேட்காமல், நீங்கள் பம்பரமாக சுற்றிக் கொண்டே இருந்தால், உங்கள் ஆசைகள் தான் கானலாகி போகும்.
எனவே, எந்த ஒரு செயலில் உங்களுக்கு உதவி தேவையானாலும், அதை கேட்பதில் தயக்கம் காட்ட வேண்டாம். பெற்றோர், குழந்தைகள் மீது அக்கறை எடுத்துக் கொள்ளும் அதே அளவில் உங்கள் ஆரோக்கியத்தின் மீதும் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.
மருத்துவ பரிசோதனை!
ஒருவேளை நாற்பது நெருங்கும் முன்னரே உங்கள் தாம்பத்திய வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் உண்டானால், தயக்கம் காட்டாமல் மகப்பேறு மருத்துவரரை அணுகுங்கள். 35 வயதிற்கு மேல் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் சில பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு, இதற்கு தகுந்த பரிசோதனை, சிகிச்சைகள் மேற்கொண்டால், நல்ல தீர்வுக் காண முடியும்.
துணையின் விருப்பம்!
இளம் வயதில் அவரவர் விருப்பம் அல்லது எப்போதும் போல ஒரே மாதிரியான தாம்பத்திய உறவில் நீங்கள் ஈடுபட்டிருக்கலாம். நாற்பதுக்கு மேல் உடல் இணைதல் என்பதை தாண்டி தாம்பத்தியம் வேறு வகையில் பயணிக்கும். எனவே, உங்கள் துணைக்கு என்ன வேண்டும், அவரது விருப்பம் என்ன என்பதை கேட்டு அதன்படி தாம்பத்தியத்தில் ஈடுபடுதலே சிறந்தது.