கைவைத்தியங்கள் 4!! (மருத்துவம்)
தலைவலி
தலைவலி, சளி உட்பட பல்வேறு காரணங்களால் வரக்கூடும். ஒற்றைத் தலைவலிக்கும் பல காரணங்கள் உள்ளன. தற்காலிகமான நிவாரணத்துக்கு ஓர் எளிய கைவைத்தியம் உள்ளது. ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
சளி, இருமல் & காய்ச்சல்
சளி தொடக்க நிலையில் இருக்கும்போது நீலகிரித் தைலம் அல்லது விக்ஸ் போன்ற கை மருந்துகளைக் கொண்டு ஆவி பிடித்தாலே போதுமானது. நீலகிரித் தைலத்தை நெற்றி, மார்பு, முதுகு, தொண்டை ஆகிய பகுதிகளில் அழுத்தித் தேய்த்துக்கும்போது சருமத்தின் வழியாக ஊடுருவி உடலில் உள்ள நஞ்சை முறித்து நிவாரணம் தரும். சளிக் காய்ச்சல் இருந்தால் வெந்நீரைக் குடிப்பது, கஞ்சி, ரசம் சோறு போன்ற நீராகாரங்களைப் பருகுவது, நெற்றியில் ஈரத்துணியால் பத்துபோட்டு உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது ஆகியவற்றைச் செய்தாலே போதுமானது. மூக்கில் சளி ஒழுகுவது நின்ற பிறகு, தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். தூதுவளை லேகியம் அல்லது தூதுவளை பொரியல், ரசம் ஆகியவை சாப்பிட இருமல் கட்டுக்குள் வரும்.
வறட்டு இருமல்
எலுமிச்சம் பழச்சாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும். தூதுவளை லேகியமும் வறட்டு இருமலுக்கு மிகவும் ஏற்றது.
தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை வலி
தொண்டை கரகரப்புக்கு சளி, தட்ப வெப்ப மாறுபாடு, புகையிலைப் பழக்கம் எனப் பல காரணங்கள் உள்ளன. வெந்நீரில் உப்பிட்டு அந்த நீர் தொண்டைப் பகுதியில் படும்படி வாய் கொப்பளித்தாலே தொண்டைக் கரகரப்பு கட்டுப்படும். தொண்டை வலிக்கும் இந்தக் கைவைத்தியம் உதவும். தொடர் கரகரப்பு இருந்தால், சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும். தொண்டை வலிக்கும் சுக்கு, மிளகு, திப்பிலி நல்ல கூட்டணி. எடுத்தவுடன் ஆன்டிபயாட்டிக் சாப்பிட்டு உடலைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...