நலம் தரும் நாட்டு வைத்தியங்கள் 7!! (மருத்துவம்)
1. சீரகம்: சீரகத்துடன் நல்லெண்ணெய் கலந்து காய்ச்சி, தலைக்குக் குளித்துவர சோர்வு, மயக்கம், கண்நோய், தலைவலி, மந்தம் தீரும். சீரகத்தைப் பொடித்து தினமும் காலை, இரவு சாப்பிட்டுவர, வயிற்று உபாதைகள், அஜீரணம், வயிற்றுப் புண் குணமாகும். உயர் ரத்த அழுத்தம் கட்டுப்படும். சீரகத்தை நீரில் போட்டு கொதிக்கவைத்து, வடிகட்டி நீரை அருந்திவர செரிமானக் கோளாறுகள் நீங்கும்.
2.சுக்கு : சுக்கை வாயில் இட்டு மெல்ல பல்வலி தீரும்; அரைத்துப் பற்றுபோட தலைவலி தீரும்.
* சுக்கை வெந்நீரில் அரைத்து பற்று போட மூட்டுவலி வீக்கம் குறையும்.
* சுக்கை பொடித்து அரை சிட்டிகை பாலில் கலந்து சாப்பிட, நன்கு பசி உண்டாகும்.
3.ஓமம் : ஒரு ஸ்பூன் ஓமத்தை வெந்நீரில் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டி நீரை அருந்த, வயிற்றுவலி, வயிற்றுவலி அஜீரணம் தீரும்.ஓமப் பொடியை வெந்நீரில் கலந்து சாப்பிட்டால், வயிற்று மந்தம், வாயுத் தொல்லை நீங்கும்.
4.சாதிக்காய்: சாதிக்காயைப் பொடித்து நீரில் கொதிக்கவைத்து, வடிகட்டி நீரை அருந்த, குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் வயிற்றுபோக்குத் தீரும்.
சாதிக்காயைப் பொடித்து தினமும் ஒரு வேளை தேனில் சாப்பிட்டுவர, ஆண்மைப் பெருகும், விந்து கெட்டிப்படும்.
5.எள் : எள்ளை அரைத்து நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட, குருதி மூலம் நீங்கும்.
எள்ளை உணவில் சேர்த்துத் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் எடை கூடும். வலு அதிகரிக்கும்.
எள் எண்ணெயைக் கோழிமுட்டையின் வெள்ளைப்பகுதியுடன் கலந்து, பருக்கள், கட்டிகள் மீது பூச, கட்டிகளின் வலி நீங்கும். கட்டிகள் மறையும்.
எள்ளுப் பிண்ணாக்கைத் தினம் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர சர்க்கரை நோய் கட்டுப்படும்.
6.மிளகு : தலையில் புழுவெட்டு உள்ளவர்கள், மிளகுதூளுடன் சிறிது வெங்காயச்சாறு, உப்புக் கலந்து பூசிவர நல்ல பலன் கிடைக்கும். பாதிக்கப்பட்ட இடத்தில் முடி முளைக்கும். மிளகுப் பொடியையும் சோம்புப் பொடியையும் சம விகிதத்தில் எடுத்துகொண்டு சிறிது தேனில் கலந்து சாப்பிட மூலநோய் நீங்கும்.
7.ஆமணக்கு எண்ணெய் : கண் நோய்களுக்கு ஆமணக்கு எண்ணெய் நல்ல தீர்வு. உணவில் ஆமணக்கு எண்ணெய் சேர்த்துவந்தால், பார்வைத்திறன் மேம்படும். கண்கள் பலமாகும். சருமத்தைப் பாதுகாத்து, மலசிக்கல், மலகட்டைப் போக்கும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...