உடல் எடையை குறைக்கும் கறிவேப்பிலை!!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 51 Second

சமையலில் சேர்க்கும் கறிவேப்பிலை பல மருத்துவ குணங்கள் கொண்டது.

*கறிவேப்பிலை உடல் எடையை குறைக்க உதவும். தினமும் பல் துலக்கிய பின் வெறும் வயிற்றில் சிறிது கறிவேப்பிலை உருண்டையை சாப்பிட்டுவர உடலில் உள்ள கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

*சளியால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் கறிவேப்பிலையை துவையலாக அரைத்து உண்ண சளித் தொல்லை குறையும்.

*கறிவேப்பிலையில் ஆன்டி ஆக்சிடென்ட் அதிகம் உள்ளதால், புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

*நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவைக் குறைப்பதிலும் கறிவேப்பிலை பெரும் பங்கு வகிக்கிறது.

*கண்பார்வை பிரச்சனையை சரியாக்கி, பார்வை தெளிவிற்கு பெரிதும் உதவுகிறது.

*தலைமுடி கருப்பாக கறிவேப்பிலை, மருதாணி, கரிசலாங்கண்ணி அரைத்து அடையாக தட்டி, காய வைத்து, எண்ணெயில் போட்டு, அந்த எண்ணெயை தலையில் தேய்த்து வர முடி வளர்ச்சி அதிகரிக்கும். இளநரை மறையும். உடல் உஷ்ணம் குறையும்.

*பித்தத்தால் ஏற்படும் மயக்கம், வாந்தியை கட்டுப்படுத்தி உடலை சமநிலைப்படுத்தும்.

*கறிவேப்பிலையை அப்படியே உணவில் சேர்ப்பதைவிட, பொடியாக்கி சமையலின் போது சேர்க்க அதன் முழுபலனும் கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அரிவாள் ஆட்டம்!! (மகளிர் பக்கம்)
Next post சந்தனமும் மருந்தாகும்!! (மருத்துவம்)