சிறுநீரகக் கல் கரைய…!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 16 Second

சிறுநீரகத்தில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாவதுதான் சிறுநீரக கல் என்று சொல்லப்படுகிறது. இந்த கற்கள் சிறுநீர் பாதை வழியாக வரும்போது, அடைப்பை ஏற்படுத்தி தீவிரமான வலியை உண்டாக்குகிறது.

அறிகுறிகள்

முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப் பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில்  ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரகத்தில் கல் இருக்கலாம். இந்த கல் 5 மல்லிமீட்டரை விட சிறியது எனில் சிறுநீரிலேயே வெளியேறிவிடும். 8மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது செயலிழந்துவிடும்.

வீட்டு வைத்தியம்

தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடைக்காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது இளநீர் குடிப்பது நலம்.
பார்லியை நன்கு  வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம்.  அகத்திக் கீரையுடன் உப்பு சீரகம் சேர்த்து வேகவைத்து அந்த நீரை அருந்தலாம். வாழைத்தண்டு அல்லது முள்ளங்கி சாறு 30 மிலி  அளவு தினமும் குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும்.
 
சாப்பிடக் கூடாதவை

சிறுநீரக கல் பிரச்னை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட்,, சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி அல்லது டீ, சமையல் சோடா, சோடியம் பைகார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அதிக உடலுறவு சில சமயம் தீடீர் மரணத்தை ஏற்படுத்தும்..!! (அவ்வப்போது கிளாமர்)
Next post பிரியாணி இலையின் பலன்கள்! (மருத்துவம்)