வெங்காயத்தாளின் மருத்துவ குணங்கள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 24 Second

வெங்காயத்தாள் கீரை வகையை சார்ந்தது. இதை நாம் அதிகமாக பயன்படுத்துவதில்லை. அப்படியே பயன்படுத்தினாலும் வாசனை மற்றும் சுவைக்காகவும் மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால், இதில் ஏராளமான நன்மைகள் உள்ளன. அவை என்ன என்று பார்ப்போம்:

வெங்காயத்தாளில் விட்டமின் சி, விட்டமின் பி2, விட்டமின் ஏ, விட்டமின் கே போன்ற பல விட்டமின்கள், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன. மேலும், வெங்காயத்தில் உள்ளதை போலவே வெங்காயத்தாளிலும் கந்தகச்சத்து அதிகளவில் உள்ளது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள், செரிமான உபாதைகளுக்கு நிவாரணம் வழங்கும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. ரத்த அழுத்த அளவுகளை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

வெங்காயப் பூ மற்றும் வெங்காய சாற்றை இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பருகிவர காச நோய் குணமடையும். இந்த சாறு பல் மற்றும் ஈறு தொடர்பான நோய்களையும் குணமாக்கும். வெங்காயப் பூ பசியை தூண்டும்.வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன.

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது. மேலும் இதில் உள்ள அலிசின் என்னும் வேதிப்பொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.வெங்காயத்தாள் கண்நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது.

வெங்காயத்தாள் ரத்தத்தில் காணப்படும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது மற்றும் உடலின் குளுக்கோஸ் ஏற்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேலும் வெங்காயத்தாள் கீல்வாதம் மற்றும் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. வெங்காயத் தாளில் உள்ள வைட்டமின் கே ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. இத்தனை மருத்துவகுணம் நிறைந்துள்ள வெங்காயத்தாளை அடிக்கடி உணவில் சேர்த்து பயன்பெறுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாய்மை வரம் தரும் கருப்பை மாற்று அறுவைசிகிச்சை!! (மருத்துவம்)
Next post ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை!! (அவ்வப்போது கிளாமர்)