ஆரோக்கிய வாழ்க்கைக்கு 5 வழிகள்! (மருத்துவம்)
நல்ல ஊட்டச்சத்து மற்றும் உடல் செயல்பாடுகளே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் முக்கிய பகுதிகள் ஆகும். சமசீர் உணவுமுறை ஆரோக்கியமான எடையை அடையவும் பராமரிக்கவும் உதவும். மேலும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
உடற்பயிற்சியை வழக்கமாக்குங்கள்
வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது மிதமான உடற் பயிற்சியை மேற்கொள்வது அவசியம். அல்லது குறைந்தபட்சம் வாரத்திற்கு 75 நிமிடங்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது. தினசரி மேற்கொள்ளும் உடற்பயிற்சி மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும், பதற்றம் மற்றும் மனச்சோர்வை தடுக்கிறது.
பரிசோதித்துக் கொள்ளுங்கள்
அவ்வப்போது உடலை பரிசோதித்துக் கொள்வது நல்லது. இதன்மூலம் நோய்களை முன்கூட்டியே கண்டறியவும் , அபாயங்களைக் குறைக்கவும் உதவுகிறது. சரியான நேரத்தில் செய்து கொள்ளும் பரிசோதனை மற்றும் சிகிச்சை உங்கள் ஆயுட்காலத்தை அதிகரிக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உணவை உண்ணுங்கள்
ஆரோக்கியமான, சீரான உணவு உண்பது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு ஆற்றலைத் தருகிறது. மற்றும் இதயத்தை சீராக துடிக்க வைக்கிறது, மேலும், மூளை சுறுசுறுப்பாக செயல்பட தசைகள் வேலை செய்கிறது. மென்மையான உணவுகளை உண்ணுங்கள். உதாரணமாக, பெர்ரி பழங்கள், அவகோடா பழம், சாமன் மீன், பச்சையம் நிறைந்த கீரைகள், ஆப்பிள், கீரின் டீ, முட்டை, பருப்பு வகைகள், கொட்டை வகைகள், இஞ்சி, பூண்டு போன்றவை உண்ணலாம்.
நிறைய தண்ணீர் குடிக்கவும்
தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். இது நமது உடலில் உள்ள கழிவு ப்பொருட்கள் மற்றும் நச்சுகளை சுத்தப்படுத்த உதவுகிறது. தண்ணீர் நிறைய அருந்துவதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. மேலும், தண்ணீர் நிறைய அருந்துவது உடல் சோர்வு , குறைந்த ஆற்றல் மற்றும் தலைவலியிலிருந்து காக்கிறது.
நன்கு உறங்கவும்
உடலில் ஆற்றலை அதிகரிக்கவும், உணர்வுகளை கட்டுக்குள் வைத்து நல்வாழ்வை மீட்டெடுக்கவும் தூக்கம் அவசியமாகிறது.நல்ல தூக்கம் நினைவாற்றலை அதிகரிக்கிறது மேலும் கவனக்குறைவைக் குறைக்கிறது. உங்கள் மனநிலையை உயர்த்துகிறது. மற்றும் மனச்சோர்வை விலக்குகிறது. தூக்கம் உங்கள் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மற்றும் எடையை நிர்வகிக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...