மாதாந்திர வலி!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 57 Second

மாதவிடாய் காலங்களில் வரும் வலிகள் ஒவ்வொரு வயதினருக்கும் மாறுபடும். சிலருக்கு மாதவிடாய் காலங்கள் நெருங்கும்போதே வலி தொடங்கிவிடும், சிலருக்கு மாதவிடாய் காலங்களில் மட்டும் வலி இருக்கும் போன்றவை. மாதவிடாய் கால வலிகளை Dysmenorrhea என்று கூறப்படுகிறது. இந்த டிஸ்மெனோரியாவானது முதன்மை வலி, இரண்டாம் வலி என்று பிரிக்கப்படுகிறது.

முதன்மை வலியானது மிகவும் சாதாரணமானது. இதற்கு வேறு எந்த காரணமும் கிடையாது. மாதவிடாய் சுழற்சியினால் ஏற்படும் வலி மட்டுமே ஆகும். இது Primary Dysmenorrhea. இரண்டாவது வகையான வலிக்கு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக கருப்பையில் நீர்க்கட்டி, நார்த்திசுக்கட்டி, நோய்த்தொற்று போன்றவற்றாலும் வலி ஏற்படலாம்.

இது Secondary Dysmenorrhea எனப்படுகிறது. இதில் வலிக்கான காரணம் அறிந்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டால் வலிகள் முற்றிலும் நீங்கி
நிவாரணம் கிடைக்கும். உதாரணமாக நீர்க்கட்டி போன்றவை மாதிரியான வலிகளுக்கு மருத்துவ ஆலோசனையின் பேரில் மாத்திரைகள் மூலம் கட்டிகள் கரைக்கப்படும் அல்லது லேப்ராஸ்கோப்பி மூலம் கட்டிகள் அகற்றப்படும். பிறகு வலி முற்றிலும் குறைந்து நல்ல நிவாரணம் கிடைக்கும். இதில் எந்த வகை சிகிச்சை நமக்கு தேவைப்படுமோ அதை மேற்கொண்டால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களுக்கான கருத்தடை சாதனங்கள்!! (மகளிர் பக்கம்)
Next post ஆண்களே ஒரு நிமிடம்…!! (அவ்வப்போது கிளாமர்)