தேகம் காக்கும் தேங்காய்! (மருத்துவம்)
பொதுவாகவே நமது நாட்டில் அனைத்து மாநிலங்களிலுமே தேங்காயின் பயன்பாடு அதிகம். அதிலும், சமையலில் அதிகளவு தேங்காயும், தேங்காய்ப் பாலும் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால், சிலர் சமையலில் தேங்காயை அதிகளவு உபயோகிப்பதால் மாரடைப்பு ஏற்படும் என பயப்படுவார்கள்.
அது உண்மைதான்.. தேங்காயில் அதிகளவு கொழுப்பு உள்ளதால் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.ஆனால், தேங்காயை சமைத்து சாப்பிடும்போதுதான் அவை கொழுப்பாக மாறுமே தவிர, பச்சையாக சாப்பிட்டால் மாரடைப்பு ஏற்படுத்தாது. அதிலும், தேங்காயை உடைத்த அரைமணி நேரத்தில் பச்சையாக சாப்பிடும்போது, அதில் ஏராளமான சத்துகள் நமது உடல் ஆரோக்கியத்தை காக்கிறது.தேங்காய் மற்றும் தேங்காய்ப்பாலில் உள்ள நன்மைகள் பற்றி அனைவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
தேங்காயின் நன்மைகள்:
உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றி ரத்தத்தை சுத்தமாக்கும், தேங்காய்ப் பாலில் சிறிதளவு கசகசா, பால் மற்றும் தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் சரியாகும்.உச்சி முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.தேங்காயை துருவி சிறிது, நாட்டுச் சர்க்கரை சேர்த்து குழந்தைகளுக்கு மாலைவேளைகளில் கொடுத்துவந்தால் அவர்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.
தாய்ப்பாலில் இருக்கும் மோனோலாரின் சக்தியானது தேங்காயை தவிர வேறு எந்த பொருளிலும் இல்லை என்று ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.புரதச்சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய்ப்பால் பருகிவரும் போது அவை உடல்எடையைக் கட்டுப்படுத்தும்.
தேங்காய் நீரைப் பருகிவந்தால் சமனற்ற உடல் சூட்டினால் ஏற்படும் விக்கல் குணமாகும். பழங்காலத்தில், இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒருவருக்கு தேங்காய்ப் பால் கொடுத்து அவர்களின் வாழ்நாட்களை நீட்டித்தனர். இவ்வளவு சிறப்புகளை உடைய தேங்காய் மற்றும் தேங்காய்ப் பாலை உணவில் சேர்த்துச் கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. எனவே, தவறாமல் இவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...