சிறுநீரகக் கற்கள்… 5 உண்மைகள்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 50 Second

சிறுநீரகக் கற்கள் என்பது சிறுநீரகத்தின் உள்ளே உருவாகும் கனிமங்கள், உப்பினால் ஆன கடினமான படிவுகள். சிறுநீர்ப்பை உட்பட சிறுநீரக மண்டலத்தின் எந்தப் பகுதியையும் இந்தக் கற்கள் பாதிக்கலாம். சில கற்கள் சிறுநீரகத்தில் தங்கி எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. சில சமயங்களில் சிறுநீரகக் கல் சிறுநீர்க்குழாய் வழியாக சிறுநீர்ப்பைக்குச் சென்று சிறுநீருடன் சேர்ந்து வெளியேறும். சிறுநீர்க்குழாயில் கல் இருந்தால், அது சிறுநீர் பாதையை அடைத்து வலியை ஏற்படுத்தும். சிறுநீரகக் கற்களின் பொதுவான அறிகுறிகள் சுருக்கென்ற முதுகுவலி, அடிவயிற்றில் வலி அல்லது சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை.

சிறுநீரகக் கற்கள் பற்றி அதிகம் அறியப்படாத 5 உண்மைகள்:

யாருக்கு வேண்டுமானாலும் சிறுநீரக கற்கள் வரலாம். பாலினம், வயது வித்தியாசமின்றி அனைவரும் சிறுநீரக கற்களால் பாதிக்கப்படலாம். ஒருவரது உடல்நிலை, நீர்-திரவ உணவு உட்கொள்ளல், உணவுப் பழக்கங்களைப் பராமரிக்கும் விதத்தைப் பொறுத்து இது மாறுபடும்.

பல்வேறு வகையான சிறுநீரகக் கற்கள்

கால்சியம் ஆக்சலேட் மட்டுமே சிறுநீரக கல்லாக மாறுகிறது என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள். இது ஒரு பொதுவான வகை. ஆனால், ஸ்ட்ருவைட், யூரிக் அமிலம், சிஸ்டைன் கற்களும் சிறுநீரகத்தில் சேரக்கூடும். நாம் உண்ணும் உணவில் இயற்கையாகக் காணப்படும் ஆக்சலேட், சிறுநீரில் உள்ள கால்சியம் ஆகியவற்றின் கலவையிலிருந்து கால்சியம் கற்கள் உருவாகின்றன. சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளின் தொடர்ச்சியாக ஸ்ட்ரூவைட் கற்கள் உருவாகின்றன. இது சிறுநீரகத்திற்குள்ளேயே பெரிதாகலாம். இறைச்சியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு யூரிக் ஆசிட் கற்கள் அதிகம் வரும். சிஸ்டைன் கற்கள் சிஸ்டினுரியா எனப்படும் பரம்பரைக் கோளாறால் ஏற்படுகிறது, இதில் சிறுநீரகம் அதிக அளவு அமினோ அமிலத்தை வெளியேற்றுகிறது.

கோடை, வெப்பமான காலத்தில் சிறுநீரகக் கற்கள்

வெப்பம், ஈரப்பதம், நீரிழப்பு ஆகியவை சிறுநீரகக் கற்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதே சிறுநீரகக் கல் உருவாவதற்கு முக்கியக் காரணம். நீரிழப்பு, சிறுநீரின் செறிவு போன்றவை சிறுநீரக திசுக்களுக்குள் தாதுக்களின் மைக்ரோகிரிஸ்டல்களை உருவாக்க வழிவகுக்கிறது. ஒரு காலத்தில் இதன் அளவு அதிகரித்து, சிறுநீர்க்குழாய்க்கு நகர்ந்து வலியை ஏற்படுத்துகிறது.

எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?

ஒரு நாளைக்கு 2 லிட்டர் சிறுநீர் அளவை உற்பத்தி செய்ய போதுமான அளவுக்கு திரவங்களை உட்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 8 அவுன்ஸ் குவளை அளவுக்குத் தண்ணீர் அல்லது அதற்கு மேல் அருந்தலாம். ஒரு எளிய வழிகாட்டியாக சிறுநீரின் நிறத்தைக் கொள்ளலாம். சிறுநீர் எப்போதும் வெளிர் மஞ்சள் நிறத்தில் வெளியேற வேண்டும். சிறுநீரின் நிறம் அடர்த்தியானால், உப்பின் செறிவு அதிகமாக இருக்கிறது என்று அர்த்தம்.

குறைந்த சிறுநீர் PH / அமில சிறுநீர்

சிறுநீர் அமிலமயமானால் யூரிக் அமிலம் படிகமாக்கல் மற்றும் யூரிக் அமில கல் உருவாவதற்கு வழிவகுக்கிறது. வளர்சிதை மாற்ற நோய் அறிகுறி கொண்ட நோயாளிகள் (உடல் பருமன், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஹைபர்கொலஸ்டிரோலீமியா போன்றவை) அதிக அமில சிறுநீரை வெளியேற்றுகிறார்கள். அதிக அளவு விலங்கு புரதங்களை உட்கொள்வது சிறுநீரை அமிலமாக்குகிறது. அத்துடன் சிறுநீர் யூரிக் அமில அளவும் அதிகரிக்கும். இவர்களுக்கு யூரிக் அமில கல் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் தென்படும் எவரும் உடனடியாக மருத்துவரை பார்ப்பதை உறுதிசெய்ய வேண்டும், இதைச் செய்யத் தவறினால் நீண்ட காலத்தில் சிறுநீரக செயலிழப்பு அபாயம்கூட ஏற்படலாம். ஏற்கெனவே சிறுநீரகக் கற்கள் பிரச்சனை உள்ள நோயாளிகள், அடுத்த 10 ஆண்டுகளில் 90% அளவுக்கு, மீண்டும் தாக்கப்படுவதற்கான ஆபத்தில் உள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post எந்தவிதமான கமிட்மென்ட்டும் இல்லை இது ‘கேஷுவல் செக்ஸ்’! (அவ்வப்போது கிளாமர்)
Next post Theatre for Change இது குரலற்றவர்களுக்கான மேடை! (மகளிர் பக்கம்)