குழந்தைக்கு தீ பற்றினால்…!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 3 Second

ஒரு குழந்தையின் துணியினை தீ பற்றிக் கொண்டால், விரைவாக கம்பளம் அல்லது பிற துணியினால் அக்குழந்தையை சுற்றியோ அவர்களை தரையில் உருட்டியோ தீயை அணைக்க வேண்டும்.

  • தீக்காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக குளிர்விக்க வேண்டும். நிறைய குளிர்ந்த, சுத்தமான தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.
  • தீக்காயம் பெரியதாக இருந்தால், குழந்தையை குளிர்ந்த நீர் உள்ள குளிக்கும் தொட்டி அல்லது பேசினில் வைக்க வேண்டும். இச்செய்கையானது தீக்காயமடைந்த இடத்தை குளிர்விக்க 30 நிமிடம் வரை எடுத்துக் கொள்ளலாம்.
  • தீக்காயமடைந்த இடத்தை சுத்தமாகவும் மற்றும் வறட்சியாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். கட்டுத்துணியினால் தளர்ந்த நிலையில் கட்டி பாதுகாக்க வேண்டும்.
  • தீக்காயமானது நாணையத்தைவிட பெரியதாக இருந்தாலோ அல்லது கொப்புளங்கள் ஏற்பட்டாலோ குழந்தையை சுகாதார பணியாளரிடம் எடுத்துச் செல்ல வேண்டும். கொப்புளங்களை உடைக்கக் கூடாது, அவை காயம்பட்ட இடங்களை பாதுகாக்கிறது.
  • தீக்காயத்தில் ஒட்டியுள்ள எந்த பொருளையும் நீக்கக்கூடாது. குளிர்ந்த நீரைத்தவிர எந்த ஒரு பொருளையும் தீக்காயத்தில் போடக்கூடாது.
  • குழந்தைக்கு பழச்சாறு அல்லது உப்பு மற்றும் சர்க்கரை கலந்த தண்ணீர் போன்ற திரவ உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பிறந்த குழந்தையை தொற்று நோயிலிருந்து பாதுகாக்க…!! (மருத்துவம்)
Next post ஹார்ன் ஓகே ப்ளீஸ்..!! (மகளிர் பக்கம்)