குழந்தையின் தூக்கத்தில் கவனம்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 57 Second

குழந்தை பிறந்த நேரத்தில் இருந்தே தாயின் வாசனையையும் தொடுதலையும் அடையாளம் கண்டு கொள்கிறது… தாய் தன் அருகில் இல்லை என்பதை ஒரு சில அசைவுகளில் கண்டு கொள்கிறது…பெரும்பாலாக வீடுகளில் பெற்றோர் இருவரும் அலுவலகத்துக்கு செல்லும் தம்பதியர்களாக இருப்பார்கள் அவர்கள் தங்களின் குழந்தையை பெற்றோர்களின் கவணத்தில் விட்டு விடுவார்கள்…இரவு நேரத்தில் பெற்றோர் வந்ததும் அவர்களையே சுற்றி வருவது இயல்பு..

1.சின்ன குழந்தைகளை பெற்றோர்கள் தங்கள் இருவருக்கும் இடையில் படுக்க வைப்பது நல்லது..

2.குழந்தைகள் தூங்கும் போது தன் தாயின் அரவனைப்பில் இருப்பதால் அவர்கள் தனிமையை ஈடு செய்ததாக நினைத்து கொள்வார்கள்…

3.சில பெற்றோருக்கு உணர்வு ரீதியாக ஒரு சில நெருக்கடி ஏய்படக்கூடும்..குழந்தையை தங்கள் இருவருக்கும் இடையில் படுக்கவைப்பவர்கள் தங்கள் இரவுநேர நெருக்கத்திற்கு இடையூறாக இருக்கிறது என்று கருதவும் இடமுண்டு. அந்த நேரத்தில் குழந்தை அழுது அவர்கள் தனிமையின் இனிமையை தகர்த்து விடுவதும் உண்டு.

4.நாலு, ஐந்து வயதுப் பிராயத்தில் தன்னைச்சுற்றி நடக்கும் சம்பவங்களை குழந்தைகளால் உணர்ந்து கொள்ள முடியும். இந்தக்குழந்தைகள் இரவில் விழிக்கும் நேரத்தில் பெற்றோரின் நெருக்கத்தைக்’கூட பார்க்கும் சூழல் ஏற்படக்கூடும்.

5.அபூர்வமாய் இந்த வயதில் தனியாக தூங்கப்பழகிக் கொள்ளும் குழந்தைகளும் உண்டு.இதிலும் சிலர் டிவியில் பார்த்த திகில் படங்களுக்குப் பயந்து தனியறையில் படுக்க பயப்படலாம். பெற்றோரோ, நண்பர்களோ சொன்ன மாந்திரீக கதைகள் ராத்திரி நேரத்தில் பயம் ஏற்படுத்தலாம்.

6.சில குழந்தைகள் இருட்டு என்றாலே பயப்படுவார்கள். அவர்களை இருட்டு என்பது ஒருநாளின் கொஞ்சப்பகுதி. அவ்வளவுதான் என்று தைரியமூட்டுவதோடு, முதலில் குறைந்த வெளிச்சத்தில் அவர்களை அழைத்து செல்லலாம்.

7.இவ்வாறு தங்கள் செல்ல குழந்தைகளை தங்கள் பாதுகாப்பில் பாதுகாக்க வேண்டும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post குழந்தை பருவ ஆஸ்துமா…!! (மருத்துவம்)
Next post ஜூம்பா நடனம்… பெண்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்! (மகளிர் பக்கம்)