குழந்தைக்கு கபவாத காய்ச்சலா இயற்கை மருந்து இருக்கு!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 42 Second

குழந்தைக்கு வரும் சுரங்களில் கடுமையானது கபவாத காய்ச்சல். காய்ச்சல் அதிகமாக இருக்கும். சுவாசம் தீவிரமாகவும், நாடி படபடத்துமிருக்கும். அடிக்கடி வறட்சியான இருமலிருக்கும். கோழையும் வெளிப்படும். இருமும் போதே சில சமயம் இழுப்பும் காணும். ஆரம்பத்திலிருந்தே சிகிச்சை செய்து கவனிக்க வேண்யது. இதற்கு வீட்டிலே இயற்கை மருந்து தயாரிக்கலாம்

என்னென்ன தேவை?

நிலவேம்பு – 15 கிராம்
சீந்தில் தண்டு – 15 கிராம்
சிற்றரத்தை – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
கண்டங்கத்திரி வேர் – 15 கிராம்
பூனைக்காஞ்சொறி – 15 கிராம்
கடுகு ரோகிணி – 15 கிராம்
பற்பாடகம் – 15 கிராம்
கிச்சிலிக் கிழங்கு – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
கண்டுபரங்கி – 15 கிராம்

இவற்றை எல்லாம் பொடி செய்து சுத்த நீரில் போட்டு கால் லிட்டராகும் வரை சுண்டைக் காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் கொடுக்க குணமாகும். தினசரி 3 வேளை இதை கொடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் காய்ச்சல் எளிதில் குணமாகும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இயற்கை வைத்தியத்தின் பலன்கள்!! (மருத்துவம்)
Next post பல் வலிக்கு வீட்டில் மருந்து இருக்கு!! (மருத்துவம்)