குந்தவை… ப்யூட்டி அண்ட் ஃபிட்னெஸ் டிப்ஸ்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 35 Second

திரிஷா ‘பொன்னியின் செல்வன்‘ திரைப்படத்தின்  மூலம் மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார். அசரடிக்கும் அழகில் இளசுகள் முதல் பெருசுகள் வரை அத்தனை பேரையும் அசத்துகிறார். திரையுலகில் இத்தனை ஆண்டுகளை கடந்தும்  இன்றும்  ஃபிட்டாக  இருக்கும்  த்ரிஷாவின்  ஃபிட்னெஸ்  டயட்  ரகசியங்கள்  குறித்து  அவர் பகிர்ந்து கொண்டவை…

“நான் எவ்வளவுதான் பிசியாக இருந்தாலும் சரி அல்லது எவ்வளவு முக்கிய வேலை இருந்தாலும் சரி,  தினசரி சில மணி நேரங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்  உறுதியாக இருப்பேன். அதேசமயம்,  தினமும்  ஒரேமாதிரி இல்லாமல் வெவ்வேறு வகையான உடற்பயிற்சிகளை செய்வேன்.

​உடற் பயிற்சிகள்

 நடைப்பயிற்சி,  கார்டியோ, எடை தூக்கும் பயிற்சிகளுடன் தொடங்குவேன்.  பின்னர்,  கைகளையும் உடலையும் ஒருசேர வலுப்படுத்துகிற, கைகளால் செய்யும் புஷ் அப் மற்றும் பிளாங் போன்ற பயிற்சிகள் செய்வேன்.  அவை எனக்கு மிகவும் பிடித்தவைகளாகும். ஏனென்றால் இவை  இரண்டும் என்னுடைய உடலை டோனிங் செய்ய உதவுவதாக கருதுகின்றேன். அதுபோன்று  உடற்பயிற்சிகளுக்கு நான் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறேனோ, அந்தளவு யோகாசனங்களுக்கும்  முக்கியத்துவம் கொடுப்பேன்.

காரணம், யோகாசனம் செய்வதில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக என்னுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்ளவும். உடலின் மெட்டபாலிசத்தைத் தூண்டுவதற்காகவும் தினசரி யோகா செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். குறைந்தபட்சம் அரைமணி நேரமாவது  யோகா  செய்தால்தான்  அன்றையநாள்  எனக்கு
புத்துணர்ச்சியளிப்பதாக தோன்றும்.

 உடற்பயிற்சிகள்  போலவே, நீச்சல் பயிற்சியும் எனக்கு மிகவும் பிடிக்கும். எவ்வளவு நேரம் தண்ணீருக்குள் இருக்க சொன்னாலும் மகிழ்ச்சியாக இருப்பேன்.  அதிலும் ஸ்விம்மிங்கில் டைவிங் என்றால் அலாதி பிரியம் உண்டு.  இதுதான்  இத்தனை ஆண்டுகளாகியும்  எனது  உடலின்  வடிவமைப்பை மாறாமலேயே வைத்திருக்கச் செய்கிறது என்று
நினைக்கிறேன்.

உணவு  பழக்கம்

காலை உணவு தான் நாள் முழுக்க நம்முடைய உடலுக்குத் தேவையான ஆற்றலை உற்பத்தி செய்யும் மூலம் ஆகும். அதனால் காலை உணவை எதற்காகவும் தவிர்க்க மாட்டேன். அதுபோன்று காலை  எழுந்ததும் காபி, டீ  குடிக்கும்  பழக்கமும் எனக்கு இல்லை. காபி, டீ யை விட  ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் நிறைந்த க்ரீன் டீ தான் எடுத்துக் கொள்வேன். எனது  காலை  உணவு என்றால்  அது  ஊட்டச் சத்து நிறைந்த பழங்கள் மட்டுமே. பின்னர்,   ரொட்டி வகைகள் (சப்பாத்தி), ஆம்லெட் மற்றும் தயிர் (புரோ பயோடிக்) ஆகியவை இருக்கும்.  பழங்களில்  ஆரஞ்சு மற்றும் மாதுளை பழச்சாறுகள் கட்டாயம் என்னுடைய தினசரி டயட்டில் உண்டு.

பொதுவாக வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். வெளி உணவுகளை முடிந்தவரை தவிர்த்துவிடுவேன்.  அதுபோன்று  காலை நேரத்தில் பொரித்த, வறுத்த உணவுகளுக்கு நிச்சயம்  இடம் இல்லை. மேலும், சர்க்கரை உணவுகள் மற்றும் மைதா உணவுகளுக்கும் எப்போதும் என் டயட்டில்  இடம் கிடையாது. அதுபோன்று, உடலில்  வறட்சி ஏற்படாமல் நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதற்காக தண்ணீர் நிறைய குடிப்பேன். அதுபோன்று  எப்போதும் என் னுடன் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளில் ஏதேனும் ஒன்று இருக்கும். ஓய்வு  நேரங்களில்  கொரிப்பதற்காக.

என்னதான் உணவில்  நான்  இவ்வளவு கட்டுப்பாடாக  இருந்தாலும்,  பிரியாணி  எனது ஃபேவரைட் டிஷ்ஷாகும்.  பிரியாணி சாப்பிட வேண்டும் என்று தோன்றிவிட்டால்  உடனே  சாப்பிட்டுவிடுவேன்.  அதுபோல அவ்வப்போது  எனது  உடல்  எடையை  சரிபார்த்துக் கொண்டே  இருப்பேன். உடல் எடையில், ஒரு கிராம் அதிகரித்தால் கூட,  உடனடியாக அதை குறைத்துவிட்டுத் தான், மறு வேலை பார்ப்பேன். அதற்காக  தேவைப்பட்டால் ஒரு நாள் முழுவதும் பட்டினியாக கூட இருப்பேன்.

என்னுடைய  தினசரி உணவில்  சிட்ரஸ் அமிலங்கள் நிறைந்த உணவுகள் அதிகம் இருக்கும்படி பார்த்துக் கொள்வேன். அந்தவகையில், தினமும் எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் பிற சிட்ரஸ் பழங்களில் நிச்சயம் ஏதாவது ஒன்று டயட்டில் சேர்த்துக் கொள்வேன். இதுதான் என்னுடைய  உடல்  ஒல்லியாகவும்,  சருமம் இத்தனை வருடங்களாக அதே பொலிவுடனும் பளபளப்புடனும் இருக்கக் காரணம் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் இலக்கு ஒலிம்பிக் பதக்கம்!(மகளிர் பக்கம்)
Next post உணவு ரகசியங்கள்!! (மருத்துவம்)