மியான்மரின் குட்டி செஃப்!(மகளிர் பக்கம்)
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நம் வீட்டுக் குழந்தைகள் பலர் தொலைக்காட்சி மற்றும் செல்போன் என்று கதியே இருக்கின்றனர். இதில் அபூர்வமாக சில குழந்தைகள் மட்டுமே கதைப்புத்தகம், பசில்கள், குடும்பத்தினருடன் நேரங்களை செலவிடுதல் போன்றவற்றை செய்கிறார்கள். மேலும் சில பள்ளிகள், நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவதால், பள்ளி பாடங்களை செய்ய சில மணி நேரம் ஒதுக்குகிறார்கள்.
உலகம் முழுக்க ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றுக்கு மியான்மரும் விதிவிலக்கல்ல. அங்கும் நாடு முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை நல்ல விதமாக பயன்படுத்தி வருகிறாள் 8 வயது சிறுமி மோ மியான்ட் மே தோ (Moe Myint May Thu). இவள் லாக்டவுன் நேரத்தில் சும்மா இருக்க பிடிக்காமல், அதனை வருமானமாக்கிக் கொண்டிருக்கிறாள். தினமும் 525 ரூபாய் சம்பாதிக்கிறார். அதுவும் சமையல் செய்து. நம்ம பிள்ளைகள் பாத்திரத்தை தொட்டாலே ‘கரி ஒட்டிக்கும்… நீங்களே கழுவுங்க மம்மி’ என்று சொல்லும் நிலையில் மோ குட்டி வகை வகையாக சமையல் செய்து அசத்துகிறார். அதுவும் அசைவ உணவுகள் என்றால், பின்னி பெடல் எடுக்கிறார்.
சமையலறைக்குள் ஒரு செஃப் போலவே நுழையும் அந்த குட்டி ஒரு கடாயை எடுத்து, அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, சில இறால்களை போட்டு வதக்கி எடுக்கிறார். காரசாரமாக இருக்கும் அந்த அசைவம் அவளின் ஃபேவரைட் உணவு என்பதால் அதை தன் தாயிடம் இந்த ஊரடங்கு காலத்தில்தான் கற்றுக் கொண்டுள்ளார். தாய் சமையல் செய்யும் போது கூடமாட உதவி செய்து வந்த மோ, இப்போது 15 உணவுகளை சமைக்க கற்றுக்கொண்டுள்ளார். அவற்றை தினமும் விற்பனை செய்து பணமும் சம்பாதிக்கிறார். மீன், கறி முதல் பன்றி வறுவல் வரை சமைத்து அசத்துகிறார். Tomato fish paste curry, Pork stew, Spicy fried frog ஆகிய உணவுகளை செய்வதில் கைதேர்ந்தவராக உள்ளார் மோ. மியான்மர் மக்களின் காலை உணவான அரிசியால் ஆன நூடுல்ஸ் மற்றும் வேகவைத்த கெளுத்தி மீன் இவரது கைப்பக்குவத்தில் பல வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது.
இவர் சமையல் செய்யும் வீடியோ ஒன்றை இவரது தாய் யூடியூப்பில் கடந்த ஏப்ரலில் பதிவிட அதை 2 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். கடந்த ஏப்ரலில்தான் இவர் சமையல் செய்ய கற்றுள்ளார். தினமும் தான் சமையல் செய்யும் அசைவ உணவுகளை விற்பது மட்டுமல்லாமல், இவரின் சமையல் வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றப்படுவதால், அதன் மூலமும் ஒரு வருமானம் பெறுகிறார் மோ. மியான்மரின் குட்டி சமையல் கலை நிபுணராக விளங்கும் மோ, சம்பாதித்த பணத்தை அவரின் படிப்பு செலவிற்கு பயன்படுத்தவும், அவருக்கென வங்கிக் கணக்கு ஒன்றை திறக்கவும் திட்டமிட்டுள்ளனர் மோவின் பெற்றோர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...