ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னெஸ் டிப்ஸ்!(மருத்துவம்)

Read Time:7 Minute, 30 Second

‘புஷ்பா‘ படத்தின் மூலம்  உலக சினிமா  ரசிகர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் ராஷ்மிகா மந்தணா, மாடல் அழகியாக இருந்து  நடிகையானவர். இயற்கை அழகுடன் ஒல்லி பெல்லியென உடலைக்  கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ராஷ்மிகாவின் ஃபிட்னெஸ் ரகசியம் குறித்துப்  பகிர்கிறார்:

’நான் சினிமாத்துறைக்குள்  வரும்போது அனைத்து மொழிப் படங்களிலும் நடித்து  ஒரு இந்திய நடிகையாக  பரிமளிக்க வேண்டும் என்று  ஆசைப்பட்டேன்.  ஆனால்,  ‘புஷ்பா’ படத்தின் ஸ்ரீவள்ளி… என்ற ஒரே பாடலின் மூலம் எனது கனவு நிறைவேறிவிட்டது.  ரசிகர்கள் என்னை  இப்போது வள்ளி  என்று அழைக்கும் போது  ஏதோ சாதித்த உணர்வு ஏற்படுகிறது. என்னைப் பொருத்தவரை  ஃபிட்னெஸ்  என் வாழ்வில்  இரண்டற கலந்துவிட்ட ஒன்று.

அடிப்படையில்  நான்  ஒரு மாடல் அழகி என்பதால்  சிறு வயது முதலே  உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில்  அதிக  கவனம் செலுத்துவேன். இப்போது  நடிகையானதால்   ஃபிட்னஸில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன்.  ஃபிட்னெஸின் அவசியத்தை  மக்கள்  உணர வேண்டும் என்பதாலேயே  சமீபத்தில் நான் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை  டிவிட்டரில் பதிவிட்டிருந்தேன்.

ஃபிட்னெஸ்

தினசரி  காலை எழுந்ததும்  ஒரு மணி நேரமாவது  உடற்பயிற்சிகள்  செய்வதற்காக  ஒதுக்கிவிடுவேன். அதுபோன்று  வாரத்தில்  நான்கு  நாளாவது  கிக்பாக்ஸிங், ஸ்கிப்பிங், டான்சிங், ஸ்பின்னிங், யோகா, வாக்கிங் போன்ற பயிற்சிகள் மேற்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.  இது தவிர, கார்டியோ பயிற்சிகள், வெயிட் மெயின்டைன் டிரெயினிங், கார்டியோ வாஸ்குலர் பயிற்சிகளையும் மேற்கொள்வேன். கார்டியோ பயிற்சிகளில் ட்ரெட் மில்லில் ஓடுவது, சைக்கிளிங் இரண்டும் என் ஃபேவரைட்.

இந்த பயிற்சிகள்  எல்லாம்  என்  உடலையும் மனதையும் ஃபிரஷ்ஷாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. தினசரி அதிகாலையே எழுந்து ஜிம்மில் நுழைவது நம்மை தன்னம்பிக்கையாய் உணரவைக்கும். ஜிம்முக்குப் போய் மாங்கு மாங்கென கடினமான உடற்பயிற்சிகள் எல்லாம் செய்ய வேண்டும் என்பதில்லை. ஸ்ட்ரெச்சிங், கார்டியோ பயிற்சிகள், உடல் தசைகளை முறுக்கேற்றும் பயிற்சிகள் செய்தாலே போதுமானது.  

காலையில்  எவ்வளவு முக்கிய வேலை இருந்தாலும் சரி, சூட்டிங் இருந்தாலும் சரி,  உடற்பயிற்சி செய்வதை மட்டும் ஒருபோதும்  தவிர்க்க மாட்டேன்.  அதுபோல முதலில்  உடற்பயிற்சிக்கான வார்ம் அப்பை முடித்துவிட்டு, அடுத்ததாக, ஸ்டெர்ச் பயிற்சிகள்  செய்வேன். மூன்று நிமிடங்கள் ஸ்டெர்ச் முடிந்ததும் இடுப்புக்கான பயிற்சிகள், மூட்டுகளை வலிமைப்படுத்துவதற்கான ஹாஃப் நீலிங் பேண்ட் ரோஸ், புஷ் அப் போன்ற பயிற்சிகளை மேற்கொள்வேன்.

உணவு

காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து குடிப்பதில் இருந்து  என்னுடைய  நாள்  தொடங்குகிறது. தென்னிந்திய சைவ உணவுகளை   அதிகம் விரும்பி  சாப்பிடுவேன். அதேசமயம்,  மதிய உணவில்  அரிசி சாதத்தைத் தவிர்த்துவிடுவேன்.  அதுபோன்று வெள்ளரிக்காய், உருளைக்கிழங்கு, குடைமிளகாய், தக்காளி எல்லாம்  தவிர்த்துவிடுவேன்.

ஏனென்றால்  அவை,  எனக்கு  அலர்ஜியை  ஏற்படுத்திவிடுகிறது. ஒருவர்  ஒரு நாளைக்கு  3 லிட்டர்  தண்ணீர்  குடிக்க வேண்டும்  என்பதில்  கவனமாக  இருப்பேன்.  அதனால்  வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  தண்ணீர்  குடித்துக் கொண்டே இருப்பேன்.  அதுபோன்று  இரவு உணவாக,  ஃபிரஷ்ஷான பழங்களும் காய்கறி சூப் மட்டுமே எடுத்துக்  கொள்வேன். தினசரி தண்ணீர் பருகும்போது உடல் சூடு இயல்பாக இருக்கிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற நச்சுக்கள் வெளியேறிவிடுகின்றன. சருமமும் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கிறது.

பியூட்டி

பியூட்டி  ரகசியம் என்றால்,  ஸ்கின்  அண்ட் ஹேர்  பராமரிப்பில்  மிக  கவனமாக  இருப்பேன்.  இதற்காக அதிக கெமிக்கல்கள் நிறைந்த எந்த ஒரு பொருளையும் தலைமுடிக்கும் சருமத்துக்கும் ஒருபோதும் பயன்படுத்த மாட்டேன். சன் ஸ்க்ரீன் போன்ற க்ரீம்களை பயன்படுத்தும்போது  ரசாயனம்  கலக்காத ஆர்கானிக் க்ரீம்களைத்  தேர்வு செய்து பயன்படுத்துவேன்.  அதுபோன்று  இரவு தூங்குவதற்கு முன்பு தினமும், கிளன்சிங், டோனிங், மாய்ச்சரைஸிங் செய்துவிட்டுத்தான்  தூங்குவேன்.

இயல்பான சிடிஎம் டெக்னிக்குகளே ஆரோக்கியமான அழகுக்கு அஸ்திவாரம் என்பதை உறுதியாக நம்புகிறேன். இதனால், வேதிப் பொருட்களை அதிகம் நாடிச் செல்ல மாட்டேன்.ஒருவர்  உடற்பயிற்சி, உணவு பழக்கவழக்கங்கள்  போன்றவற்றில் கவனமாக  இருந்தால்  நிச்சயம்  உடலை  ஆரோக்கியமாகவும், அழகாகவும்  வைத்துக் கொள்ள முடியும்” என்று  அழகாகப் புன்னகைக்கிறார் ராஷ்மிகா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களிடம் ஆண்கள் சொல்ல தயங்குகிற விஷயங்கள்!(அவ்வப்போது கிளாமர்)
Next post டிராகன் பழம்!(மருத்துவம்)