இதய நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை!! (மருத்துவம்)
இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வருகிறது சென்னையில் இயங்கி வரும் ஐஸ்வர்யா அறக்கட்டளை. அதன் நிர்வாக இயக்குநரான சித்ரா விஸ்வநாதனிடம் இதுபற்றி பேசினோம்…
‘‘எனக்கு சொந்த ஊர் சென்னை. நான் ஓர் ஓவியர். என்னுடைய கணவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். கடந்த 2008ம் ஆண்டு எனது மகள் ஐஸ்வர்யா 3 வயதில் இதயநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனாள். எங்கள் செல்ல மகளின் இழப்பு எங்களை கடுமையாக பாதித்தது. அதிலிருந்து மீள முடியாமல் மிகவும் சிரமப்பட்டோம். ஒருகட்டத்தில் இப்படி இதுபோன்று இதய நோயால் பாதிக்கப்படும் ஏழை, எளிய குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும். இன்னொரு ஐஸ்வர்யா நம் பெண்ணைப் போல உயிரிழக்கக் கூடாது என்பதற்காக அவள் பெயரிலேயே ஓர் அறக்கட்டளையைத் தொடங்கினோம். எனவே அந்த 2008ம் ஆண்டிலேயே அதற்கான முயற்சிகளை ஆரம்பித்து விட்டோம்.
அரசு அனுமதியுடன் வேலூர், தஞ்சாவூர், செங்கல்பட்டு, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அரசு மருத்துவமனையோடு தொடர்புகொண்டு இலவச இதயநோய் கண்டறிதல் மூலம் பரிசோதனை செய்து சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். இதுவரை 2200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய அறுவைசிகிச்சைக்கு உதவி வருகிறோம்.
மேலும் 55க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவியிருக்கிறோம். இதய அறுவை கிகிச்சைக்கு பிறகு தொடர் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கும் உதவுகிறோம். எங்கள் அறக்கட்டளையின் சேவையை புரிந்து நிறைய பெரிய மனிதர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்கள் உதவி வருகிறார்கள். அவர்களின் உதவியால் இந்த அறக்கட்டளை தொடர்ந்து தன்னுடைய சேவையை செய்து வருகிறது’’ என்கிற சித்ரா விஸ்வநாதன், குழந்தைகளுக்கான இலவச இதய சிகிச்சை பெற விரும்புகிறவர்கள் 044 2815 1953 என்ற எண்ணிலோ அல்லது [email protected] என்ற மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம் என்கிறார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...