கோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை!(மருத்துவம்)
- நார்ச்சத்து, புரதம், மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்த ஓர் உணவுதான் பக்வீட்(Buckwheat). மருத்துவ நிபுணர்கள் பக்வீட்டை மிகச் சிறந்த உணவாக கருதுவதால் இதற்கு சூப்பர் ஃபுட் என்றும் பெயர் உண்டு.
- பக் வீட்டானது கோதுமை போல் தோற்றமளித்தாலும் உண்மையில் அது கோதுமையின் வகையெல்லாம் இல்லை. அப்படியென்றால் வெளிநாட்டு விவகாரமாக இருக்குமோ என்று நினைக்கத் தோன்றுகிறதா? பக் வீட் நம்மூரிலும் பிரபலமாகிவரும் உணவுப்பொருள்தான். பப்பாரை என்பது இதன் தமிழ்பெயர். இதற்கு மரக்கோதுமை என்றொரு பெயரும் உண்டு.
- பக் வீட் விதைகளை கஞ்சி செய்து சாப்பிடலாம். நூடுல்ஸ் போன்றவற்றிலும் உபயோகிக்கலாம்.
- சமைக்கப்பட்ட ஒரு கப் பக்வீட் விதையில், கொழுப்புச் சத்து மிகக் குறைவாக ஒரு சதவிகித அளவிலும், நார்ச்சத்து 5 கிராம் அளவிலும், கார்போஹைட்ரேட் 33 சதவிகித அளவிலும், புரதம் 6 கிராம் அளவிலும் இருக்கும். கலோரி 155 கிராம் இருக்கும். இது தவிர மக்னீசியம், பாஸ்பரஸ், ஸிங், நியாசின், மாங்கனீசு, போலேட் மற்றும் விட்டமின் B6 போன்ற சத்துக்கள் இதில் நிரம்பியுள்ளன.
- பக்வீட் விதை எல்டிஎல் (LDL) எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைக்கும். இதயக் குழாய்கள் தடிமன் ஆவதை தடுக்கும். இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். இந்த விதையில் உள்ள சில சத்துக்களால் ரத்த அழுத்தமும் சீராகிறது.
- மற்ற முழு தானியங்களோடு ஒப்பிடுகையில் பக்வீட்டிலுள்ள கார்போஹைட்ரேட் மெதுவாக உறிஞ்சப்பட்டு உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்காமல் பார்த்துக்கொள்கிறது. இன்சுலின் ரெஸிஸ்டன்ஸை (சென்ஸ்டிவிட்டி) அதிகரிக்கிறது.
- நார்ச்சத்து 6 சதவிகிதம் மட்டும் இருப்பதால், இதனை ஒரு கப் அளவிற்குச் சாப்பிட்டாலும் அவ்வளவு சீக்கிரம் பசியெடுக்காது. அதனால் எடை குறைப்பில் உள்ளவர்கள் இதனை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
- எளிதில் ஜீரணமாகக்கூடிய தாவர புரதம் இது. ஒன்றுக்கு இரண்டு என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் அடுப்பில் மிதமான தீயில் சமைத்து சாப்பிடலாம். வெந்தவுடன் பார்த்தால் பார்லி போல இருக்கும். இதனை மாவாக அரைத்தும் பலவிதமான உணவுகளில் பயன்படுத்தலாம்.
- பக் வீட் ஆர்கானிக் கடைகளிலும், ஆன் லைன் கடைகளிலும் கிடைக்கிறது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...