ஸ்கின் ஹேக்ஸ்: முல்தானி மெட்டி!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 18 Second

முல்தானி மெட்டிகளிமண் போன்று இருக்கும் முல்தானி மெட்டி சருமம் இயற்கையாக மிளிரச் செய்யக்கூடியது. பருக்கள் மற்றும் கரும்புள்ளிகளுக்கு சிறந்த நிவாரணம். இதனை க்ளென்சர், டோனர் மற்றும் பேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.

முல்தானி மெட்டியின் பலன்கள்

*எரிமலை சாம்பல் மற்றும் மினரல்கள் அடங்கியதால் மாசுமருவற்ற சருமத்திற்கு இயற்கை அளித்த வரம்.

  • அதிக அளவு எண்ணை சுரப்பதை கட்டுப்படுத்தும்.
  • வெயிலினால் ஏற்படும் எரிச்சல், சரும தடிப்பு மற்றும் அழற்சி தோலுக்கு உகந்தது.
  • சரும துவாரங்களில் உள்ள அழுக்கை நீக்கி ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
  • சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும்.

பருக்கள்

முல்தானி மெட்டி 1 டீஸ்பூன்+1/2 டீஸ்பூன் வேப்பம் பவுடர்+ 2 டீஸ்பூன் தண்ணீர் கலந்து முகத்தில் தேய்த்து காய்ந்த பிறகு கழுவினால் பரு மற்றும் அதனால் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்கும்.

பளிச் சருமம்

முல்தானி மெட்டி 1 டீஸ்பூன்+சந்தனம் 1 டீஸ்பூன்+மஞ்சள் ஒரு சிட்டிகை+பன்னீர் 3 டீஸ்பூன் கலந்து முகத்தில் பூசி வர சருமம் பளிச்சிடும்.

கருமை நீங்க

முல்தானி மெட்டி 1 டீஸ்பூன்+ஆரஞ்ச் பழச்சாறு+பப்பாளி பழ கூழ் 1 டீஸ்பூன் கலந்து பூசி வர வெயிலினால் ஏற்படும் கருமை நீங்கும்.

பேஸ் பேக்

முல்தானி மெட்டி 1 டீஸ்பூன்+பாதாம் எண்ணை சில துளிகள்+2 டீஸ்பூன் பாலில் நசுக்கிய ரோஜா இதழ்கள் கலந்து பூச சருமத்திற்கு இன்ஸ்டென்ட் க்ளோ கிடைக்கும். இதனை வாரத்தில் இரண்டு முறை செய்து வரலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஹெல்த்தி ஜூஸ்…!! (மருத்துவம்)
Next post பொட்டு வைத்த முகமோ!(மகளிர் பக்கம்)