நலம் தரும் ரெசிப்பிகள் 2!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 12 Second

குதிரைவாலி ஆப்பம்

தேவையானவை: குதிரைவாலி – ஒரு கப், கார் அரிசி –  ஒரு கப், உளுந்து – கால் கப், வெந்தயம் – ஒரு தேக்கரண்டி, கருப்பட்டி – இரண்டு கப், இளநீர் – அரை கப்.
செய்முறை: முதலில் குதிரைவாலியுடன் கார் அரிசி, உளுந்து, வெந்தயம் சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊறியதும் நைசாக அரைக்கவும். இளநீரை முதல்நாளே வாங்கிவைத்துப் புளிக்கவைக்கவேண்டும்.  

புளித்த இளநீரை அரைத்துவைத்துள்ள மாவுடன் கரைத்து 6 மணி நேரம் புளிக்கவிடவும். கருப்பட்டியில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து, கொதித்ததும் அப்படியே சூடாக வடிகட்டி மாவுடன் சேர்க்கவும். ஆப்ப சட்டியை அடுப்பில் வைத்து லேசாக எண்ணெய் தடவி தேவையான மாவினை ஊற்றி மூடி வைத்து வேக விடவும். ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் மெத்தென்று பஞ்சு போன்றும் சுட்டு எடுக்கவும். சத்தும், சுவையுமிக்க குதிரைவாலி-கருப்பட்டி ஆப்பம் தயார்.

பலன்கள்: குதிரைவாலியில் வைட்டமின் ஏ, பி, சி, டி, கே, இரும்பு, மெக்னீஷியம், காப்பர் போன்ற சத்துகள் நிறைவாக இருக்கிறது. உடலுக்கு தேவையான புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், பி கரோட்டின், மாவுச்சத்து, கால்சியம், தயமின், ரிபோஃப்ளேவின் போன்று குதிரைவாலியில் இருக்கும் மைக்ரோ நியூட்ரியண்ட்ஸும் அதிகம்.குதிரைவாலி ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதால் சர்க்கரை நோயாளிகள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவில் இதுவும் ஒன்று.

தொகுப்பு : ஸ்ரீதேவி

சிவப்பு சோளம் அடை

தேவையானவை: சிவப்பு சோளம் – அரை  கப், துவரம்பருப்பு – கால் கப், உளுந்தம்பருப்பு – 2 தேக்கரண்டி, பெருங்காயம் – சிறு துண்டு, மிளகாய் வற்றல் – 4, பெரிய வெங்காயம் – ஒன்று, சீரகம் – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை, உப்பு – சிறிதளவு, நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப.

செய்முறை: சிவப்பு சோளம் மற்றும் பருப்பு வகைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸியில் ஊற வைத்தவற்றை தண்ணீர் வடித்து போட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்த மாவுடன் சீரகம், மஞ்சள் தூள், நறுக்கின வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலக்கவும். கரைத்து வைத்திருக்கும் மாவை மெல்லிய அடைகளாக வார்க்கவும். மேலே எண்ணெய் விட்டு புரட்டி வெந்ததும் எடுக்கவும். சுவையான சிவப்பு சோள அடை ரெடி .

பலன்கள்: சிவப்பு சோளத்தில்  வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை நிறைந்துள்ளது. இது உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. உடலில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் ரத்த சோகை வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நலம் காக்கும் சிறுதானியங்கள்!(மருத்துவம்)
Next post வீடு தேடி வரும் வீட்டுச் சாப்பாடு!(மகளிர் பக்கம்)