தாய்ப்பால் எனும் நனியமுது பெருக!(மருத்துவம்)
உலகத் தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 – 7
தாய்ப்பாலூட்டும் அன்னையர்கள் புரத உணவை உட்கொள்வது முக்கியமானது. ஏனெனில், போதுமான அளவு புரதச்சத்தை உட்கொள்வது அத்தியாவசியமாக இருக்கின்ற ஒரு முக்கியமான காலமாக தாய்ப்பாலூட்டும் காலம் இருக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தை, முறையான ஊட்டச்சத்துக்குத் தாயின் பாலையே முழுமையாகச் சார்ந்திருப்பதால், முதல் ஆறு மாத காலம் முழுவதிலும் குழந்தையின் ஊட்டச் சத்துக்கான முதன்மை ஆதாரமாக தாய்ப்பாலே இருக்கிறது. எனவே, தாய்ப்பாலூட்டும்போது தனது உடலுக்குள் செல்கின்ற ஊட்டச்சத்துகள் குறித்து சிறப்பான கவனத்தைச் செலுத்துவது ஒரு தாய்க்கு மிக முக்கியமானதாக இருக்கிறது.
உடல்நலத்தை ஊக்குவிப்பது மட்டுமின்றி, மார்பகத்தில் பால் சுரப்பையும் ஊட்டச்சத்துக்கள் ஊக்குவிக்கின்றன. குழந்தையின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இது அத்தியாவசியமானது. துணை உணவுப்பொருட்களை உட்கொள்வதிலிருந்து, ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது வரை பல்வேறு வழிமுறைகளில் தங்களது ஊட்டச்சத்து தேவைகளைத் தாய்ப்பாலூட்டும் பெண்கள் பூர்த்தி செய்ய முடியும். அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை இக்காலகட்டத்தில் எடுத்துக் கொள்வது தாயின் உடல்நலத்திற்கு மட்டுமின்றி, பச்சிளம் குழந்தையின் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.
தாய்ப்பாலூட்டும் அன்னையர் அதிக புரதமுள்ள உணவுகளை உட்கொள்வதன் பலன்கள்
ஆரோக்கியமான தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும்.
பச்சிளம் குழந்தையின் வளர்ச்சி மற்றும் பராமரிப்பிற்கு சிறப்பான ஆதரவை வழங்கும்.
திசுக்கள் மற்றும் தசைகளை கட்டமைப்பதன் வழியாக உடல் எடை அதிகரிப்பைத் தூண்டிவிடும்.
ஹார்மோன்கள், என்சைம்கள் மற்றும் உடல்எதிர்ப்பொருட்களின் உற்பத்தியில் உதவுகிறது.
தாய்ப்பாலின் ஊட்டச்சத்தை சிறப்பாக்கும் உணவுகள் கோழிக்கறி (சிக்கன்)
பல நபர்களாலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பிரபலமான புரத உணவு ஆதாரமாக கோழிக்கறி புகழ்பெற்றிருக்கிறது. எனினும், தாய்ப்பாலூட்டும் அன்னையருக்கு அதிக பயனுள்ளதாக இருக்கின்ற பிற ஊட்டச்சத்துக்களையும் மற்றும் புரதத்தையும் அதிக அளவில் கோழிக்கறி கொண்டிருக்கிறது. புரதம் தவிர, இரும்புச்சத்து, வைட்டமின் B12 மற்றும் கோலின் உயிர்சத்து ஆகியவற்றின் சிறந்த ஆதாரமாகவும் கோழிக்கறி திகழ்கிறது. பிறந்த குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமான ஊட்டச்சத்துக்களாக இவைகள் இருக்கின்றன.
முட்டைகள்
தாய்ப்பாலூட்டும் அன்னையருக்கு எளிதான மற்றும் விரைவாக சமைத்து உண்ணக்கூடிய உணவாக இருப்பது மட்டுமின்றி, கோலின், வைட்டமின் A, B12, D, K, செலேனியம், உப்பு மற்றும் புரதம் போன்ற ஊட்டச்சத்துக்களை அதிகமாக கொண்டவையாகவும் முட்டைகள் இருக்கின்றன. மனித உடலின் தினசரி புரதத்தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சிறந்த வழிமுறையாக முட்டைகள் இருக்கின்றன என்று கூறமுடியும். வைட்டமின் D -ன் ஒரு முக்கியமான ஆதாரமாக முட்டைகள் திகழ்கின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, பச்சிளம் குழந்தையின் உடல் வளர்ச்சி, முன்னேற்றத்திற்கு உதவுகின்றன; அதன் எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகின்றன. இதன் காரணமாகத்தான் பிரசவித்திருக்கும் தாயின் உணவுத்தொகுப்பில் அத்தியாவசியமானவையாக முட்டைகள் இடம்பெற வேண்டும்.
அவோகடா (வெண்ணெய் பழம்)
பாலூட்டும் தாய்மார்களுக்குத் தேவைப்படும் கூடுதல் சக்தியை வழங்குகின்ற “ஆரோக்கியமான கொழுப்புகள்” அவோகடாவில் இருக்கின்றன; அத்துடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை நெறிப்படுத்தவும் இவைகள் உதவுகின்றன. உடலின் மைய நரம்புமண்டலத்தின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாட்டிற்கு உதவுகின்ற புரதம், வைட்டமின் E மற்றும் ஃபோலேட் ஆகிய ஊட்டச் சத்துக்களும் இப்பழத்தில் அதிகளவில் இருக்கின்றன. தாய்ப்பாலூட்டும் அன்னையருக்கும் மற்றும் அவர்களின் பச்சிளம் குழந்தைகளுக்கும் செல் உருவாக்கத்திற்கு அவசியமான அமினோ அமிலங்களின் சிறப்பான ஆதாரமாகவும் அவோகடா (வெண்ணெய் பழங்கள்) இருப்பது இதன் தனிச்சிறப்பாகும்.
சியா விதைகள்
கால்சியம், புரதம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் அதிகளவில் சியா விதைகளில் இருக்கின்றன. ஒமேகா – 3 கொழுப்பு அமிலங்களையும் அதிக அளவில் இவைகள் வழங்குகின்றன. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, நீண்ட நேரத்திற்கு தாய் மற்றும் குழந்தையின் வயிறு நிறைந்திருப்பதை உறுதிசெய்யும். சிறப்பான சுவையையும் இவைகள் கொண்டிருப்பதால், சாலட்கள், தானியங்கள், ஸ்மூத்திகள் மற்றும் பிற உணவுகளோடும் சியா விதைகளை சேர்த்துக்கொள்ள முடியும்.
சால்மன் (வஞ்சிரம்) மீன்
பாலூட்டும் தாய்மார்களுக்கு சால்மன் (வஞ்சிரம் மீன்) ஒரு மிகச்சிறந்த உணவாகும். ஒரு உயர்தர புரத ஆதாரமாக இது இருப்பதோடு, ஒமேகா – 3 கொழுப்பு அமில DHA -ன் மிகச்சிறந்த ஆதார உணவுகளுள் ஒன்றாகவும் சால்மன் திகழ்கிறது. குழந்தையின் கண் மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகின்ற ஒரு வைட்டமினாக ஒமேகா – 3 கொழுப்பு அமில DHA அறியப்படுகிறது. ஆரம்பநிலை குழந்தைப்பருவ வளர்ச்சிக்கு அத்தியாவசியமான தைராய்டு ஹார்மோன் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்ற செலினியம் என்ற வைட்டமினும் சால்மன் மீனில் இருக்கிறது. தாய்ப்பாலில் காணப்படுகின்ற மற்றொரு வைட்டமினான அயோடினும் சால்மன் மீனில் இருக்கிறது. இந்த வைட்டமின் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு முக்கியமானது.