வெள்ளை முட்டை vs ப்ரவுன் முட்டை!(மருத்துவம்)

Read Time:3 Minute, 47 Second

சூப்பர் மார்க்கெட்டுக்குப் போனால் வெள்ளை முட்டைகள் ஒரு ட்ரேவிலும் ப்ரவுன் முட்டைகள் ஒரு ட்ரேவிலும் அடுக்கி வைத்திருப்பதைப் பார்த்திருப்போம். சிலர் அதை நாட்டுக் கோழி முட்டை என நினைத்துக்கொள்கிறார்கள். பலருக்கும் அது கோழிமுட்டைதானா என்பதே சந்தேகம். வெள்ளை முட்டைகளையே அதிகம் பார்த்து பழகிய நமக்கு ப்ரவுன் முட்டைகள் குழப்பதைத் தருகின்றன. சிலர் பிரவுன் முட்டைகள்தான் விலை அதிகம்.
எனவே அதில்தான் சத்துக்கள் அதிகம் என்பார்கள்.

வெள்ளை முட்டை, ப்ரவுன் முட்டை இரண்டில் எது பெஸ்ட்?   
உண்மையில் வெள்ளை நிறம், பிரவுன் நிறம் என்பன எல்லாம் கோழிகளைப் பொருத்த விசயம் என்கிறார்கள் நிபுணர்கள்.  பொதுவாக, வெள்ளை லெகான் இனத்தைச் சார்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிறக் கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியின் கோழியின வகைகள் பிரவுன் முட்டைகளையும் இடுகின்றன. (நாட்டுக்கோழிகள் சற்றே பழுப்பு நிறமான வெள்ளை முட்டைகள் இடுபவை, அதனால்தான் கலப்படக்காரர்கள் அளவில் சற்று பெரிய பிராய்லர் கோழி முட்டைகளை, டீத்தூள் டிகாக்‌ஷனில் முக்கி, நாட்டுக்கோழி முட்டைகள் என விற்கின்றனர்) மற்றபடி, பிரவுன் முட்டைகளோ வெள்ளை முட்டைகளோ இதன் ஊட்டச்சத்து மதிப்பில் எந்த வித்யாசமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

அப்படியானால், பிரவுன் முட்டைகள் ஏன் விலை அதிகமாக உள்ளன?

பிரவுன் முட்டைகள் வெள்ளை முட்டைகளைவிடவும் அளவில் சற்று பெரியவை. எனவே, அதன் விலையும் அதிகமாக உள்ளது அவ்வளவே.  

முட்டை ஓடுகளில் வித்யாசங்கள் உள்ளனவா?

நிறத்தைத் தவிர வெள்ளை முட்டையின் ஓட்டுக்கும், பிரவுன் முட்டையின் ஓட்டுக்கும் எந்த வித்யாசமும் இல்லை. சிலர், பிரவுன் முட்டையின் ஓடுகள் தடிமனானவை என்பார்கள். இதுவும் தவறு. அளவில் சற்றுப் பெரியவையே தவிர, தடிமனில் வித்தியாசம் கிடையாது.

மஞ்சள் கருவில் வேறுபாடு இருக்குமா?

இருக்காது. சிலர் பிரவுன் முட்டைகளின் மஞ்சள்கரு, வெள்ளை முட்டைகளைவிடவும் மஞ்சளாக இருக்கும் என்பார்கள். இது தவறு. பொதுவாக, கோழி சாப்பிடும் உணவுக்கும் அதன் மஞ்சள் கருவுக்கும் மட்டுமே தொடர்பு உண்டு. அதாவது, மக்காச்சோளம்,  சேந்தோபில் நிறமிகள், கீரை வகைகள், கீழா நெல்லி, அசோலா, போன்றவற்றைத் தீவனத்தில் கலந்து அளிக்கும் பொழுது  கருவின் மஞ்சள்தன்மை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.மற்றபடி, கோழி முட்டையின் ஓட்டின் நிறத்துக்கும் மஞ்சள்கருவின் நிறத்துக்கும் தொடர்பு இல்லை.     

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நீர் மருத்துவம் 10 டிப்ஸ்! (மருத்துவம்)
Next post செரிமானம் மேம்பட…!!(மருத்துவம்)