மணக்க… ருசிக்க…!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 58 Second

குடும்பத்தினரையும், உற்றார், உறவினர்களையும் மகிழ்விக்க விருந்தோம்பலில் முக்கிய பங்கு வகிப்பது ‘சாப்பாடு’. அதில் நிறைவு ஏற்பட்டு விட்டால், அதன் சந்தோஷமே ஈடு இணையில்லாத ஒன்றாகும். அதற்கு சில எளிய டிப்ஸ்…

  • சாம்பாரில் வெங்காயம் போடும்போது அதை வறுத்துப் போட்டால் சாம்பாரின் சுவை கூடும்.
  • பருப்பு ரசம் வைக்கும்போது, தக்காளியும், அரை தேக்கரண்டி நெய்யும் சேர்த்தால் சுவையே அலாதிதான்.
  • கீரையை சமைக்கும்போது, தேங்காய் எண்ணெயைக் கொண்டு தாளித்தால் அதிக மணத்துடனும், ருசியுடனும் இருக்கும்.
  • எந்த பாயசம் செய்வதாக இருந்தாலும், அதில் ஒரு கப் தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை அதிகமாகும்.
  • தோசை மாவில் தேங்காய்ப்பாலை சேர்த்து தோசை வார்த்தால் மணமாக இருப்பதுடன், மிகவும் சுவையாகவும் இருக்கும்.
  • ஒரு கரண்டி எண்ணெய் அல்லது நெய்யை காய வைத்து, பஜ்ஜி மாவில் ஊற்றி, மாவைக் கரைத்து பஜ்ஜி செய்தால் மணத்துடனும், ருசியுடனும் இருக்கும்.
  • ரவா தோசை செய்யும்போது இரண்டு டீஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென இருக்கும்.
  • ரசம் செய்து அடுப்பிலிருந்து இறக்கியவுடன் அதில் அரை தேக்கரண்டி சர்க்கரையை கலந்துவிட்டால் ரசம் சுவையாக இருக்கும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆரோக்கியமான உறவிற்கு ‘முன்னால்’ விளையாடுங்கள்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post கோடையை இதமாக்கும் மோர்!!(மகளிர் பக்கம்)