பொறியியல் மாணவர்களே! உங்களுக்கு வேலை நிச்சயம்!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 38 Second

பொறியியல் பட்டப்படிப்பு படிச்சா சரியான வேலை கிடைக்காது. அதிலும் நாம் விரும்பும் டாப் நிறுவனங்களில் நம்மை தேர்வு செய்ய மாட்டார்கள் என்ற ஒரு மாயை நிலவி வருகிறது. ‘‘பொறியியல் படிக்கும் பல மாணவர்கள் நல்ல நிறுவனங்களில் வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பளம் பெறுகிறார்கள். அதே சமயம் திறமை இருந்தும் பலருக்கு நல்ல நிறுவனங்களில் வேலை கிடைப்பதில்லை. காரணம் நிறுவனங்கள் எதிர் பார்க்கும் இன்றைய காலக்கட்டத்திற்கு ஏற்ற பிராக்டிக்கல் திறமையை நாம் வளர்த்துக் கொள்வதில்லை. அந்த திறமையை மாணவர்களுக்கு நாங்க சொல்லித் தருவது மட்டுமில்லாமல் அவர்களுக்கான ஒரு வேலையும் அமைத்து தருகிறோம்’’ என்கிறார் சூர்ய நாராயணன்.

இவர் தன் நண்பர் சாரங்கராஜனுடன் இணைந்து ஸ்கில்-லிங்க் (skill-lync) என்ற பயிற்சி நிறுவனம் மூலம் பொறியியல் மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டுதலாக இயங்கி வருகிறார்.
‘‘ஸ்கில் லிங்க் என்பது ஒரு எஜுகேஷனல் பிளாட்பார்ம். குறிப்பாக மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், பயோமெடிக்கல், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் துறை சார்ந்த பொறியியல் படிப்பு படிக்கும் மாணவர்களுக்காக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் பிளாட்பார்ம்.

பொதுவாக ஒரு கட்டிடம் கட்டும் போது, அந்த கட்டிடம் எப்படி இருக்கணும் என்று வரைந்து கொடுப்பது தான் சிவில் என்ஜினியரிங் படித்தவர்களின் வேலை. அதையே சாஃப்ட்வேர் மூலம் ஒரு கட்டிடத்தின் அனைத்து தேவைகளையும் நிறைவேற்ற முடியும் என்பதை அந்த சாஃப்ட்வேர் மூலம் கண்டறியலாம். இதனை கல்லூரியில் பாடமாக மட்டுமே தான் சொல்லிக் கொடுப்பார்கள். அதை நாம் அனுபவ ரீதியாக செய்து பார்க்கும் போது தான் முழுமையாகவும் அதே சமயம் கிரியேடிவ்வாகவும் அதனை செயல்படுத்த முடியும்.

அதாவது செயல்வழி கல்வி மூலமாக தெரிந்து கொண்டால் தான் நாம் படித்த பாடங்களை ஒரு நிறுவனத்தில் வேலையில் ஈடுபடும் போது அங்கு அதனை செயல்படுத்த முடியும். சிவிலுக்கு எப்படி தனிப்பட்ட சாஃப்ட்வேர் இருக்கோ அதேபோல் மற்ற துறைகளுக்கும் தனிப்பட்ட சாஃப்ட்வேர்கள் உண்டு. அதாவது ஒரு கார் வடிவமைக்கும் போது, அதன் ஆக்சிலேட்டர், சீட் பெல்ட் இயக்கம் மற்றும் கார் விபத்து ஏற்பட்டால், அதில் அதிகம் பாதிப்பு ஏற்படாமல் இருக்க என்ன செய்யணும் என அனைத்தையும் ஒரு சாஃப்ட்வேர் மூலம் பல மாற்றங்களை அமைத்து வடிவமைக்கலாம். அதைத்தான் நாங்க சொல்லித் தருகிறோம். இதை கல்லூரியில் பாடமாக சொல்லித் தருகிறார்கள்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், பாடமாக படிச்சாலும், அதை அனுபவரீதியாக செய்து பார்க்கும் போது தான், பல விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு… மின்சாரத்தில் இயங்கக்கூடிய பைக்குகள் பேமசானது. அதே சமயம் அந்த பைக்கில் பல பிரச்னைகளும் ஏற்படுவதாகவும், பாதுகாப்பற்றது என்று நினைக்க ஆரம்பித்தார்கள். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அதற்கு பேட்டரி மேனேஜ்மென்ட் என்ற பயிற்சி உண்டு. அதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதன் மூலம் ஒரு பேட்டரி எவ்வாறு இயங்குகிறது, அதில் இருந்து மின்சாரம் எவ்வாறு கசிய வாய்ப்புள்ளது என்பதை நாம் பிராக்டிக்கலா செய்து பார்க்கும்போது உணர முடியும்’’ என்றவர் இதற்கென தனிப்பட்ட பாடத்திட்டங்கள் இருப்பதாக
தெரிவித்தார்.

‘‘ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் தனிப்பட்ட தேவைகள் இருக்கும். அதாவது இன்றைய சூழலுக்கு ஏற்ப நிறுவனங்கள் என்ன எதிர்பார்க்கிறது என்பது குறித்து நாங்க பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம். அந்தந்த பாடங்களுக்கு ஏற்ப 20 பிராஜக்ட்கள் இருக்கும். அதை அவர்கள் செய்ய வேண்டும். இந்த ஒவ்வொரு பிராஜக்ட்களும் இன்றை உலகில் நாம் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் சார்ந்தும் இருக்கும். இதனை நாங்க ஒவ்வொரு நிறுவனத்துடனும் தனிப்பட்ட முறையில் இணைந்தும் செயல்பட்டு அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்பத்தான் இந்த பாடத்திட்டங்களை அமைத்திருக்கிறோம். இதன் மூலம் எங்க நிறுவனத்தில் பயிற்சி எடுக்கும் மாணவர்கள் அனைவருக்கும் நிறுவனத்தின் தேவை அறிந்து அங்கு வேலை பார்க்க முடியும். இப்படியாக ஒவ்வொரு பாடங்களுக்கு என 20 பிராஜக்ட்கள் என்றால் 1200க்கும் மேற்பட்ட பிராஜக்ட்களை நாங்க அமைத்திருக்கிறோம்’’ என்றவர் பயிற்சி மட்டுமில்லாமல் வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருவதாக தெரிவித்தார்.

‘‘எங்க நிறுவனத்தில் இணைய விரும்பும் மாணவர்கள் ‘skill-lync.com என்ற இணையத்தில் சென்று அவர்கள் விரும்பும் பயிற்சியினை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது தொலைபேசியிலும் எங்களை தொடர்பு கொள்ளலாம். எங்க நிறுவனத்தின் கோர்ஸ் கவுன்சிலர்களிடம் பேசலாம். அவர்கள் உங்களின் தேவை என்ன என்று அறிந்து அதற்கான பயிற்சியினை உங்களுக்கு பரிந்துரைப்பார்கள். ஆரம்பித்த போது ஆன்லைனில் ஒரு வருட பயிற்சிகளாகத்தான் ஆரம்பித்தோம்.

தற்போது சென்னையில் நேரடி பயிற்சி என்பதால் ஆறு மாத கால பயிற்சியினை அளித்து வருகிறோம். இதற்கு மாணவர்கள் மத்தியில் உள்ள வரவேற்பு குறித்து பெங்களூரூ, ஐதராபாத், மும்பை, தில்லி, பூனே போன்ற நகரங்களிலும் நேரடி பயிற்சிகளை ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளது. மேலும் ஆன்லைன் பயிற்சிகள் என்பதால், இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுக்க பல மாணவர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

தற்போது எங்களுடன் 350க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இணைந்துள்ளனர். எங்களிடம் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு குறைந்தபட்சம் ஐந்து நேர்காணலுக்கு ஏற்பாடு செய்து தருவோம், அதில் கண்டிப்பாக அவர்கள் ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலையில் இணைந்துவிடுவார்கள். நேர்காணலில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும், அவர்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை எங்களால் முடிந்த சப்போர்ட்டினை கொடுத்து வருகிறோம். தற்போது இந்த வேலை வாய்ப்பை இந்தியா மட்டும் அமைத்து தருகிறோம். வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கு இதனை ஒரு மேம்படுத்தப்பட்ட பயிற்சியாக கொடுத்து வருகிறோம்’’ என்றவர் இந்த பயிற்சி மையம் ஆரம்பித்த காரணம் பற்றி விவரித்தார்.

‘‘நானும் என்னுடைய கோ-பவுண்டர் சாரங்கன் இருவரும் பொறியியல் மாணவர்கள். நான் மெக்கானிக்கல் துறை தான் படிச்சேன். ஆனால் வேலைப் பார்த்தது ஐ.டி துறை. படிச்ச படிப்பிற்கும், பார்க்கும் வேலைக்கும் சம்பந்தமே இல்லைன்னு தோணுச்சு. அதன் பிறகு அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்க போனேன். அங்கு தான் சாரங்கனை சந்தித்தேன். அமேரிக்காவில் எல்லாமே பிராக்டிக்கலாக அன்றைய உலகில் நாம் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வாகத்தான் எங்களின் பாட திட்டங்கள் அமைந்திருந்தது. படிப்பு முடிச்சிட்டு அங்கு ஒரு நிறுவனத்தில் வேலைப் பார்த்தேன். அதே சமயம் என்னுடைய மனதில் இப்படிப்பட்ட எக்ஸ்போஷர் நம் இந்திய மாணவர்களுக்கு இல்லையே என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது.

அந்த சமயத்தில் தான் இப்படி ஒரு பயிற்சி மையம் ஆரம்பிக்கலாம்ன்னு திட்டமிட்டேன். என்னுடைய எண்ணத்தை சாரங்கனிடம் சொல்ல… அவருக்கும் அது சரின்னு பட இருவரும் இணைந்து 2016ல் இந்த பயிற்சி நிறுவனத்தை ஆரம்பித்தோம். தற்போது அனைத்து பொறியியல் துறையிலும் 500க்கும் மேற்பட்ட தனிப்பட்ட பயிற்சிகள் அமைத்திருக்கிறோம். தற்போது இந்தியாவில் மட்டுமே வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிறோம். வரும் ஆண்டுகளில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரும் திட்டம் உள்ளது. அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறோம். இதனைத் தொடர்ந்து பொறியியல் மட்டுமில்லாமல் மற்ற துறை அதாவது காமர்ஸ், அக்கவுன்ட்ஸ் போன்ற துறைகளுக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி தரும் எண்ணம் உள்ளது’’ என்றார் சூர்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post இளநரையை போக்கும் மருதாணி!(மருத்துவம்)
Next post மனதால் மிருதுவானவர்கள்! (மகளிர் பக்கம்)