அகத்திக் கீரையின் மகத்துவம்!! (மருத்துவம்)

Read Time:1 Minute, 40 Second

*உடல்சூட்டைத் தணிப்பதில் தனிச்சிறப்பு இக்கீரைக்கு உண்டு.

*அகத்திக்கீரைத் தைலத்தில் குளித்து வந்தால், பித்தம் தணிந்து மயக்கம், எரிச்சல், புகைச்சல் குணமாகும்.

*அகத்திக் கீரையை தேங்காய், மிளகு சேர்த்து சமைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட வாய்ப்புண் குணமாகும்.

*இக்கீரையை அரைத்து பற்றுப் போட அடிபட்ட வீக்கங்கள் குணமாகும்.

*இதன் சாற்றை நெற்றியில் தடவி ஆவி பிடிக்க தலைவலி நீங்கும்.

*தொண்டை ரணம், தொண்டை வலி இவற்றுக்கு இக்கீரையை பச்சையாக மென்று சாற்றினை உள்ளே விழுங்க குணமாகும்.

*பால் கொடுக்கும் தாய்மார்கள் இக்கீரையைச் சாப்பிட பால் நன்கு சுரக்கும். மூளை சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும்.

*வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த கீரையினை சாப்பிட வேண்டும். அடிக்கடி சாப்பிட்டால் வாய்வு உண்டாகும். வாயுத் தொல்லை உள்ளவர்கள் கண்டிப்பாக இக்கீரையை உண்ணக் கூடாது. பால் அருந்துவதால் உண்டாகும் நன்மை இக்கீரையை உண்பதால் உண்டாகும். ஜீரண சக்தியைப் பெருக்கும். பித்தத்தைத் தணிக்கும்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?!(அவ்வப்போது கிளாமர்)
Next post வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல!