புள்ளி இல்லா பொலிவு!!(மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 14 Second

சருமப் பராமரிப்பு என்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல. ஆரோக்கியம் சார்ந்த விஷயமும் கூட. உடல் ஆரோக்கியம் குறையில்லாமல் இருப்பவர்கள் கூட முகத்திலும் உடலிலும் ஆங்காங்கே வெண் புள்ளிகளைப் போல், திட்டுக்களை கொண்டிருக்கிறார்கள். இந்த வெள்ளைப் புள்ளிகள் வயது பேதமின்றி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தாக்குகிறது. முறையற்ற உணவுப்பழக்கமும் ஊட்டச்சத்து பற்றாக்குறையும் கூட இதற்கு காரணமாக இருக்கலாம். இந்த வெள்ளை புள்ளிகள் ஒரு சிறிய வடிவில் நெற்றி, தொடை, மூக்கு போன்ற இடங்களில் தோன்றி முகத்தின் வசீகரத்தைக் குறைக்கும். இந்த மாதிரியான வெண்புள்ளிகளை இயற்கைப் பொருட்களைக் கொண்டு எளிதாக நீக்கலாம்.

*½ டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன், 1 டீஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்துக் கலந்து மூக்கு, தாடை, நெற்றி போன்ற இடங்களில் தேய்க்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதை தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

*3 சொட்டுகள் டீட்ரி ஆயிலுடன், ½ டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து சருமத்தில் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, 5 நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீர் கொண்டு அலச வேண்டும்.

*4 சொட்டுகள் ஆப்பிள் சிடர் வினிகருடன் 1 டீஸ்பூன் டிஸ்டில்டு வாட்டர் சேர்த்துக் கலந்து நெற்றியில், தாடையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி, 5 நிமிடங்கள் கழித்து நீரினால் கழுவவும்.

*2 டேபிள் ஸ்பூன் சமைத்த ஓட்ஸுடன் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து தாடை மற்றும் நெற்றியில் தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்துப் பின் நீரினால் அலசவும்.

*½ டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 1 டீ ஸ்பூன் தண்ணீருடன் கலந்து பாதிப்படைந்த இடத்தில் நன்றாகத் தேய்த்து, பின்பு வெது வெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு 2-3 தடவை இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

*½ டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் நன்றாக தேய்த்து பிறகு ஓர் ஈரமான துணியைக் கொண்டு துடைத்து எடுக்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கிச்சன் டிப்ஸ்!!(மகளிர் பக்கம்)
Next post எழிலார்ந்த புன்னகையின் அரசி கே.ஆர்.விஜயா!! (மகளிர் பக்கம்)