ABC ஜூஸ்… ஏராளமான பலன்கள்! (மருத்துவம்)
வெயிலுக்கு இதமாய் சில்லென ஜூஸ் குடிப்பது உடலுக்குக் குளிர்ச்சி. அதிலும் சத்து நிறைந்த ஜூஸாக அது இருந்தால் ஆரோக்கியமும் நம் வசமாகும். அப்படி ஒரு அதிரிபுதிரி ஜூஸ்தான் ஏபிசி ஜூஸ். அதாவது, ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றும் கலந்தது இது. செய்வதற்கு எளிமையான இந்த ஜூஸ் பலன்களை அள்ளித் தரும் அமுத சுரபி. மிட் மார்னிங் நேரம் எனப்படும் காலை உணவுக்குப் பிறகு மதிய உணவுக்கு முன் இடைப்பட்ட நேரத்தில் தேநீரும் நொறுக்ஸும் சாப்பிடும் நேரத்தில் அவற்றுக்குப் பதிலாக இதனை
எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள்
ஆப்பிள் – 1
பீட்ரூட் – 1(சிறியது)
கேரட் – 2(மீடியம் சைஸ்)
செய்முறை:
ஆப்பிள், கேரட், பீட்ரூட்டை நன்றாகக் கழுவிய பின், மேல் தோலை நீக்கிவிடவும். பிறகு, இவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அதனை மிக்ஸியில் போட்டு நன்றாக ஜூஸாகும்படி அடிக்க வேண்டும். இதனை அப்படியே ஒரு டம்ளரில் ஊற்றிப் பருகலாம். இதனோடு எலுமிச்சைச் சாறு, புதினா போன்றவற்றைக் கலந்தும் சாப்பிடலாம். ருசி வேண்டும் என நினைப்பவர்கள் எலுமிச்சையைத் தவிர்க்கலாம்.
பலன்கள்:
ஆப்பிளில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. எலுமிச்சை சேர்த்தால் அதிலிருக்கும் சிட்ரிக்கும் வைட்டமின் சியும் இதனோடு கிடைக்கும். கேரட்டிலும் பீட்ரூட்டிலும் உள்ள கரோட்டினாய்டுகள் கண் பார்வைத் திறன் மேம்பட உதவும். மேலும், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களையும் மேம்படுத்தும். இவ்விரண்டிலும் உள்ள அந்தோசயனானின் உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்துகிறது. சருமத்தை பாதுக்காக்கிறது. இதன் ஆண்டிஆக்ஸிடண்ட்கள் சருமம் வயதாவதிலிருந்து காக்கிறது. மணமாகப் போகும் இளம் பெண்கள் இதனைப் பருகினால் சருமம் பளிச்சென மிளிரும்.
உடலுக்கு மிக முக்கியமான வைட்டமின்களான ஏ, பி1, பி2, பி3, பி6,பி9, சி, இ மற்றும் கே இந்த ஜூஸில் நிறைந்துள்ளன. இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீஷியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் போன்ற பல தாது உப்புகளும் நிறைந்துள்ளன. நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கு தினமும் பருகப் பரிந்துரைக்கப்படுகிறது. செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், வயிற்றில் புண், அல்சர் போன்ற பிரச்னைகள் இருப்பவர்களுக்கு இந்த ஜூஸ் அருமருந்து. அலர்ஜி பிரச்னைகள் உள்ளவர்கள், வாயுக் கோளாறு உள்ளவர்கள் இதனை உணவில் ஒரு பகுதியாகச் சேர்த்து வரலாம்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...