ஃபேஷன் A – Z !! (மகளிர் பக்கம்)
கடந்த இதழ்களில் ஆண்கள் அலுவலகம் செல்ல அணியக்கூடிய பேன்ட், ஷர்ட், டீஷர்கள் குறித்து தெளிவாகப் பார்த்தோம். இந்த இதழில் அவர்களுக்கு மிகவும் சவுகரியமான மற்றும் வசதியான ஷு கேஷ்வல் உடைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். பெண்களுக்கு தான் புடலை, ஜீன்ஸ், காக்ரா, ெலஹங்கா, ஸ்கர்ட், டாப், குர்தா… என பல ஃபேஷன் உடைகள் உள்ளன. அவர்கள் எந்த உடைகளையும் அவர்களின் வசதிக்கு ஏற்ப மாற்றி அணிந்துக் கொள்ளலாம்.
ஆண்களைப் பொருத்தவரை பேன்ட், ஷர்ட், டீஷர்ட், ஷார்ட்ஸ் என குறிப்பிட்டு சொல்லக்கூடிய உடைகளைத் தவிர வேறு உடைகள் என்று எதுவும் இல்லை. அவர்களுக்கு இருக்கும் உடைகளிலேயே எவ்வாறு மாற்றி ஃபேஷன் அமைக்கலாம் என்பது தான் இன்றைய ஃபேஷன் டிசைன்களின் முக்கிய பங்காக உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் விரும்பி அணியும் கேஷுவல் உடைகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
கேஷுவல் உடைகள் என்று சொன்னாலே மனதில் ஒரு ரிலாக்சேஷன் தோன்றும். தினமும் அணியக்கூடிய உடையாக இருந்தாலும், ஆண்களுக்கு ஒரு அழகான தோற்றத்தினை கொடுக்கும். ஒருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் வசதிக்கு ஏற்ப அமைக்கப்படும். இந்த உடைகள் ஃபார்மல் உடைபோல் குறிப்பிட்ட முறையில் அணிய ேவண்டும் என்றில்லை. மிக்ஸ் மேட்ச் ெசய்து அணியும் வசதி இந்த உடைகளுக்கு உண்டு.
கேஷுவல் உடைகள் அணிய எந்தவித ேகாட்பாடுகளும் அவசியமில்லை. இந்த உடையினை இப்படித்தான் அணிய வேண்டும் என்று அந்த ஒரு சட்டதிட்டங்களும் கிடையாது. உங்களுக்கு எப்படி உடையினை அணிய பிடிக்கிறதோ அப்படி எல்லாம் அணியலாம். அவை எல்லாமே கேஷுவல் உடைகள். ஆனால் அவ்வாறு அணியும் போது சில சிக்கல்கள் ஏற்படும். காரணம் ஏற்கனவே சொன்னது போல் கேஷுவல் உடைகள் அணிவற்கு எந்த வித கோட்பாடுகள் மற்றும் முன் வரையறுக்கப்பட்ட விதிகள் கிடையாது என்றாலும், வீட்டில் அணியும் சாதாரண உடையினையே கேஷுவல் உடை என்று வெளியே அணிந்து செல்ல முடியாது.
சூழ்நிலை மற்றும் நாம் செல்லும் இடத்தைப் பொறுத்து கேஷுவல் உடைகள் அணிவதில் வித்தியாசம் ஏற்படலாம். அந்த சமயம் எந்த உடையினை எப்படி அணிய வேண்டும் என்ற குழப்பமான மனநிலை உங்களுக்குள் ஏற்படும் வாய்ப்புள்ளது. நான் அதிகப்படியாக என்னை அலங்காரம் செய்துக் கொள்ளலாமா அல்லது எப்போதும் போல் சாதாரணமாக செல்லலாமா என்ற பல சிந்தனைகள் உங்களுக்குள் தோன்றும். இந்த சமயத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய பொற்கால விதி என்னவென்றால், சாதாரணமாக உடைகளை அணியாமல் கொஞ்சம் கிராண்டான உடைகளை அணிவது என்றுமே பாதுகாப்பானது. கேஷுவல் உடைகள் அணியும் போது, உங்கள் சாதாரண தோற்றத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.
1. சின்ன பையன் மாதிரி உடை அணியாமல் முதிர்ந்த ஆண் போல் உடை அணிய கற்றுக் கொள்ள வேண்டும்.
பெரும்பாலான ஆண்கள் கேஷுவல் உடை அணியும் போது அவர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு… தாங்கள் இளமையாகவும் என்றும் யூத் போல காட்சியளிக்க வேண்டும் என்று கேஷுவல் உடைகளை தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பது தான். நீங்கள் நேர்த்தியாக உடை அணியவேண்டும் என்று நினைத்தால் சின்ன பையன் போல் எந்த ஒரு கோட்பாடுகள் இல்லாமல் உடைகள் அணிவதைத் தவிர்த்து முதிர்ந்த ஆண்கள் போல் உடையினை அணிய பழகிக் கொள்ள வேண்டும்.
ஒரு ஆணுடைய முதிர்ந்த தோற்றம் தான் மற்றவர்களை ஈர்க்க செய்யும். அந்த நிலைதான் ஆண் மற்றும் சிறுவன் என்ற இரண்டு நிலைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டும். அதற்காக அப்பாக்கள் உடை அணிவது போல் அணிய வேண்டும் என்றில்லை. நீங்கள் இனிமேலும் டீனேஜர் இல்லை. வளர்ந்த ஆண் என்பதை சுட்டிக்காட்ட அதற்கேற்ற உடையினை தேர்வு செய்து அணிய வேண்டும் அவ்வளவு தான். வளர்ந்த ஆண்கள் அணியக்கூடிய உடை என்றால் என்ன என்று உங்கள் மனதில் கேள்வி எழலாம். அதற்கு இந்த ஒரு விஷயத்தை மட்டும் கடைப்பிடித்தால் போதும். உங்களின் சட்டை அல்லது டீஷர்ட்களில் கார்டூன் படங்கள், ஸ்லோகன்கள் கொண்ட வார்த்தைகள், கண்களை பறிக்கும் நிறங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அவ்வளவு தான்.
2. பொம்மை பட ஷர்ட் மற்றும் டீஷர்ட்களை தூர எறியுங்கள்
சின்ன பையன் என்ற தோற்றத்தை மறைக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய முதல் கோட்பாடு… பொம்மை படங்கள், கார்ட்டூன் படங்கள் கொண்ட டீஷர்ட்கள் மற்றும் ஷர்ட்களை அணிவதை தவிர்ப்பது. அதற்கு பதில் ஒரே நிறம் அல்லது கோடு போட்ட டீஷர்ட்களை தேர்வு செய்யலாம். விழாக்கள் மற்றும் விசேஷங்களுக்கு செல்லும் போது… உங்களின் தோற்றத்தினை மேலும் மெறுகேற்ற நீங்கள் டீஷர்ட்களை தவிர்த்து அழகான கேஷுவல் ஷர்ட்களுக்கு மாறலாம். அதிலும் அழகான காட்டன் ஷர்ட்கள் எல்லாவிதமான விசேஷங்களுக்கும் ஏற்றதாக இருக்கும்.
3. உங்களுக்கு அழகான தோற்றம் அளிக்கும் பேன்ட்களை அணியுங்கள்
கேஷுவல் பேன்ட் என்றால் அதற்கு ஜீன்ஸ் பேன்ட் போல் வேறு எந்த பேன்ட்டும் ஈடாகாது. இங்க் நீலம், வான் நீலம் அல்லது அடர்ந்த நீலம்… என எந்த நிற ஜீன்ஸ் பேன்ட்டாக இருந்தாலும், அவை என்றுமே ஃபேஷன் உலகில் இருந்து நீக்காது, நீக்கவும் முடியாது. இதில் பல மாறுபாடுகள் ஏற்படுமே தவிர ஜீன்ஸ் பேன்ட்டினை ஆண்களின் கேஷுவல் உடைப் பட்டியலில் இருந்து எடுக்க முடியாது. இந்த ஜீன்ஸ் பேன்ட்களுக்கு மேலும் ஸ்டைல் கொடுக்க காலின் கஃப் பகுதியினை உள்புறமாக மடக்கி விடலாம் அல்லது பட்டன் டவுன் ஷர்ட்கள் (சாதாரண ஃபார்மல் ஷர்ட்தான்.
ஆனால் இதன் காலரிலும் பட்டன்கள் இருக்கும்) அணியலாம் அல்லது ஸ்ேபார்ட்ஸ் கோட் (கோட் சூட் போல் ஃபார்மலாக இல்லாமல், கேஷுவலாக அணியும் கோட்) அணியலாம். ஜீன்ஸ் பேன்ட்டினை கேஷவலாக அணியும் போது, அதில் அதிகமாக வேலைப்பாடுகள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கேஷுவல் டீஷர்ட் மற்றும் ஷர்ட் அணியும் ேபாது பேகி ஜீன்ஸ் அணிவதை தவிர்க்க வேண்டும். மேலும் இடுப்பில் ஃபிட்டாக பொருந்தக்கூடியதாக இருக்கவேண்டும். இரண்டு நிமிஷத்திற்கு ஒரு முறை பேன்டினை தூக்கிவிட்டு அட்ஜெஸ் செய்யக்கூடாது. பார்க்கும் போது மற்றவர்களுக்கு அசவுகரியமாக இருக்கும். அதற்கு பெல்ட் அணிந்து ஃபிட்டாக இருக்கலாம். எல்லாவற்றையும் விட கவனிக்க வேண்டியது பேன்ட்கள் கால்களுக்கு கீழ் தவழக்கூடாது.
ஜீன்ஸ் ஆண்களின் பெர்ஃபெக்ட்டான உடை தான். ஆனால் அது மட்டும் பேன்ட் என்று இல்லை. உங்களின் அலமாரியினை ஜீன்ஸ் பேன்ட் கொண்டு மட்டுமே நிரப்பாமல் ஒன்று இரண்டு சினோஸ் பேன்டிற்கும் இடம் இருக்க வேண்டும்.
4.ஷூக்களை வகைப்படுத்தவும்
கேஷ்வல் உடைக்கான காலணிகள் என்றால் அது லோஃபர் ஷுக்கள் தான் பெஸ்ட் மேட்ச். ஆனால் இந்த லோஃபர் ஷுக்களிலேயே பல டிசைன்கள் உள்ளன. லோஃபபர் ஷுக்கள் என்பது ஆண்கள் அணியும் கட்ஷு வகை. இதில் பென்னி ஸ்டைல், டாசில்ட் மற்றும் ஹார்ஸ்பிட் என பல டிசைன்கள் உள்ளன. இவை அனைத்துமே ஜீன்ஸ், சினோஸ் அல்லது ஷார்ட்ஸ் போன் கேஷுவல் பேன்ட்களுக்கு மேலும் பாலிஷ் தோற்றத்தினை கொடுக்ககூடியவை.
மேலும் லோஜப்பர் காலணிகள் மட்டுமே கேஷுவல் உடைக்கான காலணிகள் என்றில்லை. ஸ்னீக்கர்களும் கேஷுவல் உடைக்கு பெஸ்ட் ஆப்ஷன் தான். வெள்ளை நிற ஸ்னீக்கர் ஷுக்கள் ரிலாக்ஸ் தோற்றத்தை அளிப்பது மட்டுமல்லாமல் எல்லாவிதமான கேஷுவல் டிரவுசர்கள் மற்றும் ஷார்ட்களுக்கும் சூட்டாகும். ஸ்னீக்கர்கள் பெரும்பாலும் லைட் நிற ஷேட்களில் வருவதால், அதனை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அழுக்கான ஸ்னீக்கர் காலணிகள் உங்களின் அழகான கேஷுவல் உடையின் தோற்றத்திற்கு ஒரு கரும்புள்ளியாக இருக்கும்.
5. அணிகலன்கள்
ஆண்களுக்கு பெண்கள் போல் பல விதமான அணிகலன்கள் இல்லை என்றாலும், அவர்கள் உடைக்கு ஏற்ப வாட்ச், பெல்ட், சன்கிளாஸ் போன்றவற்றை அந்தந்த உடைக்கு ஏற்ப தேர்வு செய்து அணிய வேண்டும். அது தான் உங்களின் தோற்றத்திற்கு ஒரு நிறைவை கொடுக்கும். மேலும் உங்களின் பர்சனாலிட்டியை மேம்படுத்தி முழுமையான தோற்றம் அளிக்க உதவும். ஃபார்மல் உடை அணியும் போது பெல்ட் மற்றும் ஷுக்களில் நிறம் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற வரை முறை உண்டு. ஆனால் கேஷுவல் உடைக்கு அது பொருந்தாது. அதே சமயம் கண்களைப் பறிக்கும் நிறங்கள் கொண்ட பெல்ட் மற்றும் ஷுக்களை அணிவதை தவிர்க்க வேண்டும். சன்கிளாஸ் பொருத்தவரை கிளாசிக் ஸ்டைல் அணியலாம்.
அடுத்து மணிக்கட்டில் அணியக்கூடிய வாட்ச்கள். கேஷுவல் உடைக்கு அணியும் வாட்ச்கள் மிகவும் சாதாரணமாக இருந்தால் போதும். அதிக விலை உயர்ந்த மற்றும் அலங்கார பொருளாக இருக்கக் கூடாது. வெள்ளை டயல், கருப்பு நிற ஸ்ட்ராப் உள்ள வாட்ச் அணிவதே கேஷுவல் உடைக்கு போதுமானது. பொதுவாக ஆண்கள் தங்களின் உடையினை தேர்வு செய்யும் போது அவர்கள் ஃபேஷன் உலகினை தான் நாடுகிறார்கள். அப்போது தான் நல்ல உடைகள் அணிய முடியும் என்பது அவர்களின் கண்ணோட்டம். ஃபேஷன் உலகில் நிலவும் உடைகள் அனைத்தும் சாதாரண மக்களுக்கு பொருந்தாது. அது ஃபேஷன் துறையை சார்ந்தவர்களுக்கானது.
நாம் சாதாரணமாக இருக்கும் போது நம்முடைய உடையும் கேஷுவலாக இருந்தால் தான் பார்க்க அழகாக இருக்கும். அதனால் நீங்கள் ஃபேஷன் உலகில் உள்ள உடையினை பின்பற்றாமல் அதற்கு நேர்மாறாக இருக்கும் உடையினை தேர்வு செய்ய வேண்டு்ம்.
ஃபேஷன் உலகில் இருக்கும் உடைகள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் செட்டாகும். அதன் பிறகு வேறு ஃபேஷன் டிரண்டாகும். இவ்வாறு காலத்திற்கு ஏற்ப நம் உடையினை தேர்வு செய்வதை தவிர்த்து எவர் கிரீன் என வருடம் முழுக்க அணியக்கூடிய உடைகளை தேர்வு செய்து அணியலாம். நீங்கள் டிரண்டியாக இருப்பதைக் காட்டிலும் கிளாசியாகவும் ஸ்டைலாகவும் இருந்தால் தான் உங்களின் தோற்றம் ஆண்டுகள் கடந்தாலும், என்றுமே மிடுக்காக இருக்கும் என்பதை அனைத்து ஆண்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.