இந்திய பெண்களுக்காகவே இந்திய மேக்கப்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 4 Second

‘எங்களின் டார்கெட் இளைய தலைமுறையினர் தான். அவங்க தான் கல்லூரியில் படிக்கிறாங்க… வேலைக்கு போறாங்க… அவங்களுக்கு தனக்கான மேக்கப் என்ன என்று புரியாமல் குழப்பத்தில் இருக்காங்க… இவங்களுக்கு மேக்கப் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவே ‘சுகரை’ ஆரம்பித்தேன்’’ என்கிறார் சுகர் காஸ்மெட்டிக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இணை நிறுவனரான வினிதா சிங்.‘‘சுகர் முழுக்க முழுக்க இந்திய பெண்களின் சரும நிறத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட அழகு சாதன பொருட்கள். பொதுவாகவே இந்திய பெண்களுக்கு மேக்கப் குறித்து ஒரு வித பயம் எப்போதுமே உண்டு. காரணம் ஆசிய பெண்களின் சருமம் டஸ்கி டோன் கொண்டது.

அவர்கள் வெள்ளை நிறம் கிடையாது. மாநிறம் முதல் கருப்பு நிறம் தான் அவர்களின் சரும நிறம். ஆனால் மார்க்கெட்டில் கிடைப்பது எல்லாம் வெளிநாட்டு மேக்கப் பொருட்கள். வெள்ளை சருமத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படும் பொருட்கள் நமக்கு எப்படி செட்டாகும். கருப்பு நிறத்தை வெள்ளையாக மாற்றக்கூடிய அழகு சாதனப் ெபாருட்கள் ஏராளம். ஒருவரும் பிறவி சரும நிறத்தினை இது போல் அழக சாதனப் பொருட்கள் கொண்டு மாற்ற முடியாது. அதற்கான சிகிச்சை இருந்தாலும் அவை நீண்ட நாட்கள் பலனும் தராது. அழகான மாசுமறுவற்ற மாநிற சருமம் கொண்ட நம்மூர் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் சுகர் காஸ்மெட்டிக்ஸ்.

சென்னை ஐ.ஐ.டியில் படிப்பை முடிச்சிட்டு ஏதாவது ஒரு தொழில் ஆரம்பிக்கலாம்னுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. முதலில் பெண்களின் உள்ளாடை குறித்து நிறுவனம் துவங்கினேன். அதன் பிறகு மனிதவள நிறுவனம் ஒன்றை இயக்கி வந்தேன். ஐந்து வருடம் நிறுவனங்களை நிர்வகித்து வந்தாலும், இவை இரண்டுமே பெரிய அளவில் எனக்கு சக்சஸ் தரவில்லை. அதனால் நானும் என் கணவர் கவுஷிக் இருவரும் ப்யூட்டி டிஷ்கவரி பிளாட்ஃபார்ம் ஒன்றை துவங்கினோம். இது முழுக்க முழுக்க அழகு குறிப்பு குறித்த இணையதளம். பெண்களுக்கான மேக்கப் குறித்த பயிற்சி அளிக்கும் தளம்ன்னு சொல்லலாம்.

அதாவது, அலுவலகம், கல்லூரிக்கு செல்லும் பெண்கள் எப்படி சிம்பிளான முறையில் தங்களை அழகுப்படுத்திக் கொள்ளலாம்ன்னு டிப்ஸ் போல் கொடுக்க ஆரம்பிச்சோம். நம்மூரில் உள்ள பெண்கள் மேக்கப் குறித்து மிகவும் கவனமாக இருப்பது பற்றி தெரிய வந்தது. குறிப்பாக கருப்பு நிற சருமம் கொண்டவர்கள். இவர்களுக்கான மேக்கப் மார்க்ெகட்டில் இல்லை என்பதை புரிந்து கொண்டோம். மேலும் அதை அவர்கள் தேர்வு செய்வதில் மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்பதையும் தெரிந்து கொண்டோம்.

தொலைக்காட்சி மற்றும் வெள்ளித்திரையில் தோன்றும் பெண்கள் அணியும் மேக்கப்பினை இவர்கள் விரும்புவதில்லை. அவர்களின் அழகை சிம்பிள் மேக்கப் கொண்டு உயர்த்திக் காட்டவே விரும்பினாங்க. பெரிய அளவில் ஃபவுண்டேஷன், கான்டோர் இல்லாமல் கண்கள் மற்றும் உதட்டினை அழகாக எடுத்துக் காட்ட விரும்பினாங்க. இவை எல்லாம் எங்களின் இணையதள பிளாட்பார்ம் மூலம் மூன்று வருட ஆய்விற்கு பிறகு நானும் கவுஷிக்கும் புரிந்துகொண்ேடாம்.

பெண்களின் தேவை என்ன என்று புரிந்தது. அதை செயல்படுத்த நினைச்சோம். 2015 ஆறு மேக்கப் பொருட்களை அறிமுகம் செய்தோம். கண் மை, மஸ்காரா மற்றும் ரெட், பெரி, பிங்க், நியூட் என நான்கு ஷேட் கொண்ட லிப்ஸ்டிக்கினை அறிமுகம் செய்தோம். இதனை எங்களின் இணையத்தில் தான் முதலில் விளம்பரம் செய்தோம். ஏற்கனவே மூன்று வருடம் மக்களின் நம்பிக்கையை பெற்று இருப்பதால், எங்களின் பொருட்களுக்கு அவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது.

அதனைத் தொடர்ந்து 2018ல் எங்களின் முதல் கடையினை துவங்கினோம். காரணம் இணையத்தில் பொருட்கள் விற்பனை செய்தாலும், அதை அவர்கள் தங்கள் மேல் அணிந்து பார்க்கும் போது தான் முழுமையான தோற்றம் கிடைக்கும். அதனால் தான் கடையினை ஆரம்பித்தோம். இங்க பெண்கள் வந்து தங்களுக்கான சரியான மேக்கப் பொருட்களை தங்கள் மேல் அணிந்து தேர்வு செய்யலாம்’’ என்றவர் தற்போது சொந்தமாக 100 கடைகளும், 40 ஆயிரம் ரீடெயில் கடைகளிலும் தன்னுடைய மேக்கப் பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.

‘‘சென்னையில் பிரபல மாலில் இப்போது திறந்திருக்கும் கடை எங்களின் 100வது கடை. இந்த குறுகிய காலத்தில் இவ்வளவு கடை திறந்திருக்கிறோம்ன்னு நினைக்கும் போது ரொம்பவே சந்ேதாஷமா இருக்கு. எங்களின் மைல்ஸ்டேன் வரும் காலத்தில் உலகம் முழுதும் குறைந்தபட்சம் 500 கடைகளாவது திறக்கணும் என்பது தான் எங்களின் விருப்பம். ஆரம்பத்தில் ஆறு மேக்கப் பொருட்கள் தான் ஆரம்பித்தோம். தற்போது 550 மேக்கப் பொருட்கள் எங்களிடம் உள்ளது. லிப்ஸ்டிக், கண் மை, மஸ்காரா மட்டுமில்லாமல், ஃபவுண்டேஷன், பேஸ் ஹைலைட்டர், பிளஷ் ஸ்டிக், பிரைமிங் மாய்ச்சரைசர், ஐஷேடோ, பரோ டிபைனர், பேஸ் ஹைலைட்டர் என பல மேக்கப் பொருட்கள் அவரவர் சரும நிறத்திற்கு ஏற்ப வடிவமைத்திருக்கிறோம்.

அதாவது சிகப்பு நிற லிப்ஸ்டிக் எல்லாருக்கும் பொருந்தும், அதே சமயம் எல்லாருக்கும் ஒரே நிற ஷேட் தான் பொருந்தாது. ஒரு குறிப்பிட்ட சருமத்திற்கான சிகப்பு நிற லிப்ஸ்டிக் ஷேட்டினை தேர்வு செய்ய ஆயிரம் சிகப்பு நிற ஷேட்களை உருவாக்கி அதிலிருந்து தான் ஒவ்வொரு சரும நிறத்திற்கான ஷேட்டினை தேர்வு செய்தோம். லிப்ஸ்டிக் மட்டுமில்லாமல், காம்ப்பேக்ட் பவுடர், ஃபவுண்டேஷன் முதல் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து தேர்வு செய்திருக்கிறோம். அதனால் தான் எங்க அனைத்து ஸ்டோர்களிலும் டிரயல் செய்ய பல வித மேக்கப் ஷேட்கள் இருக்கும். வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான ஷேட்டினை அணிந்து பார்த்து தேர்வு செய்து மேக்கப் அணியும் போது, அவர்களை மேலும் அழகாக எடுத்துக்காட்டும். கடை மட்டுமில்லாமல் எங்களின் சுகர் ஆப் மூலமாகவும் அவர்கள் ஷாப்பிங் செய்யும் வசதி அமைத்திருக்கிறோம்.

நேபாள், மத்திய கிழக்கு, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் எங்களின் பொருட்கள் விற்பனைக்கு உள்ளன. மகாராஷ்ட்ரா, ஜெர்மன், கொரியா, இத்தாலி, தாய்வான் போன்ற இடங்களில் எங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. தற்ேபாது உலகளவில் நாங்க பரந்து விரிந்திருந்தாலும், தொழில் ஆரம்பித்த போது ரொம்பவே சிரமப்பட்டோம். ஒரு பெண் சுயமாக தொழில் ஆரம்பிக்கும் போது சந்தித்த அனைத்து பிரச்னைகளையும் நான் சந்தித்தேன்.

அதில் முக்கியமானது, தொழில் துவங்க மூலதன முதலீடு செய்ய யாரும் முன்வரவில்லை. பல போராட்டங்களுக்கு பிறகு எங்க நிறுவனத்திற்கு முதலீடு செய்ய ஒருவர் முன்வந்தார். அவர் கொடுத்த ஒவ்வொரு மூலதனத்தையும் நாங்க ரொம்பவே பொக்கிஷமாக பயன்படுத்தினோம். அதுதான் எங்களின் வளர்ச்சிக்கு காரணம். அதில் நாங்க செய்த முக்கிய சேமிப்பு விளம்பரத்திற்காக பெரிய அளவில் செலவு செய்யாததுதான். தொலைக்காட்சி மற்றும் இதர ஊடகங்களில் நாங்க விளம்பரம் செய்யவே இல்லை. நேரடியாக வாடிக்கையாளர்களை இணையம் மூலமாக தொடர்பு கொண்டோம்.

எங்களின் விளம்பரதாரர் இணையத்தில் எங்களை நம்பி எங்களின் பொருட்களை பயன்படுத்தும் இன்ப்புளூவன்சர்கள்தான். வாய் வார்த்தையாகவும், ஒருவர் மூலமாக மற்ெறாருவர் என்று தான் எங்களின் பொருட்களை வாங்க ஆரம்பித்தாங்க. இப்போது நாங்களும் அழகுசாதன பொருட்களில் முக்கிய பிராண்ட் என்ற பெயரை தக்கவைத்திருக்கிறோம். காரணம் மேக்கப் பொருட்களைப் பொறுத்தவரை, பயன்படுத்திய இரண்டே நாட்களில் அதன் தரம் பற்றி தெரிந்துவிடும்’’ என்றவர் பெண்கள் பலரும் சுயதொழிலில் முன்னேற வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்தார்.

‘‘ஒரு பெரிய நிறுவனத்தை துவங்கி பெண்ணால் திறம்பட நடத்த முடியுமா என்ற சந்தேகம் இன்று வரை தொழில்துறை சார்ந்த பலரின் மத்தியில் இருக்கிறது. சுயதொழில் ஆண்களுக்கான தலம் என்ற முத்திரையை கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் தகர்த்து வருகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் உங்கள் கண் முன்னால் நிற்கிறேன். என்னைப் பின்பற்றி பல பெண்கள் இந்த பாதையினை தேர்வு செய்து தங்களுக்கான அடையாளத்தை நிலைநாட்டலாம்’’ என்றார் வினிதா சிங்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உன்னி என் கூட இரண்டு நாள் பேசவே இல்லை… கோச்சுக்கிட்டான்! (மகளிர் பக்கம்)
Next post 7 உமிழ் நீர் உண்மைகள்!!(மருத்துவம்)