பெருங்காயத்தின் பெரு மதிப்பு !!(மருத்துவம்)

Read Time:4 Minute, 32 Second

இந்திய சமையலில் உள்ள மசாலா பொருட்களில் பெருங்காயத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. இது உணவிற்கு ஒரு வித்தியாசமான சுவையையும், மணத்தையும் கொடுக்கிறது. இதிலுள்ள மருத்துவ குணங்களால் பெருங்காயம் “கடவுளின் அமிர்தம்” என பல நாட்டு மக்களால் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட இதன் மணமானது வெங்காயம் மற்றும் பூண்டுகளின் மணத்தைதான் நியாபகப்படுத்துகிறது. பால் பெருங்காயம், சிவப்பு பெருங்காயம் என இரண்டு வகை இதில் உண்டு. இந்தியாவில் பொடி மற்றும் துண்டு வடிவத்தில் பயன்படுத்தப்படும் பெருங்காயத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*செரியாமை, பசியின்மையைக் குணப்படுத்்தும்.

*அசுர வளர்ச்சியை வெகுவாகக் குறைக்கும்.

*ஐரோப்பிய நாடுகளில் பெருங்காயம் பரவ, அலெக்சாண்டரின் படையே காரணமானதாகவும் ஒரு வரலாற்றுக் குறிப்பு சொல்கிறது.

*பெர்சியா, ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் வணிகர்களால் இந்தியாவில் பெருங்காயத்தின் தாக்கம் அதிகரித்தது.

*ஃபெருவிக் அமிலம், அம்பெல்லி ஃபெரோன், அஸாரெசினால் போன்ற வேதிப் பொருள்கள் பெருங்காயத்துள் பொதிந்து கிடக்கின்றன.

*பெருங்காயம் சினைப்பை ஹார்மோன்களை முறையாக்க உதவுகிறது.

*பெருங்காயம், கருஞ்சீரகம், இஞ்சி சேர்த்து தயாரிக்கப்படும் ஸ்டஃப்டு, பூரி வகைகள், வங்காள மக்களின் பாரம்பரியத்தில் இணைந்த ஒன்று.

*சாளுக்கிய மன்னன் மூன்றாம் சோமஸ்வரனால் எழுதப்பட்ட ‘Mawasollasm’ என்னும் நூலில், அரிசி கழுவிய நீரில் சிறிது புளி, பெருங்காயம், ஏலம், இஞ்சி சேர்த்துச் சுவையும்
ஊட்டச்சத்தும் நிறைந்த ‘வியாஞசனா’ பானம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

*மார்பகப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் புற்று செல்களின் அசுர வளர்ச்சியை பெருங்காயம் வெகுவாகக் குறைக்கிறது.

இதயம் காக்கும் லவங்கம்

லவங்கத்தின் மொத்தப் பகுதியிலும் நல்ல மருத்துவ குணம் ஒளிந்துள்ளது. அதாவது இன்றைய நவீன மருத்துவத்தில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக பல ரசாயனக் கலவையால் ஆன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கிராம்பு எனப்படும் லவங்கத்தில் அதன் தாக்கம் ஏற்படாமல் தடுக்கும் மருத்துவ குணம் உள்ளது.

*லவங்கம் சுவைக்காக மட்டுமல்ல, அதன் மருத்துவ குணத்திற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

*பூண்டுக்கு அடுத்தபடியாக உணவுப் பொருட்களை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

*இதிலுள்ள பாலிஃபினால் உணவுக்கு சுவை கூட்டுவதுடன், விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கும் நன்மையை கொண்டுள்ளது.

*புற்றுநோய் செல்களை அழிக்கும் சில பொருட்களில் லவங்கப்பட்டையும் ஒன்று.

*இன்சுலின் சுரப்பை சீராக்குகிறது.

*இதய நோய்க்கு முக்கிய மூலகாரணம் ஆன நீரிழிவை வராமல் தடுக்கிறது.

*கொழுப்பு அளவையும், டிரைகிளிசரையும் கட்டுப்படுத்துகிறது.

*உடலில் குளூக்கோஸின் அளவை சீராக்குகிறது.

*ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.

*இன்சுலினுக்கு மாற்றாகவும் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பூஜா ஹெக்டே… ஃபிட்னெஸ் சீக்ரெட்!(மருத்துவம்)
Next post இடையே…இடையிடையே…!! (அவ்வப்போது கிளாமர்)