பூஜா ஹெக்டே… ஃபிட்னெஸ் சீக்ரெட்!(மருத்துவம்)
பூஜா ஹெக்டே பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா வுட்டாலங்கடிகளிலும் அழகு ராஜாங்கத்தை ஆளும் க்யூட் ஏஞ்சல். ‘மலம பித்தா பித்தாதே’ என பீஸ்ட்டில் பெல்லியை சுழற்றி ஆடிய நடனத்தின் இளசுகள் மனமே பித்தாய் திரிகின்றன.
இந்த கலர்ஃபுல் ரங்கோலியின் ஃபிட்னெஸ் மற்றும் ப்யூட்டி சீக்ரெட் என்னவென்று விசாரித்தோம். பூஜா ஹெக்டேவின் சருமப் பராமரிப்பு முறைகள் மிகவும் கடினமானதெல்லாம் கிடையாது. மிக எளிமையான, நம் எல்லோராலும் பின்பற்றக் கூடிய அளவுக்கு சிம்பிளான பராமரிப்பு முறைகளைத்தான் பின்பற்றுகிறார்.அதற்காக அவர் தேர்ந்தெடுக்கும் பொருட்களும் அதிக ரசாயனங்கள் சேர்க்கப்படாத, இயற்கை மூலப்பொருட்கள் கொண்டதாகவே இருக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டிலும் மேடைகளிலும் அதிகமாக மேக்கப் செய்திருந்தாலும் பூஜாவின் அழகு நேச்சுரலானது. ஃபேசியல், வேக்சிங், பெடிக்யூர், மெனிக்யூர் என பலவற்றிற்கு லட்சங்களை செலவழிக்கும் நடிகைகளிடமிருந்து நேச்சுரல் ஹோம் பியூட்டி டிப்ஸ்களை ஏராளம் கற்றுக்கொள்ளலாம். அந்த வகையில் பூஜா தனது சரும பொலிவிற்கு எப்பொழுதும் சின்னச் சின்ன டிப்ஸ்களைத்தான் ஃபாலோ செய்கிறார்.
பூஜா ஹெக்டேவுக்கு வறண்ட சருமம். இதனால் பூஜா ஹெக்டே எப்போதும் தன்னுடைய சருமத்தை மாய்ஸ்ச்சரைஸாக வைத்துக்கொள்ளத் தவறுவதே இல்லை. பகல், இரவு என எந்நேரமும் சருமத்தை மாய்ஸ்ச்சரைஸாக வைத்திருப்பதாக கூறுகிறார். “படுக்கைக்குச் செல்லும்முன் கட்டாயம் முகம் மற்றும் சருமங்களில் உள்ள மேக்கப்-ஐ முற்றிலுமாக ரிமூவ் செய்ய வேண்டும். தூங்கும்போது சருமத்தில் அப்ளை செய்த மேக்கப்பில் உள்ள பொருட்கள் சருமத்தில் படிந்திருந்தால் அது நிச்சயம் சருமத்தை சேதப்படுத்தும். இரவு முழுக்க சருமம் அந்த பொருட்களை உள்வாங்கிக் கொண்டேதான் இருக்கும். அதனால் வீட்டுக்கு வந்ததும் நான் முதலில் செய்வது ரிமூவ் செய்வதுதான்” என்றார்.
இயல்பாகவே தண்ணீர் நிறைய குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்லாது, சருமத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது. பூஜா தண்ணீர் நிறைய குடிப்பதால் அவரது சருமம் நீரேற்றத்துடன் இருப்பதோடு, டீடாக்ஸ் செய்யவும் புத்துணர்ச்சியுடன் இருக்கவும் உதவியாக இருக்கிறது.பூஜா தன்னுடைய தலைமுடியைப் பராமரிக்க எந்தவித ஜெல்லையும் பயன்
படுத்துவதில்லை. தனது பியூட்டிசியன் பரிந்துரைப்பதைப்போல நேச்சுரல் ஹேர் பேக்ஸ் பயன்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். முகத்தில் நேச்சுரல் ஆயில் அதிகரிக்க ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துவதாக கூறுகிறார். பப்பாளி,கற்றாழை, வாழைப்பழம், தேன், வெள்ளரி, தயிர் ஆகியவற்றைக் கொண்டு தினமும் ஃபேஸ் பேக் போடுவதாகவும் கூறினார். தனது பியூட்டிசியன் இயற்கை சார்ந்த அழகு சாதனப் பொருட்களையே பரிந்துரைப்பதால் ஆரோக்கியத்துடன் சேர்ந்த அழகு இவருக்கு கைகூடுகிறது.
மேலும் அதிக அளவில் கேரட், பீட்ரூட், ப்ளம்ஸ் ஆகியவற்றை பயன்படுத்துவதால் சருமத்தில் ப்ளாக் ஹெட்ஸ் வருவதில்லை என்றார். ஷூட்டிங் ஸ்பாட்டில் அதிக நேரம் இருப்பதால் வெயிலுக்கு டேனிங் ஆவது இயல்புதான். டேனிங் ஆகாமல் இருக்க ஸன்ஸ்க்ரீன் பயன்படுத்துவது அவசியம் என்றும் லெமன் சேர்த்து முகத்தை சுத்தம் செய்வதாகவும் கூறினார். வொர்க் அவுட் எப்போதும் அளவாகவே செய்வேன். இயல்பாகவே ஸ்லிம் உடல்வாகு என்பதால் எப்போதும் ஜிம்மில் கிடையாய் கிடக்க மாட்டேன். ஆனால், தினசரி வொர்க் அவுட் உண்டு. யோகாவும் செய்வேன்.
மனதை ஒருமுகப்படுத்தவும் உடலுக்கும் மனதுக்குமான ஒருங்கிணைப்பை உருவாக்கவும் யோகாவும் தியானமும் உதவுகின்றன என்று சொல்லும் பூஜா, உணவு விஷயத்திலும் கொஞ்சம் கறார்தான்.பிடித்த உணவுகள் எதுவென்றாலும் ஒரு வெட்டு வெட்டிவிடுவேன். ஆனால், மறுநாள் போய் ஜிம்மில் அதைக் கரைத்துவிட வேண்டும் என்பதிலும் ஸ்ட்ரிக்டாய் இருப்பேன். ஹெல்த்தியான உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். வேகவைத்த உணவுகள், இயற்கையான காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள், சாலட் என் முதல் சாய்ஸ்.’நாக்கை மட்டுமே கருத்தில் கொள்ளாமல் உடல் ஆரோக்கியத்தையும் கவனிக்கும் ஹெல்த்தி டயட் தான் சாப்பிடுவேன்’ என்று சிரிக்கிறார் பூஜா ஹெக்டே.