இணையத்தை கலக்கும் பாடகி பிரனிதி!! (மகளிர் பக்கம்)

Read Time:18 Minute, 52 Second

* 7 வயதில் சன் சிங்கர் சீஸன்-4 டைட்டில் வின்னர்
* You Tube மற்றும் fbல்  1.7 மில்லியன் சப்ஸ்க்ரைபர்ஸ்.
* இன்ஸ்டா மற்றும் டுவிட்டர் பக்கங்களில் 200 ஆயிரத்தை தாண்டிய பாலோவர்ஸ்

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளை இணைத்து பிரனிதி செய்யும் மாசெப் (Mashup) வீடியோக்கள் இணையத்தில் வைரல். தற்போது டீன் ஏஜில் பாடகியாகவும், குழந்தை நட்சத்திரமாகவும் பயணிக்கும் பிரனிதியை சந்தித்தபோது துறுதுறுவென பேச ஆரம்பித்தார்.

*  உங்களுக்கு நல்லா பாட வருதுன்னு யாரு கண்டுபிடிச்சா?

எனக்கு இரண்டரை வயது இருக்கும்போது டி.வி. யில் வரும் விளம்பரம், பாட்டு இதையெல்லாம் கேட்டு கூடவே நானும் பாடுவேன். காரில் அப்பா பக்கத்தில் உட்கார்ந்து போகும்போது பாடிக்கிட்டே டிராவல் பண்ணுவேன். மியூஸிக்ல எனக்கு இருக்கம் ஆர்வத்தைக் கவனித்த அம்மாவும் அப்பாவும் ஏ.ஆர்.ரகுமான் சாரின் கே.எம்.இசைக் கல்லூரியில் என்னைச் சேர்த்தாங்க. அங்கு இரண்டரை வருடம் வெஸ்டெர்ன் மியூஸிக் கத்துக்கிட்டேன்.

தொடர்ந்து குல்தீப்சாகர் சாரின் அலாப் (Alaap) மியூஸிக் அகாடமியில் சேர்ந்து இந்துஸ்தானி இசை இரண்டு வருடம் படிச்சேன். இப்ப பியானோ கிளாஸ் போறேன். என் அம்மாவும் அப்பாவும் சொன்னாங்க. இது உனக்கு கடவுள் கொடுத்த கிஃப்ட். நீதான் டெவலெப்ட் பண்ணிட்டு போகணும்னு. நானும் இசையை விடாமல் முயற்சிக்கிறேன்.

* சன் சிங்கர்-4 டைட்டில் வின்னரான நிகழ்வு குறித்து?

சன் சிங்கர் டைட்டில்  வின் பண்ணும்போது எனக்கு வயது 7. என் வீட்டுக்கு அருகில் இருந்த கிறிஸ்டியன் பள்ளி ஒன்றில் நான் படிக்கிறேன். அப்போது ஸ்கூல் நிகழ்ச்சிகளில் நான் தொடர்ந்து பாடுவது வழக்கம். பள்ளி ஆண்டுவிழா நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் என் திறமையை நிறையவே அப்ரிசேட் செய்தார்கள். என் க்ளாஸ் டீச்சர் என்னை நீ ஏன் ‘சன் சிங்கர்’ நிகழ்ச்சிக்கு ட்ரை பண்ணக்கூடாதுன்னு கேட்டார்? எனக்கு அப்ப ரியாலிட்டி ஷோன்னா என்னன்னே தெரியாது. பேரன்ட்ஸ் மீட்டிங்ல அம்மாகிட்டையும் இதையே சொன்னாங்க. சரி ட்ரை
பண்ணலாமேன்னு என் பெற்றோர் முடிவு செய்தாங்க.

செலக் ஷன் அன்னைக்கு ஒரு சாங்தான் பாடுனேன். ஆனால் பாதியிலே ஸ்டாப்னு சொல்லிட்டாங்க. பிறகு கிரிஷ் சார் என்கிட்ட வந்து, ‘யு ஆர் செலக்டெட்னு’ சொன்னார். தொடர்ந்து ஒவ்வொரு எபிசோடாகச் சென்றது. நான் பாடுறத அனுராதா மேம் உள்பட எல்லோரும் ரொம்பவே எஞ்சாய் பண்ணிப் பார்ப்பாங்க. நிகழ்ச்சி முடியுற அன்னைக்கு 5வது பரிசுல இருந்து சொல்லிக்கிட்டே வந்தாங்க. நானும் இன்னொரு கன்டெஸ்டென்ஸ் மட்டும் மேடையில் அப்படியே நிக்கிறோம். கடைசியாக என் பெயரை சொல்லும்போது அப்படியே ஃபர்ஸ்ட்டவுட்டாகி கண்ணெல்லாம் கண்ணீர் வர அழுதேன். என் ரிலேஷன் எல்லாம் மேடை ஏறி என்னை அப்படியே மேலே தூக்கிட்டாங்க என நினைவுகளில் மூழ்கினார்.

* வெற்றிகரமாக ஒரு யு டியூப் சேனல் ரன் செய்கிற ஐடியா எப்படி வந்தது?

அது என் அம்மாவின் ஐடியா. அப்ப நான் மூன்றாம் வகுப்பு படிக்கிறேன். சின்ன வயதில் நான் பாடிய பழைய வீடியோ எல்லாத்தையும் அதில் அப்லோட் பண்ணுனாங்க. அப்ப பெரிசா ஒன்னும் பாலோவர்ஸ் எனக்கு இல்லை. அந்த நேரம் அப்பா யு.எஸ். கம்பெனியில் வேலையில் இருந்தார். எனவே நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பை நான் ஹவாய் நாட்டில் படிக்க கிளம்பினேன்.

யு டியூப்பில் நான் பதிவேற்றியுள்ள பெரும்பாலான பாடல்கள், நான் ஹவாய்ல இருக்கும்போது பாடி பதிவேற்றியதே. அங்குதான் என்னுடைய பிரபலமான பாடல்களான ‘ஷேப் ஆஃப் யு’ (shape of you), ‘டெஸ்பாசிட்டோ’ (despacito) போன்ற  மாசெப் (Mashup) வீடியோக்கள் பாடப்பட்டு வீடியோவாக்கி பதிவேற்றப்பட்டது.

‘ஷேஃப் ஆப் யூன்னு இங்கிலீஷ் சாங் வந்திருக்கு. அதை பிரனிதிய பாடச் சொல்லுன்னு  என் ரிலேட்டிவ்ஸ் சொன்னாங்க. அது யு.எஸ். நாட்டு வானொலியில் அடிக்கடி ப்ளே ஆகும் பாடல்தான். அந்த பாட்டோட தமிழ் பாட்டு எதையாவது கிளப் பண்ணிப் பாடுன்னு அம்மா எனக்கு ஐடியா கொடுத்தாங்க. நானும் ஒவ்வொரு டெம்போவா கீ போர்டில் போட்டு போட்டு கடைசியில் ‘ஆத்தங்கரை ஓரத்தில…’ பாட்டை புடிச்சேன்.

நைட் அப்பா வந்ததும் எங்க ஐடியா குறித்து பேசி, இரவு முழுவதும் ஹெவியா வொர்க் செய்து பாடி ரெக்கார்டிங் பண்ணுனோம். அப்பா நான் பாடுனதை அப்படியே வீடியோ எடுத்து எடிட் செய்து அப்லோட் செய்தார். அதிகாலை ஆனதால் அப்லோட் செய்ததுமே நான் படுத்து தூங்கிட்டேன். ஒரு மணி நேரத்தில் என்னோட ‘ஷேப் ஆஃப் யு’ வீடியோவுக்கு பயங்கரமான ரெஸ்பான்ஸ். 10 மில்லியனைத் தாண்டி வியூவர்ஸ் போச்சு. தொடர்ந்து மாசெப் வீடியோக்களை எடுத்தும் அப்லோட் செய்யத் தொடங்கினோம்.

ஸ்ரேயா கோஷல் மேம்மோட மிகப் பெரிய ஃபேன் நான். அதனால் ‘மிருதா மிருதா’ பாட்டை நான் அவர் குரலில் அப்படியே ட்ரை பண்ணி பாடி பதிவேற்றினேன். உன் வாய்ஸ் அப்படியே மேச் ஆகுது. நீ குட்டி ஸ்ரேயா கோஷல் அப்படின்னு சொல்ல ஆரம்பிச்சாங்க என சிரித்தவர், ஸ்ரேயா கோஷல் மேம் வாய்ஸை யாராலும் மேட்ச் பண்ணவே முடியாது. அது ஒரு டிவைன் வாய்ஸ். நான் அவர் வாய்ஸ மாடுலேட் பண்றேன் அவ்வளவுதான்.

‘தொடரி’ படத்தில் ஸ்ரேயா கோஷல் மேம் பாடுன ‘போன உசுரு வந்துருச்சு..’ பாடலை அவரை மாதிரியே பாடிப் பதிவேற்றினேன். அன்எக்ஸ்பெக்டெட், அந்த வீடியோவும் வைரல். அப்பதான் முடிவு செய்தேன். தொடர்ந்து பாடி பதிவேற்றினால் கண்டிப்பாக வியூவெர்ஸ் அதிகரிக்கிறாங்க… வீடியோ வைரலாகுது என்பதை. சோஷியல் மீடியா மூலமாக என்னை ப்ராக்ரஸ் பண்ணிக்கிட்டே போனேன்.

* உங்களோட லாங்வேஜ் ஸ்ட்ரெங்த் எங்கிருந்து வந்தது?

படித்ததெல்லாம் இங்கிலீஷ் மீடியம் என்றாலும் தமிழ்தான் என் தாய் மொழி. தமிழ், ஆங்கிலம் தவிர எனக்கு வேறு மொழி எதுவுமே தெரியாது. ஒரு பாட்டை பாட எடுத்தால், ஸிங்கர் எப்படி பாடியிருக்காங்களோ அதே மாதிரிதான் பாட ட்ரை பண்ணுவேன். லிரிக்ஸ் ஓப்பன் பண்ணி வைத்துக்கொண்டே, சிங்கர் பாடியிருப்பதையும் திரும்பத் திரும்ப ப்ளே செய்து கேட்கும்போது பாடல் அப்படியே என் மைன்ட்ல செட்டாகிடும். தொடர்ந்து அந்த வாய்ஸோடு கூடவே சேர்ந்து பாடும்போது அப்படியே அழகா வரும். தவிர, என் அம்மாவுக்கும் மியூஸிக் நாலேஜ் இருப்பதால் நான் பாடும்போது தவறு இருந்தால் கரெக்ட் பண்ணுவாங்க.

ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு பாடல்களை நான் கவர் செய்யும்போது, சிங்கர் எப்படி பாடி இருக்காங்களோ அப்படியே பாடி வச்சுருவேன். தவிர, எல்லா மொழியிலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, அந்தந்த மொழி ஃப்ரெண்ட்ஸ்க்கு அனுப்பி டிக் ஷன்(diction) எதாவது இருந்தால் கரெக்ட் பண்ணுங்கன்னு கேட்பேன். தவறா இருந்தால் அவுங்க கரெக்ட் பண்ணி எனக்கு சொல்லுவாங்க. நான் திரும்பவும் அதை பாடி அனுப்புவேன்.

* இணையத்தில் பிரனிதி வெளியிடும் வீடியோக்களின் சவுண்ட், ரெக்கார்டிங், எடிட்டிங் எல்லாமே பக்கா க்ளாரிட்டியா இருக்கே?

வீட்டில் ஸ்டுடியோ, ரெக்கார்டிங், லைட்டிங் செட்டெப் எல்லாம் சின்னதாக செட் பண்ணி வச்சுருக்கோம். பியானோ முன்னாடி உட்கார்ந்து நான் பாடுவேன். நான் பாடுவதை அப்பா ஷூட் செய்வார். மாசெப், சோலோ சாங் எல்லாத்தையும் நானும் எங்க அம்மாவும் சேர்ந்து எங்க ஆரம்பிக்கணும்… எங்க முடிக்கணும்னு ப்ளான் செய்து முயற்சிப்போம். கேமரா, ரெக்கார்டிங் எல்லாத்தையும் அப்பா சூப்பரா ஹேண்டில் பண்ணுவாரு. எடிட்டிங் பெரும்பாலும் நான்தான். அதாவது எஃப்.பி இன்ஸ்டா, டுவிட்டர் பக்கங்களில் போடும் வீடியோக்களை நானே எடிட் பண்ணி அப்பாவிடம் கொடுத்துவிடுவேன். யு டியூப்பில் அப்லோட் செய்ய எடுக்கும் வீடியோக்கள், அவுட்டோரில் எடுக்கும் வீடியோக்களில் கேமரா மற்றும் எடிட்டிங் வொர்க் அதிகமாகவே இருக்கும். எனவே இதற்கு மட்டும் தெரிந்த அண்ணா ஒருவர் வந்து ஷூட்டிங் மற்றும் எடிட்டிங் வேலைகளைச் செய்து கொடுத்துவிடுவார்.

* எல்லார் வீட்டுலையும் குழந்தைகளை படிபடின்னுதானே சொல்லுவாங்க. உங்க வீட்டுல எப்படி?

அம்மாவும் அப்பாவும் ரொம்பவே ப்ரெண்ட்லி. அதே நேரம் ஸ்‌டிட். வீட்ல எதையும் என்கிட்ட கட்டாயப்படுத்தி திணிப்பதில்லை. படிபடின்னும் சொல்ல மாட்டாங்க. பாடு பாடுன்னும் சொல்ல மாட்டாங்க. இரண்டையுமே என்னால மேனேஜ் பண்ண முடியும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருப்பதால், என் சாய்ஸ்தான் பெரும்பாலும். ஸ்கூல் ஹோம் வொர்க் இருந்தால் அதை முடித்தபிறகே நான் ரெக்கார்டிங் ரூமுக்குள் நுழைவேன். படிப்பிலும் நான் குட்தான்.

ஹவாயில் இருந்து நான் இந்தியா திரும்பியபோது வேலம்மாள் சிபிஎஸ்ஸி பள்ளியில் 6வது படிக்க ஆரம்பித்தேன். 6 மற்றும் 7ம் வகுப்பு படிக்கும்போது கோவிட் நேரம் என்பதால் ஆன்லைன் வகுப்புகளே இருந்தது. இப்போது எட்டு முடித்து 9ம் வகுப்பு செல்லப் போகிறேன். சம்மர் ஹாலிடேயில் இருக்கிறேன். ஸ்கூல் மேனேஜ்மென்ட், தலைமை ஆசிரியர்கள் மற்றும் என் ஆசிரியர்களைப் பொறுத்தவரை என்னோட மியூசிக் கேரியர்க்கு ரொம்பவே சப்போர்ட்டாக இருக்காங்க. ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி எக்ஸாம் நேரம், புராஜக்ட் சப்மிஷன், ஆக்டிவிட்டி என முக்கியமான நேரங்களில் ஸ்கூலில் இருப்பேன். மற்ற நேரங்களில் மியூஸிக் க்ளாஸ், பயிற்சி, இசைன்னு என் கெரியரில் இறங்குவேன்.  

* பாடவும் நடிக்கவும் வந்த வாய்ப்புகள் குறித்து?

இமான் சார் மியூசிக்கில் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தில் ‘லங்கு லங்கு லபக்கருன்னு’ ஒரு பாடல் பாடுனேன். பிரபுதேவா சார் நடித்த ‘லெக்ஷ்மி’ படத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் நான் ஒரு டிராக் பாடியிருக்கேன்.சன் சிங்கர் டைட்டில் வின்னர் வாங்கிய சமயம் அது. அருண்பிரபு சார் ட்ரீம் வாரியார்ஸ்ல வொர்க் பண்ணும்போது ‘அருவி’ படத்தின் ஹீரோயின் அதிதி பாலனுக்கும் எனக்கும் ரெசும்லென்ஸ் இருக்கு கூப்பிட்டு பார்ப்போன்னு என் பேரென்ட்ஸ் அணுகி என்னை நடிக்கக் கூப்பிட்டார். அருவி படத்தில் அதிதி பாலனோட சின்ன வயது கேரக்டர் எனக்கு. இதுதான் சீன் என சொல்லாமலே, நான் பண்ணுவதை அப்படியே ஷூட் பண்ணினார். மூணார் போகும்போது என்னை என் அம்மா அடிச்சுட்டாங்க. நான் அழுதுட்டே இருந்தேன். அதையும் பாப்பா அழுகுது, ‘ஷாட் புடி ஷாட் புடி’ன்னு  ஷூட் பண்ணுனாரு. படத்தில் ‘சிகரெட் புடிக்காதீங்கப்பா நாறுது’ என நான் பேசிய வசனம் ரொம்பவே ஹிட்டாச்சு.

எனக்கு பாடுவதில் ஆர்வம் இருப்பது மாதிரி நடிப்பிலும் இருந்தது. ‘சாட் பூட் த்ரி’ என ஒரு படம். இப்ப ஷூட்டிங்ல இருக்கு. டைரக்டர் அருணாச்சலம் வைத்தியநாதன் சார் நான்கு குழந்தைகளை வைத்து இந்தப் படத்தை இயக்குகிறார். அதில் நானும் இருக்கேன். எங்களோடு ஸ்நேகா மேம், வெங்கட் பிரபு சார், யோகி பாபு சார் கெஸ்ட் ரோல் பண்றாங்க. டைரக்டர் விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி சார் ஹீரோ. மேகா ஆகாஷ் மேம் இதில் ஹீரோயின். அவுங்க சகோதரியாக நான் நடிச்சுருக்கேன். படம் முழுவதும் நான் வருவேன்.

* பிரபலங்களுடனான உங்கள் சந்திப்பு குறித்து…

கபாலி மூவி புரோமஷனுக்கு ஒரு மாசெப் சாங் பண்ணினேன். அப்ப நான் ஹவாயில் இருந்ததால், சூப்பர் ஸ்டார் சார் என்னை வீடியோ காலில் அழைத்துப் பேசி  பாராட்டினார். சூரியா, தனுஷ், சிவகார்த்திகேயன், யுவன் சங்கர் ராஜா, இமான் சார் இவுங்களையெல்லாம் நேரில் சந்திச்சிருக்கேன். என்னோட யு டியூப் சேனல் பார்த்து அவுங்க என்னை அட்மியர் பண்ணுனாங்க. அப்பாயின்ட்மென்ட் கிடைத்து, அவர்களை பார்க்கும் வாய்ப்பும் அமைந்தது. சூரியா அங்கிள் ஆட்டோகிராப் போட்டு காந்தி தாத்தாவோட புக் கிஃப்ட் கொடுத்தாரு.

வாலன்டைன்ஸ் டே அன்னைக்கு சிவகார்த்திகேயன் சாரை மீட் செய்து கிஃப்ட் கொடுத்தேன். நான் பாடி பதிவேற்றும் போஸ்ட் எல்லாத்தையும் தனுஷ் சார் அவரோட டுவிட்டர் பக்கத்தில் ஷேர் பண்ணுவார்.ஸ்ரேயா கோஷல் மேடம் பாடிய ‘கண்ணக் காட்டு போதும் நிழலாகக் கூட வாறேன்..’

பாட்டு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்த பாடல். அவரைப் பார்க்க எனக்கு அப்பாயின்மென்ட் கிடைத்தும் மீட் பண்ண முடியாமல் மிஸ் ஆயிடுச்சு. மேல் சிங்கர்ல எஸ்.பி.பி சார் எனக்கு ரொம்ப பிடிக்கும். மியூசிக்ல இப்பவரை நான் அனிருத் சார் ஃபேன்.  சமீபத்தில் யுவன் சங்கர் சாரின் ‘25 இயர்ஸ் ஆஃப் யுவனிசம்’ ஈவென்ட் போனேன். அதிலிருந்து அவருக்கும் ஃபேனாக மாறிட்டேன்… சிரித்து விடைபெற்றார் இந்த க்யூட் குட்டிப் பாடகி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அன்பிற்கு இணை அன்பே!(மகளிர் பக்கம்)
Next post முதுகுவலிக்கு அஞ்சேல்!(மருத்துவம்)