Dry Fruits… !! (மருத்துவம்)
உலர்பழங்களை நம்முடைய அன்றாட உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் நமக்கு இதயப்பாதுகாப்பு, ஆன்டி ஆக்சிடேட்டிவ் (Anti Oxidative Property) நீரிழிவு நோய் எதிர்ப்பு, உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலில் கொழுப்புச்சத்தின் அளவை சீராக வைப்பதற்கும், எலும்பை வலுவாக்குவதற்கும், செரிமானம் சீராக நடைபெறுவதற்கும் உதவுகிறது. பொதுவாக உலர் திராட்சை, பேரீச்சம் பழம், உலர் அத்தி, கொடி முந்திரி, மற்றும் பாதாமி பழம்(Apricot) உலர் பழங்களாக அறியப்பட்டுள்ளன. மேலும் மாம்பழம், பெர்ரி பழங்கள், பப்பாளி, ஆப்பிள் அன்னாசி போன்ற பழங்களிலிருந்தும் உலர் பழம் தயாரிக்கபடுகின்றன.
இதில் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இதனை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் இந்த சாதாரண உணவுப்பொருள் மிக சிறந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது. இவை இயற்கையாகவே இனிப்புச் சுவை உடையதால் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.
*உலர் திராட்சை இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடையது. உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹிமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்தசோகை குணமாக உதவுகிறது. அமிலத்தன்மை சார்ந்த நோய்கள், மலச்சிக்கல் குணமாகவும் உதவுகிறது. அதை சரியான அளவில் உட்கொண்டால் அதிக உடல் எடை குறைக்க வழிவகுக்கிறது.
*உலர் பிளம்ஸில் வைட்டமின் ஏ, நீர்ச்சத்து மற்றும் இரும்ச்புசத்து அதிகம் உள்ளது. இது எலும்பு மற்றும் தசை வலுப்பெற உதவுகிறது. உடலில் கொழுப்புச்சத்தை சீரமைக்கிறது.
*பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க உதவுகிறது. வயிற்றுப்புண், இதய நோய் உள்ளவர்கள் உட்கொள்ளுதல் நல்லதாகும். சுகப்பிரசவம் நடைபெற உதவுகிறது.
*உலர் பெர்ரியில் நார்ச்சத்து, வைட்டமின் இ அதிகமாக உள்ளது. நாள்பட்ட நோயை தடுப்பதற்கும், இதயநோயை தடுப்பதற்கும் உதவுகிறது.
*உலர் அத்திப்பழமானது மிதமான இனிப்பு சுவை உடைய இந்த உணவில் இரும்புசத்து, கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. சுவாச ஆரோக்கியம் மற்றும் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், புற்றுநோயின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகிறது.
*ஆல்மண்ட் இதயக்கோளாறு உடலில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கும், உடல் எடையைச் சீராக வைப்பதற்கும் உதவுகிறது.
உலர்பழங்களில் அனைத்து வகையான சத்துக்களும் செறிவூட்டப்பட்டுள்ளன. கலோரி உட்பட. அதனால் இதனை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல் உலர் பழங்களுக்கு பொருந்தும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...