மாஸ்கினி பிரச்னைகளும்… தீர்வுகளும்! (மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 50 Second

கொரோனா தொற்று ஓரளவு கட்டுப்பாட்டில் இருந்தாலும், மீண்டும் மாஸ்க் அணிவது என்பது கட்டாயமாகிவிட்டது, குறிப்பாக பொது இடங்களில். கடந்த இரண்டு வருடமாக நாம் மாஸ்க் அணிந்து பழகிவிட்டோம் என்று தான் சொல்ல வேண்டும். பர்ஸ் மற்றும் செல்போன் இல்லாமல் எப்படி இருக்க முடியாதோ அதேபோல் மாஸ்க் அணியாமல் இருக்க முடிவதில்லை. இந்த சூழலில் மாஸ்க் அணிவதால் என்னுடைய பாதி முகம் மறைந்துவிடுகிறது. இதனால் முழு முகத்தில் மேக்கப் போட்டாலும் அது வெளிப்படையாக தெரிவதில்லை என்பது பல பெண்களின் குமுறலாக உள்ளது. மாஸ்க் அணிந்திருந்தாலும், எப்படி அழகாக மேக்கப் போட்டுக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

நடனமாடும் கண்கள் மற்றும் புருவங்கள்

பாதியளவு முகம் மாஸ்கினால் மறைக்கப்பட்டுள்ள நிலையில் எடுப்பாக தெரிவது கண்கள் மற்றும் புருவங்கள் மட்டும் தான். அதனால் இவை இரண்டிற்கும் அழகாக மேக்கப் போட்டுக் கொள்ளலாம். கண்களை அழகாக எடுத்துக்காட்ட கண்களுக்கு அடர்த்தியாக கண் மை, ஐலைனர், மஸ்காரா போடலாம். சிலர் நிறங்கள் கொண்ட லென்ஸ்களை அழகிற்காக பயன்படுத்துவார்கள். நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்ப நிற லெஸ்களை பயன்படுத்தலாம்.

கண்களை மட்டுமே அழகாக எடுத்துக்காட்டும் போது அது உங்கள் முழு தோற்றமும் கவி பாடுவது போல் இருக்கும். ஒரு சிலர் ஹைலைட்டரையே ஷேடோவாக பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் ஹைலைட்டர்களை சருமம் பளிச்சென்று இருக்கவும் மேலும் கண்ணம் எடுப்பாக காண்பிக்கவும் பயன்படுத்துவது வழக்கம். மாஸ்க் அணியும் போது இவை எல்லாம் மறைக்கப்படுவதால், கண்களை அழகாக எடுத்துக்காட்ட அதனை ஐஷேடோவாக உபயோகிக்கலாம். மாஸ்கினி வராமல் இருக்கமாஸ்கினி… மாஸ்க் அணிவதால் சருமத்தில் ஏற்படும் பரு, கரும்புள்ளி மற்றும் ரேஷஸ் போன்ற பிரச்னை. இந்தப்பிரச்னை ஏற்படாமல் இருக்க..

*முகத்தினை தினமும் குறைந்தபட்சம் இரண்டு முறையாவது கழுவவேண்டும். குறிப்பாக படுக்கைக்கு செல்லும் முன்.

*உங்களின் சருமத்தில் நீங்கள் அணிந்திருந்த அனைத்து மேக்கப்பினை படுக்கைக்கு செல்லும் முன் கிளென்சர் அல்லது மிசெல்லார் தண்ணீர் கொண்டு நீக்குவது அவசியம்.

*சருமத்திற்காக சீரம் அல்லது மாய்சரைசர் பயன்படுத்தலாம். இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும்.

*வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது நல்ல தரமான சன்ஸ்கிரீன் லோஷனை மறக்காமல் பயன்படுத்த வேண்டும்.

*நீங்கள் வேலை பார்க்கும் இடத்திலோ அல்லது கல்லூரியிலோ அதிக நேரம் மாஸ்க் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அவ்வப்போது முகத்தில் தண்ணீர் கொண்டு கழுவவேண்டும். இதனால் வியர்வையால் ஏற்படும் சரும பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

*உங்களின் மாஸ்கினை சத்தமாகவும், பத்திரமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். ஒரு நாளைக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய மாஸ்கினை பயன்படுத்தலாம். இதனால் அன்றே அதனை டிஸ்போஸ் செய்துவிடலாம்.

பளிச் உதடு

மாஸ்கினால் உதடுகள் மறைக்கப்பட்டு இருந்தாலும், முகத்தின் மிகவும் அழகான மற்றும் எல்லாரையும் கவரக்கூடிய பகுதி என்றால் அது உதடு தான். அதனால் இதற்கு மேக்கப் போடுவதை மறக்கக்கூடாது. உதட்டிற்கு சாதாரண லிப் பாம் அல்லது மேட் லிப்ஸ்டிக் அணியலாம். நல்ல தரமான மேட் லிப்ஸ்டிக்குகள் உங்களின் உதட்டில் நீண்ட நேரம் இருக்கும். சிலருக்கு லிப்ஸ்டிக் அணிவதால், மாஸ்கில் கரை ஏற்படுகிறது என்ற எண்ணம் இருக்கும். அவர்கள் அடர்த்தியான நிறங்களை தவிர்த்து நியூட் மற்றும் லைட்டர் நிறங்களை தேர்வு செய்யலாம். மேலும் லிப் ஸ்டெயின்ஸ்… ஜெல் மற்றும் லிக்விட் வடிவத்தில் வரக்கூடிய லிப்ஸ்டிக்கினை பயன்படுத்தலாம். நீண்ட நேரம் கலையாமல் உங்களின் உதட்டினை அழகாக எடுத்துக்காட்டும்.

மாஸ்க் பிரச்னைகள்… தீர்வுகள்!

*கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவர்கள் மாஸ்க் அணியும் போது மூச்சுக்காற்று வெளியேறும் போது அது கண்ணாடியில் படிந்துவிடுவதால், நம்மால் எதுவுமே பார்க்க முடியாது. அதைத் தடுக்க ஆன்டி-ஃபாக் சல்யூஷனை பயன்படுத்தலாம். இது கண்ணாடியில் ஆறு மணி நேரம் வரை ஃபாக் படியாமல் பார்த்துக் கொள்ளும்.

*மாஸ்க் பெரும்பாலும் காதில் மாற்றக்கூடிய டிசைன்களில் தான் கிடைக்கிறது. இவ்வாறு அணியும் போது, அதன் கயிறு காதின் பின்பகுதியில் பாதிப்பு ஏற்படுத்தும். இதற்கு கழுத்தை சுற்றி அணியக்கூடிய மாஸ்கினை அணியலாம். அல்லது அட்ஜஸ்பில் மாஸ்க்கினை தேர்வு செய்யலாம்.

*ஆஸ்துமா, சுவாசப் பிரச்னை மற்றும் அதிக அளவு வியர்வை ஏற்படும் பிரச்னை உள்ளவர்கள் துணி மாஸ்க்கினை பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post என் தொழிலுக்கு பாட்டியும் தாத்தாவும் சப்போர்ட்!(மகளிர் பக்கம்)
Next post மதிய உணவின் கலோரி!! (மருத்துவம்)