முதல் பெண் வாரிசை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த பெற்றோர்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 20 Second

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்தில் முதல் கறுப்பின பெண் நீதிபதி

அமெரிக்காவின் வரலாற்றிலேயே முதல் முறையாக கறுப்பினர் சமூகத்தைச் சேர்ந்த பெண் கேட்டாஜி பிரவுன் ஜேக்சன் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்கவுள்ளார். வாக்கெடுப்பில் 53-47 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, கேட்டாஜி பிரவுன் நீதிபதியாக பொறுப்பேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சோமாலியாவில் பெண்கள் மட்டுமே நடத்தும் செய்தி நிறுவனம்

ஆப்பிரிக்காவின் சோமாலியா பகுதியில், ஆறு பெண் பத்திரிகையாளர்கள் இணைந்து அந்நாட்டின் முதல் பெண்கள் மட்டுமே நடத்தும் செய்தி நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர். இதில் இவர்கள் உருவாக்கும் செய்திகளை டிவி, ரேடியோ மற்றும் ஆன்லைன் தளங்களில் ஒளிபரப்ப இவர்கள் முடிவு செய்துள்ளனர். இனி பெண்களுக்காக அவர்களுக்கு தேவையான பயனளிக்கும் செய்திகளை நாங்கள் உருவாக்குவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முதல் பெண் வாரிசை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த பெற்றோர்

தங்கள் குடும்பத்தில் பல வருடங்களாக பெண் குழந்தையே இல்லாததால், தனக்கு பிறந்த முதல் பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டாடி இருக்கிறார் பூனாவைச் சேர்ந்த விஷால் ஜரேக்கர் எனும் வழக்கறிஞர். இதற்காக ஒரு லட்சம் செலவானதாக இந்த தம்பதி கூறியுள்ளனர்.

ஒவ்வொரு வீட்டிலும் லைப்ரரி இருக்க வேண்டும் கேரளாவில் புதிய திட்டம்

கேரள மாநில குழந்தைகள் இலக்கிய அமைப்பு, வீட்டில் ஒரு நூலகம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 5,000 ரூபாய் மதிப்புள்ள குழந்தைகளுக்கான புத்தகங்களை அவர்களிடம் இருந்து வாங்கினால் ஒரு புத்தக அலமாரியை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளனர். குழந்தைகளை டிஜிட்டல் உலகத்திலிருந்து மீட்டு, அவர்கள் மத்தியில் மீண்டும் வாசிப்பு பழக்கத்தை உருவாக்கவே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெங்களூரின் ‘குருவி மனிதன்’

நகரங்களில் சிட்டுக் குருவிகளே அழிந்து விட்டதாக கூறப்படும் போது, பரபரப்பான பெங்களூரில் வசிக்கும் 72 வயதாகும் எட்வின் ஜோசபின் வீட்டிற்கு தினமும் காலை சிட்டுக் குருவிகள், அணில்கள், புறாக்களுடன் சில சமயம் அரிய வகை சின்னான் எனப்படும் கொண்டைக் குருவிகளும் கூட வருகின்றன. சுமார் 15 ஆண்டுகளாக இவர் இந்த பறவைகளுக்கு தானியங்கள், அரிசி, சப்பாத்தி என தன் வீட்டில் தினமும் என்ன சமைக்கிறார்களோ அதில் கொஞ்சம் கொடுத்து வருகிறார்.

இதனால் இவரை எல்லோரும் குருவி மனிதர் என அழைத்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கி விட்டதால், இது போல பல்லாயிரம் உயிரினங்களும் கொதிக்கும் வெயிலை தாங்க முடியாமல் தவிக்கும். அவைகளுக்கு கொஞ்சம் தண்ணீரும் தானியமும் வையுங்கள் என இவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நிறுவனங்களுக்கு நம் விவரங்களை விற்கும் செயலிகள்

ஒரு முறை நம் செயலியை செல்போனில் டவுன்லோட் செய்தால், அது கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து நம்மை பற்றிய விவரங்களை அந்த செயலி சேகரிப்பதற்கான அனுமதியை கொடுக்கிறோம். ஆனால், இது போல நம் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கும் செயலிகள், அதை சுமார் 10 நிறுவனங்களுக்கு விற்று பணம் பார்ப்பதாக சமீபத்திய ஆக்ஸ்போர்டு ஆய்வு தெரிவிக்கிறது. நீங்கள் உங்கள் கைப்பேசியில் அவசியமில்லாத மற்றும் பயன்படுத்தப்படாத செயலிகளை உடனே நீக்கம் செய்து உங்களின் விவரங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post முதுமையிலும் தாம்பத்யம்!!(அவ்வப்போது கிளாமர்)
Next post அன்னையரை போற்றுவோம் அன்போடு!(மகளிர் பக்கம்)