ஆரோக்கியமாக இருக்க…!!(மருத்துவம்)

Read Time:1 Minute, 43 Second

*அதிக நேரம் உட்கார்ந்திருந்தால் அது உங்கள் உடலில் எதிர்மறை வளர்சிதை மாற்றத்தை உண்டாக்கும். எனவே, சிறிது நேரத்திற்கு ஒரு முறை எழுந்து நடப்பது, அலைபேசியில் பேசும்போது எழுந்து நின்று பேசுவது போன்ற சின்னச்சின்ன மாற்றங்களை மேற்கொள்ளலாம்.

  • வாரத்தில் 150 நிமிடங்களாவது மிதமான ஏரோபிக் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது இதய நோய் சம்பந்தமான ஆபத்துகளை குறைக்கும்.

*மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கான வழிகளைக் கண்டறிந்து அதை பின்பற்றுவதே ஆரோக்கியத்தின் முக்கிய அடையாளம் ஆகும். மன அழுத்தம் இல்லாமல் இருப்பதற்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகளை செய்யுங்கள். இது மட்டுமே உங்கள் மன அழுத்தத்தை குறைக்கும் என்று கூறமுடியாது. ஆனால் உங்களின் மனநிலையை மேம்படுத்தும் மற்றும் அது ரத்த அழுத்தத்தைக்கூட குறைக்க வாய்ப்பு இருக்கிறது.

*உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்க குறைந்தபட்சம் ஒருவர் நாள் ஒன்றுக்கு 7 மணி நேரம் தூங்குவது அவசியம். நாள்பட்ட தூக்கமின்மை வளர்சிதை மாற்றத்தில் பல்வேறு விதமான பிரச்னைகளை ஏற்படுத்துவதோடு நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லப் டப்… லப் டப் சொல்லும் பெர்ஃபியூசன் டெக்னாலஜி! (மருத்துவம்)
Next post ஆண்கள் அதிகம் விரும்புவது :கட்டி தழுவுவதையும் முத்தம் கொடுப்பதையும் தான்!! (அவ்வப்போது கிளாமர்)