வளமான வாழ்வுக்கு PERMA டெக்னிக்…!! (மருத்துவம்)
மார்ட்டின் செலிக்மேன் என்பவர் அமெரிக்காவின் பிரபல உளவியலாளர். எண்ணற்ற சுய முன்னேற்ற புத்தகங்களை எழுதியவர். Learned helplessness பற்றிய அவரது கோட்பாடு அறிவியல் மற்றும் மருத்துவ உளவியலாளர்களிடையே மிகவும் பிரபலமானது. செலிக்மேன் வகுத்துள்ள PERMA மாடல் கோட்பாடு எனப்படும், வளமான வாழ்க்கைக்கான 5 கட்டளைகள் நேர்மறை உளவியலில் மிகவும் பிரபலமடைந்துள்ளது.
நேர்மறை உணர்ச்சிகள், ஈடுபாடு, உறவுகள், பொருள் மற்றும் சாதனை என்ற ஐந்தும்தான் PERMA கட்டளைகள். இதை கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்…
P – Positive Emotions
அன்பு, மகிழ்ச்சி, நன்றியுணர்வு, அமைதி, ஆர்வம், நம்பிக்கை, பெருமை, கேளிக்கை, உத்வேகம் மற்றும் பிரமிப்பு போன்ற இனிமையான உணர்வுகளை Positive Emotions குறிக்கின்றன. நேர்மறையான உணர்ச்சிகள் நல்லது என்பதோடு பொருள் மதிப்பையும் கொண்டிருக்கின்றன. நேர்மறையான உணர்ச்சிகள் ஒரே நேரத்தில் ஆக்கப்பூர்வமான சிந்தனை மற்றும் மாறுபட்ட சிக்கல்களைத் தீர்ப்பதை ஊக்குவித்தல் என இரண்டுவிதமான பலன்களைத் தரக்கூடியது. காலப்போக்கில், சமூக மற்றும் உளவியல் வளத்தை மேம்படுத்துவதன் மூலம், நம்முடைய செயல்பாட்டில் ஒரு நெகிழ்வுத்தன்மையையும் கொடுப்பவை.
E – for Engagement
ஒரு சவாலான வேலையை அனுபவித்தும், அக்கறையோடும் நீங்கள் செய்யும்போது முழு ஈடுபாடும் அதில் இருக்கும். அந்த நிலையில் இருக்கும் நீங்கள் காலநேரம், இருக்கும் இடம் எல்லாவற்றையும் மறந்து அந்த வேலையோடு ஒன்றிவிடுவீர்கள். பொதுவாக இந்த நிலை ஓவியம் வரைதல், இசை கேட்பது போன்ற நமக்குப்பிடித்த விஷயங்களைச் செய்யும் போது வருவது. இந்தப் பழக்கமே நாளடைவில் அலுவலக வேலையைச் செய்யும் போதும் அதே ஈடுபாட்டைத் தூண்டச் செய்யும்.
R- for Relationships
நம்முடைய நல்வாழ்விற்கு அஸ்திவாரமாக இருப்பவை நேர்மறையான உறவுகள் என்பதிலும், அந்த உறவுகள் நம் ஒவ்வொருவருக்குமே தேவை என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. வாழ்க்கையின் எல்லா கட்டத்திலும் வளமான, உற்சாகமான உறவுகள் முக்கியம் என்பதை நீண்டகாலமாகவே ஆராய்ச்சிகளும் உறுதிப்படுத்துகின்றன. அந்த உறவுககளை, வீட்டிலோ, அலுவலகத்திலோ அல்லது உங்கள் நட்பு வட்டத்திலோ கூட அமைத்துக்கொள்ளலாம். உறவுகள் உங்கள் வாழ்க்கையில், மகிழ்ச்சியையும், திருப்தியையும் மட்டுமல்ல, உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கூட அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
M- for Meaning
‘நாம் நமக்காகச் செய்யாமல், பிறருக்காக சேவை செய்யும்போது நம்முடைய பலம் பலமடங்காகி, நம்மால் முடிந்தவரை சிறப்பாக செயல்படுகிறோம்’ என்பது செலிக்மனின் கோட்பாடு. சுயநலத்தைத் தாண்டி, குறிப்பிட்ட நோக்கம், நீண்ட கால இலக்கு, ஒரு சமூகத் தொண்டு, ஒரு மதம் சார்ந்த தொண்டு, ஒரு அரசியல் கட்சி அல்லது வேறொருவரின் குடும்பம் இப்படி இலக்கு பொதுநலமாக இருக்குமானால், நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும்.
A – for Accomplishment
இறுதியாக நாம் அனைவரும் நம் வாழ்வில் ஏதோ ஒன்றை சாதிக்க வேண்டும் என்ற உணர்வு தேவை. நிர்ணயித்த குறிக்கோளை அடையும்போது, வாழ்வு வளமானதாக இருக்கும். பொன், பொருள், புகழ் போன்றவற்றால் கிடைக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் தனிப்பட்ட வளர்ச்சி, மற்றும் உறவுகளால் கிடைக்கும் மகிழச்சி வாழ்க்கையை வளமாக்குவதாக ஆராய்ச்சிகள் சொல்கிறது. சாதனைகளும், நல்வாழ்வும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. பள்ளி, வேலை மற்றும் உறவுகளில் அடையும் வெற்றிகள் தற்காலிக மகிழ்ச்சியை மட்டும் தூண்டுவதில்லை. உயர்ந்த நல்வாழ்விற்கும் அடிப்படையாக இருப்பவை.
தொகுப்பு; இந்துமதி
வைரஸ் தொற்றைத் தடுக்க
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நமது உடல் சார்ந்த சுத்தம் மட்டுமின்றி, நம் சுற்றுப்புறச் சூழலையும் சுகாதாரமாகப் பராமரிப்பது அவசியம். இதற்கேற்ற சரியான வழியைக் காட்டுகிறது கிருபா கெமிக்கல்ஸ். தரமான துப்புரவு பொருட்கள், காற்று சுத்திகரிப்பு, டியோடரண்ட், உணவு மற்றும் எண்ணெய் பொருட்களை உற்பத்தி செய்வதோடு விற்பனையும் செய்து வருகிறது கிருபா கெமிக்கல்ஸ். வீடு, அலுவலகம் மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேவையான தரைகள் மற்றும் கழிவறைகளுக்கான சுத்திகரிப்பான்கள், வாசனை சோப் எண்ணெய், செறிவூட்டப்பட்ட வாசனை திரவியங்கள், கிளீனிங் ஆசிட், பிளீச்சிங் பவுடர், வாஷிங் சோடா, நாப்தலீன் பந்துகள், இயற்கை புல்களால் ஆன விளக்குமாறு, ரோஸ்வாட்டர் எண்ணெய், கடுகு எண்ணெய், வேப்ப எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், ஓமம் நீர், பழம் இல்லாத வினிகர், நன்னாரி சர்பத் சிரப் போன்ற பொருட்களும் கிருபா கெமிக்கல்ஸிடம் கிடைக்கிறது. நமது உடல், உடைமைகள் மற்றும் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் சோப்புகள், சுத்திகரிப்பான்கள் போன்ற அதற்குரிய பொருட்களை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் கிருமித் தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.