உடலுக்கு ஊக்கம் அளிக்கும் இளநீர்!(மருத்துவம்)

Read Time:2 Minute, 43 Second
  • உடலுக்குக் குளிர்ச்சியை அளித்து ரத்தத்தில் சேர வேண்டிய தாது உப்புக்களைச் சேர்த்து உடலின் செயல்திறனைஊக்குவிக்கிறது.
  • இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள் மற்றும் ரத்த நாளங்களில் உஷ்ணம் ஆதிக்கம் அடையாமல் இருக்க உறுதுணையாகிறது.
  • மூல நோயாளிகள், நாட்பட்ட சீதபேதி, ரத்த பேதி, கருப்பை ரணம், குருதிப் போக்கு காரணமாக வரும் ரத்த சோகை, உற்சாகமின்மை ஆகியவற்றிற்கு இளநீர் மிகச்சிறந்த நிவாரணம் அளிக்கின்றது.
  • பேதி, மயக்கம், அசதி ஏற்படும்போது 2 டம்ளர் இளநீர் சாப்பிடலாம்.
  • நீர்க்கடுப்பு பிரச்னை ஏற்பட்டால், இரண்டு டம்ளர் இளநீர் பருகிட 1 மணி நேரத்திற்குள் சிறுநீர் தாராளமாகப் போகும்.
  • சிறுநீர்த்தாரையில் சில நேரம் புண்ணாக இருந்தால் எரிச்சல், கடுப்பு உண்டாகும். அதற்கு இளநீரில் வெந்தயம் அரை ஸ்பூன் சேர்த்து கலந்து பருகி வர,5 நாளில் அவை நீங்கும்.
  • உடம்பெல்லாம் அனல்போல் தகித்தால் இளநீர் 8 மணிக்கொரு முறை பருகிவரத் தேக அனல் தணியும்.
  • டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாைல, அம்மை நோய்கள், டிப்தீரியா, நிமோனியா, வாந்தி பேதி, வயிற்றுப்புண், மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றால் பாதிக்கப்படும்போது இளநீரைத் தாராளமாகக் குடிக்க வேண்டும்.
  • வயிற்றுப் பொறுமல், மந்தம், உணவு செரியாமை, பெருங்குடல் வீக்கம், ஈரல் கோளாறு, குடல் கோளாறுகள் என அனைத்திற்கும் இது மருந்து மற்றும் உணவும் ஆகும்.
  • காலரா நோயாளிகள் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை இளநீரில் விட்டு அருந்தி வர வேண்டும்.
  • பித்தக்கோளாறு, பித்தக்காய்ச்சல் உள்ளவர்களுக்கும் இளநீர் இயற்கையான சத்து டானிக் ஆகும்.
  • காலையில் உடல்நலத்துக்கு ஊக்கம் தரும் மருந்தாக இளநீர் அருந்துங்கள். மதியம் தாகத்தைத் தீர்த்து உடலில் சக்தியைப் புதுப்பிக்க ஓர் இளநீர் அருந்தி வாருங்கள்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post லாக்டவுன் டயட்!! (மருத்துவம்)
Next post செக்ஸ் உறவு சிறப்பாக இருக்க இரவில் ‘ஃப்ரியா இருங்க’…!!(அவ்வப்போது கிளாமர்)