தோழி சாய்ஸ்!!(மகளிர் பக்கம்)

Read Time:6 Minute, 24 Second

செல்லனி ஜுவல்லரி மார்ட்

எத்தனை கவரிங் நகை போட்டாலும் ஒற்றை வைரத்தோடு அல்லது மூக்குத்தி போதும் நம்மை பளிச் என மின்ன வைக்க. ஒரு சின்ன செயின் போதும் நம் கழுத்தை அழகாக மாற்ற. அதிலும் லேட்டஸ்ட் டிரெண்டில் நகைகள் என்றால் கேட்க வேண்டுமா..? குறைந்த பட்ஜெட்டில் அதிலும் வட இந்திய ஸ்டைல் மற்றும் நம்மூர் பாரம்பரிய ஸ்டைல் சகிதமாக செல்லனி ஜுவல்லரி மார்ட் ஏகப்பட்ட புது வரவு நகைகளை களமிறக்கியுள்ளனர். புத்தாண்டு புது வரவாக வந்திருக்கும் இவற்றில் சில வகை இங்கே.

பிரைடல் சோக்கர்கள்

பத்மாவதி, ஜோதா போன்ற வட இந்திய மகாராணிகள் ஸ்டைல். லெஹெங்கா, அனார்கலி. அகலமான நெக் டிசைன் கொண்ட பிளவுஸ், பிரைடல் புடவைகள் என அணிந்தால் கிராண்ட் லுக் கொடுக்கும்.

ஆன்டிக் பிரைடல் சோக்கர்

அன்கட் மாணிக்கக் கற்கள் மற்றும் மரகதக் கற்கள் ஒரு சேர கழுத்தை முழுக்க மறைத்தாற்போல் அணியும் வகை சோக்கர் மணப்பெண் நகை. லெஹெங்கா எனில் இந்த ஒற்றை நகையுடன் விட்டுவிடலாம். புடவை எனில் உடன் ஒரு நீண்ட செயின் தேவைப்பட்டால் மட்டும் போட்டுக்கொள்ளலாம். உடன் மேட்சிங்காக தோடு எடை: 246 கிராம்

மயில் சோக்கர்

நகை உடை என்றாலே இந்த மயில் தோகை டிசைன் எக்காலத்திலும் தவிர்க்க முடியாத ஒரு வகை. தங்கத்தால் சாட்டின் மேட் லுக்கில் செதுக்கப்பட்ட  நெக்லெஸ் அதில் தோகை விரித்த மயில் அதற்கு மேட்சிங்காக மயில் தோடு. நீல அல்லது சிவப்பு அல்லது தங்க நிற அனார்கலி, லெஹெங்கா, பட்டுப்புடவை என அணியலாம்.
எடை: 268 கிராம்

தான்சனைற்று தோடு

நீலக்கல்லுக்கு பதிலாக பயன்படுத்தப்படும் விலை மதிப்பான தான்சனைற்று கற்கள், மாணிக்கம், முத்து உள்ளிட்ட கலவையாக ஜதாவு போல்கி லாங் தோடு. இண்டோ மேக்ஸி, அனார்கலி, மஸ்தாணி போன்ற உடைகளுடன் அணிந்தால் அழகு. இவை தவிர்த்து அனைத்து இந்திய உடைகளுடனும் அணியலாம் வகை கிராண்ட் தோடு.

ஜதாவு நகை செட்

சற்றே நீளமான அன்கட் பிரைடல் வைர ஜதாவு போல்கி நெக்லெஸ். ரஷ்ய மரகதம் மற்றும் தென்கடல் முத்துக்கள் இணைந்த பிரைடல் வைர நெக்லெஸ் அதனுடன் இணைந்த தோடு. பச்சை , வெள்ளை வகையறாக்கள் இணைந்த எந்த உடைக்கும் மேட்ச் செய்யலாம். சிவப்பு, நீலம் என கொஞ்சம் எதிர் நிற மேட்சிங்கும் செய்யலாம். எடை: 266 கிராம்

மாட்டல் ஜிமிக்கிகள்

ஐந்து ஆன்டிக் ஜிமிக்கிகள், ஒன்று மாணிக்கங்கள் அடங்கிய ஜிமிக்கி சகிதமாக ஜதாவு போல்கி சாந்த்பலிஸ்(மாட்டல்). மணப்பெண்ணின் உடையே கிராண்ட் எனில் காதில் மட்டும் இதை அணிந்து சகிதமாக கிராண்ட் லுக் கொடுக்கலாம்.

ஆன்டிக் வளையல்கள்

பட்டுச் சேலை மட்டுமின்றி எதற்கும் மேட்ச் செய்யும் வகை காப்பு பாணி ஆன்டிக் பார்ட்டி வேர் வளையல்கள். எடை : 123 கிராம்

யாழி ஜடை

கோவில்களில் மட்டுமே காணப்படும் யாழி சிலைகளை டிசைன்களாக உருவாக்கி அதில் இணைந்த மகால‌ஷ்மி சகிதமாக உருவாக்கப்பட்ட டெம்பிள் ஜுவல்லரி ஜடை. முடிவில் கிளிகள் அடங்கிய ஜிமிக்கி முறையே திருமணத்திற்கு வேறு எதுவும் தலை அலங்காரம் வேண்டாம் என்னும் அளவுக்கு கிராண்ட் கிளாசிக் ஜடை. எடை: 342 கிராம்

டெம்பிள் பிரைடல் நெக்லெஸ்

ராயல் திருமணக்காட்சி அப்படியே செதுக்கப்பட்ட டெம்பிள் நகை செட். இதன் அழகே தோடின் ஸ்டட்டிலும் கூட மணப்பெண் அமர்ந்திருக்கும் காட்சிதான். திருமணம் என்றில்லாமல் வீட்டின் எந்த நிகழ்வுக்கும் எந்த கிராண்ட் இந்திய உடையுடனும் அணியலாம். குறிப்பாக பட்டுச் சேலைகள் கொண்டை மல்லிகைப்பூ என அணிந்தால் சங்ககால லுக் கொடுக்கலாம். எடை: 130 கிராம்.

ஒட்டியாணம்

மகாலட்சுமிக்கு இரண்டு பக்கமும் நிற்கும் இரண்டு யாழிகள் மற்றும் தோகை மயில்கள் சகிதமாக அதில் முத்துக்கள் மற்றும் மாணிக்கங்கள் இணைந்த மணிகளாக ஒட்டியாணம். எடை: 225 கிராம்

கிளீமிங் டைமண்ட் பிரைடல் ஆரம்


மரகதக் கற்கள், மாணிக்கங்கள், மேலும் தென்கடல் முத்துகளுடன் இணைந்த வைர ஹாரம். அதற்கு மேட்சிங்காக தோடு என நேர்த்தியாக உருவாக்கப்பட்ட பிரைடல் நெக்லெஸ். திருமணம், வரவேற்பு என இரண்டு நிகழ்வுக்கும் அணியலாம்.

டேஸ்லிங் டைமண்ட் நெக்லெஸ் செட்

சோக்கர் வைர நெக்லெஸ். மரகதக் கற்கள் , வைரங்கள் மற்றும் முத்துக்களாக இணைந்த நெக்லெஸ் அதற்கு மேட்சிங்கோடு. ரிசெப்ஷன் உடைகளுடன் மேட்ச் செய்யலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வியக்க வைக்கும் முன்னோர் உணவுப்பழக்கம்!(மருத்துவம்)
Next post ஹேய்! கட்டம் போட்ட சட்டை !! (மகளிர் பக்கம்)