பூச்சிகளை மாயமாக்கும் பெருங்காயம்!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 4 Second

*செடிகளைச் சுற்றி ஆழமாகக் குழி வெட்டி, வீடு பெருக்கும்போது சேரும் குப்பைகளை, முக்கியமாக சிறு பேப்பர் துண்டுகள், காய்கறித் தோல்கள், காலாவதியான வைட்டமின் மாத்திரைகள், டானிக் போன்றவற்றை இந்தக் குழிகளில் நிரப்பி மண்ணைப்போட்டு மூடிவிட்டால் அவை மக்கி சிறந்த உரமாகிவிடும்.

*துளசிச்செடி நடும்போது வெங்காயத்தையும் அதன் கூடவே நட்டு வையுங்கள். துளசிச்செடி வேரை புழு அரிக்காது. செடியும் நன்கு வளரும்.

*அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை காய்கறிச் செடிகளுக்கு ஊற்றினால் அவை செழித்து வளரும். நிறைய காய்கறிகளும் கிடைக்கும்.

*பயன்படுத்த முடியாமல் இருக்கும் மோரையும், தயிரையும் வீணாக்க வேண்டாம். அதை கறிவேப்பிலைச் செடிக்கு ஊற்றினால் செடி செழித்து வளரும்.

*வீட்டுத்தோட்டத்தில் இருக்கும் பூந்தொட்டிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை காவியைத் திக்காகக் கரைத்து பழைய பிரஷ்ஷால் அடித்து விடவும். பூந்ெதாட்டி புதிதுபோல் பளபளக்கும். அதிலிருக்கும் செடிகளும் பார்க்க அழகா இருக்கும்.

*முட்டையை வேக வைத்தபின் அந்த நீரை கீழே கொட்டாமல் நன்கு ஆறிய பின் செடியின் வேர்களுக்கு ஊற்றினால் ஊட்டம் கிடைக்கும்.

*முருங்கை மரத்தில் கம்பளிப்பூச்சிகள் இருந்தால் ஒருவாளித் தண்ணீரில் இரண்டு கைகள் நிறைய கல் உப்போடு சிறிது பெருங்காயத்தையும் சேர்த்துக் கலந்து வேரின் பக்கம் ஊற்றினால் பூச்சிகள் தொல்லையே இருக்காது.

*ரோஜாச்செடி அழகாக நிறைய பூக்கள் பூக்கவும், செடி செழிப்பாக வளரவும் பீட்ரூட்டின் தோலையும், வாழைப்பழத்தோலையும் வேக வைத்த உருளைக்கிழங்கின் தோலையும் உரமாக பயன்படுத்தலாம். முட்டைத் தோலையும் போடலாம்.

*தோட்டத்தில் எறும்புப்புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத்தூளை தூவி விடுங்கள்.

*புடலங்காய் கொடிக்கு பந்தல் போடும்போது இரண்டு மீட்டராவது உயரம் இருக்க வேண்டும்.

*அவரைக்கொடி பூக்கள் வராமல் இலை மண்டி விட்டால் இலைகளை உருவினால், பூக்கத்துவங்கி காய்கள் எளிதாக வரும்.

*வெயில் காலத்தில் மிக அதிகாலையில் செடிகளுக்கு தண்ணீர் விடவேண்டும். மாலையிலும் நன்றாக வெயில் தாழ்ந்த பின்னரே நீர் விட வேண்டும். இதனால் நீண்ட நேரம் மண்ணில் ஈரப்பதம் இருக்கும்.

*கோடையில் செடி, கொடி மரத்திற்கு தண்ணீரை வேருக்கு மட்டுமில்லாமல், இலை, கிளையின் மீது பீய்ச்சி அடித்தால் பச்சை பசேல் என்று இருக்கும்.

*செடித் தொட்டிகளில் தண்ணீர் ஊற்றியபின் பாலிதீன் பேப்பரை சற்று இடைவெளி விட்டு பரத்தி ஒரு கல்லை வெயிட்போல் வைத்துவிட்டால் தொட்டியில் ஈரப்பதம் எப்போதும் இருக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post சிறு தொழில் – ஆன்லைனில் ஆடைகள் விற்கலாம் !!(மகளிர் பக்கம்)
Next post தீப்புண்களை ஆற்றும் கரும்பு!! (மருத்துவம்)