ஹேர் கலர்!! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 13 Second

இன்றைய ஆண், பெண் இருவரின் முக்கியத் தேவைகளில் ஒன்று ஹேர் கலர். நான் மேக்கப் எல்லாம் பயன்படுத்த மாட்டேன் என்று சொல்பவர்கள் கூட தங்களின் தலைமுடி மட்டும் கருப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்கான பல சிரத்தை எடுக்கவும் தயங்குவதில்லை. அதிலும் முன்பெல்லாம் முப்பத்தைந்து வயதுக்கு மேல்தான் வெள்ளை முடி ஒன்றிரண்டாக எட்டிப் பார்க்கும். இப்போது 16, 17 வயதிலேயே இளநரை பிரச்னை ஆரம்பித்து விடுகிறது.

27க்கு மேல் பாதி நரைத்து சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் இருக்கிறார்கள். இந்த அளவுக்கு நம் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் மாறிக் கிடக்கின்றன. என்ன செய்தாலும் நரை முடியினை கருப்பாக வளர செய்ய முடியாது. ஆனால் அதை மறைக்க மட்டுமே முடியும். அதற்கான ஒரே தீர்வு ஹேர் கலர் மற்றும் ஹேர் டைதான். மார்க்ெகட்டில் பலவிதமான ஹேர் டைகள் கிடைக்கிறது. இதனை நாம் உண்மையில் சரியான முறையில் தான் பயன்படுத்துகிறோமா? எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பற்றி முழுமையாக விளக்குகிறார் அரோமா தெரபிஸ்ட் கீதா அஷோக்.

‘‘ஹேர் கலர்கள் மொத்தம் மூன்று விதங்கள்தான். ஒன்று தற்காலிகமான ஹேர் கலர்கள், மை, ஹேர் கலர், மஸ்காரா போன்றவை. இரண்டாவது செமி பெர்மனென்ட், அதிக பட்சமாக 45 நாட்கள் வரை நீடிக்கும். கடைசியாக நிரந்தரமான ஹேர் கலர், இந்த டையினை எந்த இடத்தில் கலர் செய்து கொண்டோமோ அந்த இடத்தில் அப்படியே இருக்கும். வளரும் முடிகள் வெள்ளையாகவே வளரும். அவ்வாறு வளரும் முடிகளை மட்டும் டச் -அப் முறையில் ஹேர் கலர் செய்து கொள்ளலாம்’’ என்னும் கீதா அஷோக் இளம் வயதில் ஹேர் கலரிங் செய்வது குறித்து விபரமாக பேசினார்.

‘‘இன்று நாம் பயன்படுத்தும் தண்ணீர் முதல் ஷாம்பூ, கண்டீஷனர், உணவுப் பழக்கங்கள் என அத்தனையுமாக இணைந்து இளம் வயதில் நரை முடி பிரச்னை அதிகரிக்கத் துவங்கிவிட்டது. மேலும் ஃபேஷன் என்னும் பெயரிலும் ஹேர் கலரிங் செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பது முடியாத காரியம். ஆனால் ஹேர் கலரிங் செய்யும் போது ரசாயனம் மற்றும் செயற்கை முறையில் கலரிங் செய்வதை ஓரளவு தவிர்க்கலாம்.

இளம் நரைக்கு கூடுமானவரை மருதாணி, பீட்ரூட், கருவேப்பிலை போன்ற இயற்கையான கலரிங்கை பயன்படுத்தலாம். மிகச் சிறு வயதிலேயே ஹேர் கலரிங் செய்வதால் முடிகளின் வேர்கால்கள் சேதம் அடைந்து பொடுகு தொல்லை ஏற்படும். முடியின் இயற்கையான பளபளப்பு குறைந்து வறண்டு காணப்படும். இதனால் முடி உதிர்தல், உடைதல் என அத்தனை பிரச்னைகளும் ஏற்படும். சிலருக்கு இதன் காரணமாக ஒவ்வாமை ஏற்பட்டு முகம் மற்றும் சருமத்தில் ஒரு கருமை நிறம் படர்ந்தது போன்ற தோற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம்.

பொதுவாகவே ஹேர் கலர் செய்யும் போது அது முடியின் கியூட்டிக்கில் எனப்படும் முடிக்கற்றைகளுக்குள் சென்று நரை முடியின் வெண்மையை பிளீச் செய்து அதை கருப்பாகவோ அல்லது நாம் எந்த நிறம் பயன்படுத்துகிறோமோ அந்த நிறத்தில் முடியை மாற்றும். மீண்டும் மீண்டும் முடிகளில் கலர் செய்யும் போது கியூட்டிக்கிள்களின் இயற்கையான குணம் மாறி சேதத்தை உண்டாக்கும். அமோனியா இல்லாத ஹேர் கலரிங் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையில் உள்ளது.

இது முழுமையான சேதத்தை உண்டாக்காது. ஆனால் அமோனியாவுக்கு பதில் எத்தனோலமைன்(MEA) எனப்படும் கெமிக்கல் மூலக்கூறு இப்போதிருக்கும் ஹேர் கலர்களில் பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் அமோனியா கலப்புதான் ஹேர்கலரிங் கால அளவை நீட்டிக்கும் அதனாலேயே ஒரு காலத்தில் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு ஒருமுறை கூட ஹேர் கலர் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது.

தற்சமயம் அமோனியா ஃப்ரீ கலரிங் செய்தால், அதிகபட்சமாக 45 நாட்கள் வரை தான் கலர் தலைமுடியில் இருக்கும். MEA அமோனியா அளவிற்கு சேதத்தை உண்டாக்குவது இல்லை என்றாலும் அதுவும் ஒரு கெமிக்கல் என்பதால் அதன் வேலையை செய்யத்தான் செய்யும். அதே போல் இதில் உள்ள டி-ஹைட்ரோ டெஸ்டோஸ்டிரோன் என்னும் மூலக்கூறு முடிக்கால்களின் மேல் பகுதியில் இருக்கும் ஃபாலிக்கிள்களை சுருங்கச் செய்யும். இதனால் முடியின் வேர்களுக்கு செல்லக்கூடிய ஊட்டச்சத்துகள் தடைபட்டு முடியின் வளர்ச்சியினை பாதிக்கும். நிரந்தர ஹேர் கலரில் அமோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடும் இருக்கும். இதனால் முடி கொட்டும் பிரச்சனை, சருமத்தில் அலர்ஜி துவங்கி மலட்டுத்தன்மை வரை கூட உண்டாக்கி விடுகிறது.

இத்தனைப் பிரச்சனை இருந்தாலும் ஹேர் கலர் நம் வாழ்நாளில் பிரிக்கவே முடியாத அளவிற்கு மாறிக்கொண்டிருக்கிறது. கூடுமானவரை அதை பாதுகாப்பாக பயன்படுத்துவது நல்லது. குறிப்பாக நிமிடங்களில் ஹேர் கலர் என்னும் வாசகத்துடன் வரும் பிராண்டுகளை தவிர்க்க வேண்டும். முக்கியமாக ஹேர் கலர் ஷாம்பூ என சமீபத்தில் படை எடுத்திருக்கும் வஸ்துகளை தவிர்ப்பது நல்லது. தலையில் கலரிங் செய்த பிறகு முடிந்தவரை 30 நிமிடங்களுக்கு மேல் காத்திருந்து அதன் பின் கழுவக்கூடிய ஹேர் கலர்பிராண்டுகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அதே சமயம் இதற்கான செலவினைப் பார்க்காமல் நல்ல பிராண்டுகளை தேர்வு செய்ய வேண்டும்.

நரைமுடி என்பதை தன்னம்பிக்கையின் இடையூறான இடத்தில் வைத்து இருப்பதால் ஹேர் கலர் செய்து கொள்வது அவசிய தேவையாக இருக்கிறது. ‘என்னப்பா நரை முடி எட்டிப் பார்க்குது’ எனக் கேட்டாலே அன்றைய நாள் முழுக்க அப்செட்டாகி விடுவோம். ஹேர் கலரிங் நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றாக மாறியிருக்கிறது. கூடுமானவரை ஒருமுறை செயற்கை கலரிங் செய்தால் மறுமுறை மருதாணி, பீட்ரூட் போன்ற ஆர்கானிக் முறைகளைப் பயன்படுத்தி கலர் செய்து கொள்வது நல்லது.

அதே போல் எந்த கலர்களைப் பயன்படுத்தும் போதும் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் பேட்ச் சோதனையை செய்துவிட்டு பயன்படுத்துங்கள். முதல் முறை ஹேர் கலர் செய்வதாக இருந்தால், ஸ்டிராண்ட் (Strand test) டெஸ்ட் செய்வதும் அவசியம். ஒரு சிறு பகுதி முடிகளில் மட்டும் கலர் செய்து ஓரிரு நாட்கள் காத்திருந்து ஏதேனும் பிரச்னை இல்லையெனில் ஹேர் கலர் செய்து கொள்ளும் சோதனை. கலரிங் செய்து கொள்வதற்கு முன் எண்ணெய் மசாஜ் செய்து தலையை அலசிக்கொள்ளலாம்.

முடி வறண்டு போகாமல் தடுக்க இந்த எண்ணை மசாஜ் பயன்படும். ஹேர் கலர் செய்து கொண்டபின் குறைந்தது ஒரு லிட்டர் தண்ணீர் அருந்துவதன் மூலம் உடனடியாக உடலில் சேர்ந்த கெமிக்கல் மூலக்கூறுகள் சிறுநீரில் வெளியேற்றப்படும்.

பீட்ரூட்டை தண்ணீரில்லாமல் அரைத்து சாறெடுத்து, ஸ்வீட் பீடாக்களில் பயன்படுத்தப்படும் கத்தா பவுடர் கலந்து பயன்படுத்தும் போது முடிகளை பாதிக்காத இயற்கையான பர்கண்டி நிறம் கிடைக்கும். குறிப்பாக இளம் வயதினருக்கு எடுத்தவுடன் ஹேர் கலர் பயன்படுத்தாமல் உணவுப் பொருட்கள் அடிப்படையில் ஹேர் கலர் தயாரித்து அதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவையான கொத்தவரை! (மகளிர் பக்கம்)
Next post மாடலிங் செய்ய அழகு திறமை 50/50 தேவை! (மகளிர் பக்கம்)