வயதானவர்களுக்கான சிறப்பு பராமரிப்பு!! (மருத்துவம்)
வயதானவர்களுக்கான இல்லங்கள் பல இருந்தாலும், அவர்கள் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக தங்கள் ரிடைர்யர்மெண்ட் காலத்தை கழிக்க அசிஸ்டட் லிவிங் ஹோம்ஸ் எனப்படும் பராமரிப்பு இல்லங்கள் இல்லை. இன்று குழந்தைகள் வளர்ந்து தங்களுக்கான வாழ்க்கையைத் தேடி வெளிநாடுகளுக்கும் வெளியூர்களுக்கும் பயணிக்கின்றனர். பெற்றோர்களோ தாங்கள் வாழ்ந்த ஊரை விட்டு வர மனமில்லாமல் குழந்தைகளுடன் செல்ல மறுக்கின்றனர். அவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் அதுல்யா அசிஸ்டட் லிவிங் (Athulya Assisted Living). இவை மருத்துவமனைகளோ/ முதியோர் இல்லங்களோ கிடையாது. அவற்றிலிருந்து முற்றிலுமாக வேறுபட்ட எல்டர்லி-ஃப்ரெண்ட்லி (Elderly-Friendly) இல்லங்களாகும்.
அதுல்யா பராமரிப்பு இல்லங்களில் பொதுவாக வெளிநாடுகளில், வெளியூர்களில் தங்கியிருப்பவர்களின் பெற்றோர்களே வசிக்கின்றனர். அன்றாடம் தங்களை பராமரித்துக்கொள்வதை தாண்டி தங்கள் வீடுகளையும் பராமரிப்பது இவர்களுக்கு சவாலாக இருக்கிறது. உடல்நலக் குறைவுடன் இருக்கும் பெரியவர்கள், உடல்நிலை சரியாகும் வரை இங்கு தங்கி வீடுகளுக்கு திரும்புகின்றனர். சிலர் அதுல்யாவையே தங்கள் சொந்த இல்லமாக ஏற்று இங்கேயே வசித்தும் விடுகின்றனர்.
அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் அன்றாட வேலைகளை செய்யவே உதவிகள் தேவைப்படும். தங்கள் குடும்பத்தினரையே மறந்து, யாரையும் அடையாளம் காணமுடியாத பயத்தினால் அதீத கோபம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். அவர்களுக்கான சிறப்பு பராமரிப்புடன், ஆர்ட் தெரபி, பொழுதுப்போக்கு நிகழ்ச்சிகள் மூலம் அவர்களை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் பராமரிக்கிறார்கள்.
அதுல்யா அசிஸ்டட் லிவிங்கின் மார்க்கெட்டிங் இயக்குனர் கிருஷ்ண காவ்யா ‘ஒவ்ெவாருவரின் உடல் நிலையினை பரிசோதித்து தகுந்த டயட்டினை ஊட்டச்சத்து நிபுணர் உணவுகளை பரிந்துரைப்பார். 24 மணி நேரமும் இவர்களின் ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ள செவிலியர்கள் உள்ளனர்.எங்கள் குடியிருப்புகள் ஒவ்வொன்றும் குடியிருப்பாளர்களின் வசதிக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி இருவரும் ஒரே அறையில் வசிக்கலாம். குடியிருப்புகளில் இருக்கும் படுக்கைகள், இருக்கைகள் மற்றும் மரச்சாமான்கள் அனைத்துமே வயதானவர்கள் எளிதில் பயன்படுத்தக் கூடிய பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டிருக்கும்.
குளியலறையில் வழுக்காமல் இருக்க திடமான ஃப்ளோரிங், மெதுவாக கைப்பிடித்து நடக்க கைப்பிடி கம்பிகள், பொழுதுபோக்கிற்கு கம்யூனிட்டி ஏரியாவில் போர்ட் கேம்ஸ், புத்தகங்கள், 24/7 இன்டர்நெட் வசதி, யோகா, இசை தெரபி, வாக்கிங் அசிஸ்டன்ஸ் என வயதானவர்களுக்கான அமைதியான, மகிழ்ச்சியான சூழ்நிலையை அதுல்யா உருவாக்கி கொடுக்கிறது” என்கிறார். அதுல்யா பராமரிப்பு வீடுகள் இப்போது சென்னையின் முக்கிய பகுதிகளான அரும்பாக்கம், நீலாங்கரை, பல்லாவரம் மற்றும் பெருங்குடியில் இயங்கி வருகிறது.
Average Rating