உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:4 Minute, 10 Second

உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்உடலுறவு என்ற உன்னதமான ஒரு நிகழ்வின் போது , சில பெண்களுக்கு வலி ஏற்படும் போது அவர்களின் இல்லற வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் அபாயம் தோன்றுகிறது.உடலுறவின் போது பெண்கள் தன் பெண் உறுப்பிலே வலியை உணர்வது மருத்துவ ரீதியாக dysparunia எனப்படுகிறது.

இந்த வழியானது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. ஒன்று superficial dysparunia அதாவது புணர்வின் ஆரம்பத்திலேயே ஏற்படுகிற வலி, அடுத்தது deep dysparunia புணர்வின் உச்சத்தில் ஏற்படுகின்ற வலி.இந்த வலி ஏற்பட்டாலும் வெளியில் சொல்லிக் கொள்ள முடியாமல் தங்கள் வாழ்க்கையே நாசமாக்கி விட வேண்டிய நிலையில் இருக்கும் எம் பெண்களுக்கு சில அடிப்படை அறிவினை வழங்கவே இந்த பதிவு.

இந்த வலி ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன ?நேர்த்தியற்ற பாலியல் உறவு. அதாவது உடலுறவில் ஈடுபடும் இருவரின் பிறப்பு உறுப்புக்களிலும் உடலுறவின் போது நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஆண்களில் அவர்களின் ஆணுறுப்பு விறைப்படையும் , பெண்களிலோ அவர்களின் பெண் குறி விறைப்படைவதோடு உறுப்பின் மற்றைய பகுதிகளிலும் சில திரவங்கள் சுரக்கப்பட்டு அவளின் பெண் உறுப்பை இலகுவானதாக்கும். இந்த மாற்றங்கள் ஒரு பெண்ணின் உறுப்பிலே ஏற்படாமல் இருக்கும் போது ஆண் புணர்விலே ஈடுபட்டால் இலகு தன்மையற்ற அந்த பெண் உறுப்பிலே வலி ஏற்படும். இதற்கு முழுப் பொறுப்புமே அந்த ஆணே! அதாவது தன் துணை உடலுறவுக்குத் தயாரா என்று அறியாமலேயே அவசரப்பட்டு புணர்வில் ஈடுபடுவது அந்த பெண்ணுக்கு வலியை ஏற்படுத்தும்.இதற்காக புணர்வில் ஈடுபடும் போது ஆண்கள் தங்கள் மனைவி அதற்குத் தயாரா என்று அறிந்து கொண்டு புணர்வில் ஈடுபட வேண்டும், அப்படி தயாராகாத போது எடுத்த எடுப்பிலே புணர்வில் ஈடுபடாமல் சற்று பொறுத்து அவள் புணர்வுக்குத் தயாராகும் வரை வேறு விதமான நடவிக்கைகள் மூலம் அவளின் உணர்ச்சிகளைத் தூண்டி அவளை தயார் படுத்திய பின் புணர்வில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு புணர்ச்சிக்கு முன்பு நடை பெறுகின்ற விடயங்களே foreplay எனப்படுகிறது.இது தவிர வேறு சில காரணங்களும் புணர்வின் போது வலியை ஏற்படுத்தலாம் .அவையாவன:பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற தொற்றுக்கள்.மாதவிடாய் நிறுத்தத்தின் போது பெண் உறுப்பிலே ஏற்படுகின்ற உலர்ந்த தன்மை.உளவியல் சம்பந்தப் பட்ட பிரச்சனைகள் .பெண் சிறு நீர் வாயில் ஏற்படும் தொற்றுக்கள்.எதோ ஒரு வகையில் பாலியல் ரீதியாக துஷ் பிரயோகம் செய்யப் பட்ட பெண்களுக்கு சில வேளைகளில் பாலியல் என்பது வாழ்க்கை முழுவது வலியானதாகவே அமைந்து விடலாம். அதாவது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் உறுப்பு தன் கணவனின் புணர்தலின் போது தானாகவே எதிர்ப்பைக் காட்டலாம் அதாவது , உடலுறவுக்கு உகந்த முறையில் இசைவாகாமல் சுருங்கிய படியே இருக்கலாம். இது vaginusmus எனப்படும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முருங்கை ஓர் இயற்கை வயாகரா !! (அவ்வப்போது கிளாமர்)
Next post நலம் தரும் பேரீச்சை!! (மருத்துவம்)