ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 26 Second

‘‘உடல் பருமன், நீரிழிவு பிரச்னை, கர்ப்பபை நீர்க்கட்டி, ரத்த அழுத்தம்… இவை எல்லாம் இன்றைய தலைமுறையினர் சந்திக்கும் சாதாரண பிரச்னையாகிவிட்டது. இது லைப்ஸ்டைல் பிரச்னைகளாக முத்திரை குத்தப்பட்டாலும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளை ஒரு பட்டியலே இடலாம். ஆரம்பத்திலேயே இதனை கட்டுப்படுத்தி முற்றிலும் குணமாக்கினால் எதிர்கால வாழ்க்கையினை நாம் மிகவும் தைரியமாக எதிர்க்கொள்ளலாம்’’ என்கிறார் மெட்டால் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அர்ஜுன் அனந்த். தென்னிந்தியாவின் மிகப்பெரிய இந்த மருத்துவ ஆய்வு நிறுவனம், ‘மெட்டால் ப்ளூம்’ என்ற தொழில்நுட்பம் மூலம்

நோயாளிகளுக்கு தேவையான அனைத்து சேவைகளையும் அவர்கள் வீட்டிற்கே கொண்டு வந்துள்ளது. ‘‘கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா தொற்றால் பலர் வீட்டில் இருந்து வெளியே வரவே யோசித்தார்கள் குறிப்பாக முதியவர்கள். அவர்களுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டது தான் ‘மெட்டால் ப்ளூம்’ ஆப் (app). இதனை மற்ற ஆப்களை போல் தான் உங்களின் தொலைப்பேசியில் பதிவிறக்கம் செய்யலாம். அதன் பிறகு எங்களின் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகள் தொடர்புகொண்டு, எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்று விளக்குவார்கள்.

மாத கட்டணமாகவோ அல்லது மூன்று மாதம் ஒரு முறை… என அவர்களின் வசதிக்கு ஏற்ப கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். தேவையின்போது மட்டுமே கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம்’’ என்றவர் இதன்செயல்பாட்டினை பற்றி விவரித்தார். ‘‘இது தனிப்பட்ட, முழுமையான அறிவியல் சார்ந்த திட்டம். குறிப்பாக உடல் பருமன், நீரழிவு பிரச்னை, கர்ப்பபை நீர்க்கட்டி, ரத்த அழுத்தம்… போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கானது. இவர்கள் வாழ்நாள் முழுதும் மாத்திரைகள் சாப்பிட வேண்டும். ஆனால் எங்களின் ஆலோசனையை பின்பற்றினால், படிப்படியாக மருந்தினை குறைப்பது மட்டுமில்லாமல் பிரச்னைக்கான தீர்வினை காணலாம்.

சாப்பிடு, அசைந்திடு, மனநிலை மற்றும் தூக்கம் எங்க சேவையின் நான்கு முக்கிய தூண்கள். ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கு இவைதான் அடித்தளம். முதலில் பிரச்னை என்ன என்று இந்த ஆப்பில் குறிப்பிட வேண்டும். எங்களின் ஆய்வாளர்கள் வீட்டிலேயே வந்து அதற்குரிறிய பரிசோதனைகளை எடுப்பார்கள். பரிசோதனை ஆய்வுக்கு ஏற்ப சிகிச்சை முறைகள் விவரிக்கப்படும். இன்றைய காலக்கட்டத்தில் நம் உணவினை மறந்து துரித உணவுக்கு மாறிவிட்டோம்.

விளைவு 30 வயதிலேயே அனைத்து பிரச்னையும் சந்திக்கிறோம். முறையான சாப்பாடு, உடற்பயிற்சி, மனநிலை மற்றும் தூக்கம் இந்த நான்கு தூண்களையும் மருத்துவ ஆலோசகர்களின் அறிவுரைப் படி பின்பற்றினால் நாளடைவில் நம் உடலில் உள்ள ஒவ்வொரு பிரச்னைக்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும்’’ என்றவர் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் ஆலோசனை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.‘‘பொதுவாக மருத்துவம் சார்ந்த ஆலோசனைக்கு டாக்டரை நேரடியாகத் தான் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இந்த நோய்களுக்கு ரத்தப் பரிசோதனையே அவர்களின் மொத்த பிரச்னை என்ன என்று குறிப்பிட்டு காட்டிவிடும்.

உங்கள் செல்போனில் ஒரு பட்டனை தட்டினால் போதும்… உங்களுக்கான டாக்டர் திரையில் தோன்றி உங்களின் பிரச்னை மற்றும் அதற்கான தீர்வினை குறிப்பிடுவார். மேலும் நாங்க மருந்துகள் பரிந்துரைப்பதில்லை. அதே சமயம் அவர்கள் சாப்பிடும் மருந்தினை குறைப்பதுதான் எங்களின் நோக்கம். எங்களிடம் சிகிச்சை எடுத்துக் கொண்ட பலர் நான்கு முதல் ஏழு மாதங்களில் தாங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்தின் அளவினை குறைத்து ஆரோக்கிய வாழ்க்கை முறையினை பின்பற்றி வருகின்றனர். டாக்டர் ஆலோசனை, ரத்தப் பரிசோதனை… என அனைத்துக்கும் தனித்தனிக் கட்டணம் இல்லை.

நீங்கள் உங்க செல்போனை ரீசார்ஜ் செய்வது போல், தேவைப்படும் போது இந்த ஆப்பினை பயன்படுத்த கட்டணம் செலுத்தினால் போதும். எல்லா சேவைகளையும் பெற்றுக் கொள்ளலாம். எமர்ஜென்சி நேரத்தில் ஒரு பட்டனை தட்டினால் உடனடியாக மருத்துவர் உங்களை வீடியோ கால் மூலமாக அணுகி ஆலோசனை வழங்குவார். இந்த ஆப் தற்போது இந்தியா முழுக்க பயன்பாட்டில் உள்ளது. விரைவில் மேலைநாடுகளுக்கும் அறிமுகம் செய்யும் திட்டமுள்ளது’’ என்றார் அர்ஜுன் அனந்த்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா!! (மகளிர் பக்கம்)
Next post 40+ பெண்களுக்கு ரீவைண்ட் பட்டன் இளமையை மீட்டெடுக்கும் ரீஜெனரேடிவ் சிகிச்சை!! (மருத்துவம்)