கொரோனாவிலிருந்து மீண்டு வர உதவும் பிசியோதெரபி!! (மருத்துவம்)
கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் பிசியோதெரபி மருத்துவம் முக்கிய பங்கு வகிக்கிறது.கொரோனாவின் ஆரம்ப நிலையில் நுரையீரலில் சளி உறைய ஆரம்பித்து வெளியே வரமுடியாத நிலை உருவாவதால் உடலில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இந்த ஆரம்ப நிலையில் பிசியோதெரபி சிகிச்சை அளிப் பதன் மூலமாக உறைந்த சளியை இலகுவாக்கி வெளியேற்ற முடியும்.
இதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் அளவு சீராக இருக்கும் மற்றும் நுரையீரல் பாதிப்பு குறையும். இதனால் ஆக்ஸிஜன் சிலிண்டரின் தேவையை தவிர்க்க முடியும். இது ஒருபுறம் இருக்க பிசியோதெரபி சிகிச்சை அளிப்பதன் மூலம் உடல் சோர்வை நீக்கி உடல் இயக்கம் சீராக வைக்க முடியும். இதன் மூலம் நோயாளிகள் விரைவில் உடல் நலம் பெற்று வீடு திரும்ப முடியும்.இதனால் நோயாளிகள் மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை எடுக்கும் நாட்களை கணிசமாக குறைக்க முடியும்.
தீவிர கொரோனா அறிகுறிகளைக் கொண்ட சில நோயாளிகளுக்கு நிமோனியா போன்ற கடுமையான சுவாசப் பிரச்னைகள் ஏற்படக்கூடும். இதுபோன்ற நோயாளிகளுக்கு, நுரையீரல் சார்ந்த பிசியோதெரபி சிகிச்சை முறைகள் மூலம் பிசியோதெரபி மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
* கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு என்ன மாதிரி பயிற்சிகள்?
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஐ.சி.யு.வில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடல் ஆக்ஸிஜன் அளவை சீராக திரும்ப கொண்டு வந்து ஆக்ஸிஜன் சிலிண்டரின் தேவையிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்கு கொண்டு வருவதில் பிசியோதெரபி சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது.
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பின்பும் பிசியோதெரபி முக்கியப் பங்கு வகிக்கிறது. குணமடைந்துவரும் நோயாளிகள் எவ்வாறு அவர்களுடைய அன்றாட வாழ்க்கைக்குப் படிப்படியாகத் திரும்ப வேண்டும், இழந்த உடற்திறனைத் தகுந்த முறையில் எவ்வாறு மீட்டெடுக்க வேண்டும் என்பதைப் பற்றியும் பிசியோதெரபி மருத்துவர்கள் கற்றுக்கொடுக்கிறார்கள்.
இக்கால கட்டத்தில், ஒரு நோயாளி தனது இயல்பு நிலைக்கு திரும்புவதில் உடற்பயிற்சி முக்கிய அங்கம் வகிக்கிறது. பிசியோதெரபிமருத்துவர்கள், நோயாளியின் உடல்சோர்வு உடற்பயிற்சி செய்யத் தகுந்த திறன் அளவை அறிந்து, அதற்கேற்றாற்போல் ஒவ்வொரு நோயாளிக்கும் தகுந்தவாறு தனிப்பட்ட உடற்பயிற்சித் திட்டத்தைத் வகுத்து கொடுக்கிறார்கள்.
சில எளிய பயிற்சிகள் அவர்களை கொரோனாவிலிருந்து முழுமையாக மீட்டு இயல்பு வாழ்க்கை நிலைக்கு கொண்டு வர உதவும். அவற்றில் குதிகாலை உயர்த்துதல், உட்கார்ந்து எழுவது, மிதவேக நடைப்பயிற்சி போன்ற எளிய பயிற்சி களைக்கொண்டு உடல் திறன், தசை வலிமை, உடல் சமநிலையை மேம்படுத்தலாம்.
* பலூன் ஊதுவது
இவை தவிர, நுரையீரலை வலிமை படுத்த நாள் ஒன்றுக்கு மூன்று வேலை 5 முதல் 10 தடவை பலூன் முழுமையாக ஊதி பின்னர் காற்றை வெளியேற்றி திரும்ப ஊதுவது போன்ற பயிற்சிகளை செய்வது,பலூன் ஊதுவது மூலம் நுரையீரல் மற்றும் சுவாசம், நுரையீரல் தசைகள் மேம்படும்.
* ஸ்ட்ரா பயிற்சி
எளிமையாக செய்யக்கூடிய ஸ்ட்ரா பயிற்சி, நுரையீரலின் செயல்பாட்டையும், சுவாச தட்டுப்பாடுகளையும் போக்கக்கூடியது. இந்த பயிற்சிக்கு ஒரு ஸ்ட்ரா மற்றும் அரை டம்ளர் தண்ணீர் மட்டும் இருந்தால் போதும். மூக்கின் வழியாக காற்றை உள்ளிழுத்து, தண்ணீருக்குள் இருக்கும் ஸ்ட்ராவில் காற்றை வாய் வழியாக வெளியேற்றுங்கள். தண்ணீரில் எழும் குமிழ்கள் பெரிதாக வரும் வரை மீண்டும் மீண்டும் செய்யலாம்.
* ஸ்பைரோமீட்டர் பயிற்சி
ஸ்பைரோமீட்டர் மூலம் மேற்கொள்ளப்படும் சுவாசப் பயிற்சி நுரையீரலை மேம்படுத்தி, நிமோனியா ஏற்படுத்தும் ஆசிட் உருவாவதை கட்டுப்படுத்துகிறது. படுக்கை அல்லது நாற்காலியில் ரிலாக்ஷாக அமர்ந்து கொள்ள வேண்டும். ஸ்பைரோமீட்டரை வாயில் டைட்டாக வைத்துக்கொள்ளுங்கள்.
கோப்பைக்குள் இருந்து பந்தை, மேலே கொண்டு வர உங்களால் முடிந்த அளவு காற்றை ஊதுங்கள்.அதே போல் ஸ்பைரோமீட்டரை தலைகீழாக திருப்பி கோப்பைக்குள் இருந்து பந்தை, மேலே கொண்டு வர உங்களால் முடிந்த அளவு காற்றை உறிஞ்சி உள்ளிழுத்து பின்பு மூச்சை விடவும். அதிகபட்சமாக இதுபோன்று ஒருதடவை 10 முறைக்கு மேல் செய்ய வேண்டாம்.
சுவாச இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மூச்சு பயிற்சி செய்வது, தினமும் வெதுவெதுப்பான தண்ணீர் அருந்துவது நுரையீரல் மற்றும் தொண்டையில் உள்ள நாள்பட்ட சளியை இருமல் மூலம் வெளியேற்ற உதவுகிறது.இதன் மூலம் உடலில் ஆக்ஸிஜன் அளவை சீராக வைக்க உதவுகிறது. நுரையீரல் பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் ஆரம்ப காலத்தில் வீட்டில் உடற்பயிற்சி சாதனங்களில் வேகமாக ஓடுவதையும் சைக்கிள் மிதிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
பிசியோதெரபி மருத்துவர் ஆலோசனை பெற்று உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. இது போன்ற பயிற்சி முறைகளை கொரோனா நோய் பாதிக்காதவர்களும் மேற்கொள்வதன் மூலம் நுரையீரல் மற்றும் சுவாச பாதையை தூய்மையாகவும் வலிமையாகவும் வைத்துக் கொள்ள உதவு வதன் மூலம் கொரோனா வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
கொரோனா தொற்றின்போதோ குணமடைந்த பிறகோ தொடரும், உடல் சோர்வு, வலி மற்றும் தசை வலிமையின்மை, உடல் இயக்கத் திறன் குறைவு, அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சிரமங்கள் போன்றவை இருந்தால், ஒரு பொது அல்லது இருதய நுரையீரல் பிசியோதெரபி மருத்துவரின் தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம்.
Average Rating