எனக்குப் பிடித்தவை!2: நடிகை மற்றும் தொழிலதிபர் ஸ்ருதிகா!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 54 Second

‘‘சாப்பாடுன்னா எனக்கு என்டர்டெயின்மென்ட், சந்தோஷம்’’ என்று தனக்கு பிடித்த உணவுகளைப் பற்றி பகிர்ந்தார் நடிகை மற்றும் தொழிலதிபர் ஸ்ருதிகா. ‘‘எனக்கு கல்யாணம் ஆகும் வரை அம்மா சமையல் தான். வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் வெளியே சாப்பிட பர்மிஷன் தருவாங்க. கல்யாணம் ஆகும் வரை டீ, காபி குடிச்சதே இல்லை. கல்யாணத்திற்கு பிறகு என் உணவுப் பழக்கம் முற்றிலும் மாறிடுச்சு. காலை எழுந்தவுடன் நரசூஸ் பில்டர் காபி வேணும். இரவு நேரம்பெரும்பாலும் நானும் என் கணவரும் எங்களுக்கு பிடிச்ச ஏதாவது ஒரு உணவகத்தில் சாப்பிடுவது வழக்கம். அம்மாவின் சமையலை பின்பற்ற நினைப்பேன்… இவர் சாப்பிட போலாமான்னு கேட்டதும் கிளம்பிடுவேன்.

ஒவ்வொரு உணவகத்திலும் சில உணவு பிரமாதமா இருக்கும். சென்னை கிரவுன் பிளாசா, தக்ஷின் தென்னிந்திய உணவகத்தில் நண்டு புட்டு பிரமாதமா இருக்கும். சைனீஸ்னா கோல்டன் டிராகன். சாங்க் ஆப் டிராகன்னு சிக்கனை குடை மிளகாயுடன் வறுத்து தருவாங்க. ஐஸ்கிரீம்னா மூவ் அண்ட் பிக், சுடச்சுடச் பெல்ஜியம் வாஃபிலில் தேன் ஊற்றி ஐஸ்கிரீமோடு தருவாங்க. பெஷாரியில் வட இந்திய உணவுகள் ஃபேமஸ். மலாய் கபாப், பிஷ் டிக்கா.

இது தவிர இன்ஸ்டாவில் உணவகம் பற்றி குறிப்பு வந்தால், உடனே அங்கே போய் சாப்பிட்டு பார்ப்போம். அம்மா சாப்பாட்டு விஷயத்தில் ஸ்ட்ரிக்ட் என்பதால் கல்யாணத்திற்குப் பிறகு தான் பல உணவுகளை சுவைக்க ஆரம்பித்தேன். என் கணவருக்கு நல்ல உணவுகளை தேடிப் போய் சாப்பிடும் பழக்கமுண்டு. நானும் அவருடன் சேர்ந்து பழகிட்டேன்’’ என்றவர் வெளிநாட்டு உணவுகள் பற்றியும் குறிப்பிட்டார்.

‘‘வெளிநாட்டுக்கு போறவங்க அங்கு என்ன பார்க்கலாம்ன்னு தான் பார்ப்பாங்க. நாங்க என்ன உணவு ஃபேமஸ்ன்னு பட்டியலிடுவோம். அமெரிக்கா போன போது கிரிஸ்பி கிரீம் உணவகத்தில் மாலை நாலு மணிக்கு சுடச்சுட பன்னில் சுகர் சிரப் சேர்த்து தருவாங்க. வாயில் போட்டதும் அப்படியே கரைஞ்சிடும். ஆம்ஸ்டர்டாமில், ராட்டடேம் இடத்தில் மீன் பேட்டர் ஃபிரை ஃபேமஸ். நதிக்கரை ஓரமா இருக்கும் எல்லா கடையிலும் இதுதான் இருக்கும். அப்படியே மீனை பிடிச்சு சுத்தம் செய்து, பொன்னிறமா வறுத்து தருவாங்க. என்னதான் வெளிநாட்டு உணவினை ரசித்தாலும். எங்க வீட்டு சமையல் அம்மா செய்யும் தாளிச்ச தயிர் சாதம் தக்காளி ஊறுகாய்க்கு நான் அடிமை. என் பாட்டி அந்த ஊறுகாய் செய்வாங்க. எனக்கு பிடிக்கும்ன்னு இவங்களுக்கு சொல்லிக் கொடுத்தாங்க. அது இரண்டு இருந்தா போதும், நான் என் வாழ்க்கை முழுக்க அதை சாப்பிட்டே வாழ்ந்திடுவேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உங்கள் துணை உச்ச கட்டத்திற்கு தயாரா ? (அவ்வப்போது கிளாமர்)
Next post மதுரையை கலக்கும் ஹோட்டல் ஜல்லிக்கட்டு! (மகளிர் பக்கம்)